Showing posts with label Education. Show all posts



இலங்கையில் தற்போது வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளது மீள் திருத்த விண்ணப்ப திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில், குறித்த பெறுபேறுகள் தொடர்பில் சந்தேகம் இருப்பின் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த விண்ணப்பத்தை பாடசாலை அதிபர் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.

பாடசாலையின் ஆசிரியர் ஊடாக வகுப்பு ரீதியான தேர்ச்சி அறிக்கைகளுடன் விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.




( ஏ.ஆர்.அபி அஹமட் றபீக் )
நிந்தவூரின் வரலாற்றில் சுமார் 31 வருடங்களின் பின்னர் இலங்கை கல்வி நிருவாக சேவைகள் போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தி, பதவியுயர்வு பெற்றுச் செல்லும் நிந்தவூர் கமுஃஅல்- மினா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் அல்ஹாஜ்.யூ.எல்.எம்.சாஜித்தைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு இன்று(20) நிந்தவூர் அல்- மினா வித்தியாலயத்தில் சிறப்பாய் இடம் பெற்றது.


வித்தியாலய அதிபர் எம்.எல்.எம்.நிஹார்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அல்ஹாஜ்.யூ.எல்.எம்.சாஜித் கருத்து வெளியிடுகையில்:- 'நான் ஒரு உடற்கல்வி ஆசிரியனாக இருந்திட்ட போதிலும், 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களைக் கற்பித்து, அதிகமாணவர்களை சித்தியடையச் செய்த ஆசிரியனாகக் காணப்பட்டேன். கற்பிப்பதில் எனக்கு எப்போதுமே அதிக பிரியம்! நான் தொடர்ந்தும் மாணவர்களுக்குக் கற்பித்ததன் காரணத்தால்தான் இப்போட்டிப் பரீட்சையில் சித்தியடைய முடிந்தது. நான் கற்பித்த காலத்தில் பல இன்னல்களுக்கும், சவால்களுக்கும், குழிபறிப்புகளுக்கும் மத்தியில் தான் அல்லாஹ்வின் உதவியினாலும், எனது தாய், தகப்பனின் பிரார்த்தனைகளினாலும் சித்தியடைந்துள்ளேன். மாணவர்களாகிய நீங்களும் சிறப்பாகக் கற்கவேண்டும். எதிர்காலத்தில் கல்வித்துறையில் மேலும் பல படிகளைத் தாண்ட வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். இன்ஷாஅல்லாஹ் நான் உயர்பதவி வகிக்கின்ற காலத்தில் என்னுடைய நண்பர்கள், எதிரிகள், உறவினர்கள், குழிதோண்டியோர் எவர் எனது உதவியை நாடினாலும் அதனை மனங்கோணாது செய்து கொடுக்கச் சித்தமாக இருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.


வீரன் சாஜித்தும், அவர் பாரியாரும் அதிபர், ஆசிரியர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர், மாணவ மாணவிகள் மலர்தூவி வரவேற்று, பகல் விருந்தும் வழங்கி மகிழ்ந்தனர்.

இறுதியில் சாதனை நாயகன் சாஜித் அதிபர் ஆசிரியர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.










சிம்ஸ் கேம்பஸ் கல்விநிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம் முஸ்தபாவின் முயறசியில் அம்பாறை மாவட்ட த்தில் உள்ள உயர்கல்வியை முடித்த மாணவர்களுக்காக உலக கனடிய பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் இலவசமாக கணனி , வர்த்தக துறையில் தொழில் சார்ந்த பாடநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றுமாலை சிம்ஸ் கேம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம் முஸ்தபா தலைமையில் சாய்ந்தமருது பேர்ல்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் உலக கனடிய பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி எஸ்தர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.மேலும் இந்நிகழ்வில் உலக கனடிய பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் கிழக்கு மாகாண சிரேஷ்ட திட்டமிடல் பணிப்பாளர் மயில்வாகனம் யோகேஸ்வரன் ,அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஜேசு சகாயம் , திருமலை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.சரவணபவன், நிகழ்சசி திட்டமிடல் பணிப்பாளர் திரு.முகம்மது இர்பான் சிம்ஸ் கேம்பஸ் பிராந்திய நிலைய முகாமையாளர் சப்ரியா அஸீஸ் , விரிவுரையாளர்கள் ,உலக கனடிய பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் 300 க்கும் அதிகமான மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .







MARI themes

Powered by Blogger.