Showing posts with label Main News. Show all posts



நினைவுகளை அழிக்ககூடிய மற்றும் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய திறனை மனிதர்களுக்கு வழங்ககூடிய மைக்ரோ CHIPனை அமெரிக்காவின் கெர்னல் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

மனிதனின் மூளையில் இந்த CHIP னை பொருத்துவதன் மூலம் மனிதனின் செயல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்று கெர்னல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனால் இன்னும் 15 ஆண்டுக்குள் அனைவரும் சூப்பர் ஹீரோக்கள் போல் செயல்படலாம் என கெர்னல் நிறுவனத்தின் தலைவர் பிரையன் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி இந்த CHIPஐ சாதாரண மக்களும் வாங்கும் வகையில் குறைந்த விலையில் விற்கவுள்ளதாகவும் பிரையன் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.


இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி கிரிக்கெட்டில் மட்டுமின்றி விளம்பரங்களிலும் தூள் கிளப்பி வருகிறார்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது வெற்றி மேல் வெற்றி குவித்து வருகிறது.

கோஹ்லியின் ஆக்ரோசமான ஆட்டமும், அவரது துடுப்பாட்டத்தினாலும் அவருக்கு விளம்பரங்கள் அடுத்தடுத்து வந்தபடி உள்ளன.

இந்நிலையில் விராட் கோஹ்லி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் விளம்பரம் தொடர்பாக புரோமோஷன் போட வேண்டும் எனில் ஒரு பதிவேற்றத்திற்கு 3.2 கோடி ரூபாய் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது கால்பந்து உலகின் ஜாம்பவான கிறிஸ்டியன் ரொனால்டோவுக்கு இன்ஸ்டாகிராமில் போடப்படும் ஒவ்வொரு பதிவேற்றத்திற்கு வழங்கப்படும் சம்பளம் என்று கூறப்படுகிறது.

அதிகபட்சமாக பிரபல காமெடி நடிகரான Kevin Hart தன்னுடைய இன்ஸ்டாகிராமில் விளம்பரத்திற்காக 6.4 கோடிரூபாய் வாங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோஹ்லியை இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இலங்கை அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.

இத்தொடருக்கு 16 வீரர்களின் பட்டியலை இந்திய அணி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சகல துறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட அணியில் அவர் இடம்பெற்றிருந்தாலும், அதிக போட்டிகளில் பங்கேற்றிருப்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் சமீபகாலமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்த அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு இத்தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி


விராட் கோஹ்லி (தலைவர்)
கே.எல். ராகுல்
முரளி விஜய்
ஷிகர் தவான்
சட்டீஸ்வர் புஜாரா
அஜிங்கியா ரஹானே (துணைத் தலைவர்)
ரோகித் ஷர்மா
விருத்திமான் சாஹா
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவீந்திர ஜடேஜா
குல்தீப் யாதவ்
முகமது ஷமி
உமேஷ் யாதவ்
புவனேஷ்வர் குமார்
இஷாந்த் ஷர்மா



இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16ம் திகதி தொடங்கவுள்ள நிலையில் இன்று இரு அணிகளும் மோதும் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது.

இலங்கை அணியை, சஞ்சு சாம்சன் தலைமையிலான 3-ம் நிலை வீரர்களை உள்ளடக்கிய வாரியத் தலைவர் அணி எதிர்கொள்கிறது.

கொல்கத்தாவில் இன்று தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் முனைப்புடன் செயல்பட இலங்கை வீரர்கள் தயாராக உள்ளனர்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய மண்ணில் இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய அரபு எமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் 2-0 என்ற கணக்கில் வென்றதால் அதே உத்வேகத்துடன் செயல்படவுள்ளது.

இருப்பினும் ஆல் ரவுண்டர் ஏஞ்சலா மேத்யூஸ், மூத்த வீரர் ரங்கன ஹேரத் தவிர மற்ற வீரர்கள் இந்திய மண்ணின் முதன்முறையாக டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளனர்.

இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில், ரங்கன ஹேரத் அனுபவம் வாய்ந்த வீரர், அவர்களுக்கு இது பயிற்சி ஆட்டமாக இருந்தாலும் மிகச்சிறந்த வீரரை எதிர்கொள்ள சிறப்பான வாய்ப்பாக எங்களுக்கு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.



லெபனானிலுள்ள சவுதியர்களுக்கு அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சவுதி அரசாங்கம் அறிவித்தல் விடுத்தள்ளது.

லெபனானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் பதவியிலிந்து இராஜினாமா செய்ததன் பின்னர் சவுதி அரேபியாவுக்குள் பிரவேசித்த லெபனான் பிரதமர் ஹரிரி கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேர் லெபனானில் தொழில்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



பெண் ஒருவருடன் தொலைபேசியில் காதல் தொடர்பை வளர்த்துக் கொண்ட நபர் ஒருவர் குறித்த பெண்னை கராபிடிய நகரத்திற்கு வரவழைத்து அவரின் கழுத்திலிருந்த தங்க மாலையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

தவளம பகுதியில் வசித்து வரும் 43 வயதுடைய குறித்த பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காலி நகரத்திற்கு பஸ்ஸில் சென்றுள்ளார்.

குறித்த பஸ் பயணத்தில் அறிமுகமான நபர் அவரது தொலைபேசி எண்ணை துண்டுத் தாளில் எழுதி கொடுத்துள்ளார். அந்த பெண் வாங்க மறுக்க தொலை பேசி எண்ணை எழுதிய துண்டுத் தாளை அவரது மடியில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர் குறித்த பெண் வீட்டிற்கு சென்று துண்டுத் தாளில் இருந்த எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தி பேசியுள்ளார். அதன் பின்னர் இருவருக்கும் நட்பு பூத்துள்ளது.

இந் நிலையில் குறித்த பெண் காலி கராபிடிய போதனா வைத்தியசாலைக்கு குறித்த தொலைபேசி நண்பருக்கும் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.


கராபிடிய வைத்தியசாலையில் வைத்து இருவரும் சந்தித்து கொண்டுள்ளனர்.அப்போது குறித்த பெண்ணின் கழுத்தில் 2 பவுண் பெறுமதியான தங்க மாலை இருந்துள்ளது.

அங்கு அந்த நபர் குறித்த பெண்ணிடம் “உன் கழுத்தில் தொங்கும் தங்க மாலைக்கு பெண்டன் ஒன்றை வாங்கி வந்துள்ளேன் அதை என் கைகளாலேயே உன் கழுத்தில் போட்டு விட ஆசைப் படுகிறேன் அதனால் உன் கழுத்திலுள்ள மாலையை கழட்டித் தா” என கூறியுள்ளார்.

தனது காதலர் ஆசையாக தனக்கு பெண்டன் வாங்கி வந்துள்ளார் என நினைத்து கழுத்திலிருந்த தங்க மாலையை கழட்டி கொடுத்துள்ளார்.

மாலையை கழட்டி கையில் கொடுக்கவும் குறித்த நபர் தங்க மாலையினுள் பெண்டனை கோர்த்து தன் வசம் வைத்துக் கொண்டு “வைத்தியசாலையை விட்டு போகும் போது அழகான இடத்தில் வைத்து உன் கழுத்தில் போட்டு விடுகிறேன் அது வரை இந்த மாலை என்னிடம் இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

பிறகு குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரை பார்க்க செல்ல வேண்டும் என கூறி இருவரும் செல்ல முயற்சிக்கும் போது அது பார்வையாளர் நேரமாக இருந்தமையால் அனுமதி அட்டையின்றி உள்ளே செல்ல முடியாது என கூறி தனக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தெரியும் என கூறி தான் மட்டும் உள்ளே சென்று வருவதாக கூறி பெண்னை விட்டுச் சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் குறித்த நபர் வராததனால் அங்கும் இங்குமாக தேடியுள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த பெண் வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






குழந்தை பிரசவிக்க வாய்ப்பில்லாத பெண்களிடம் கடவுள் துணையுடன் பெற்று கொடுக்கப்படும் மருந்துகள் ஊடாக கருவுறலாம் என கூறி இடம்பெற்றுவந்த பாரிய மோசடி மாத்தறை - நாதுல பிரதேசத்தில் தெரியவந்துள்ளது.

பெண்ணொருவரினால் மேற்கொண்டு வந்த இந்த மோசடியை ஹிரு சி.ஐ.ஏ. குழு அம்பலப்பத்தியுள்ளது.

குறித்த பெண்ணிடம் சிகிச்சைப்பெற்று வந்த பல பெண்கள் பாரிய வயிற்று வலிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் பாதிப்படைந்த பெண்கள் பல முறை குறித்த இடத்திற்கு வந்து தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்தும் எதிர்ப்பலைகள் எழுந்த நிலையில், சிகிச்சையளிக்கப்படும் நிலையத்தின் நுழைவாயில் மூடப்பட்டதோடு, முன்னர் சிகிச்சைப்பெற்று வந்த பெண்களுக்கு மாத்திரம் பணம் அறவிடப்பட்டு இரகசியமாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.


இந்நிலையில் இது குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதனை தொடர்ந்து, மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள், ஹிரு சி.ஐ.ஏ குழுவின் ஊடாக குறித்த இடத்தை சுற்றிவளைத்தனர்.

பின்னர் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், கடந்த காலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் அங்கு சிகிச்சைப்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது அங்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகள் தொடர்பில் குறித்த பெண்ணிடம் வினவிய போது, தனக்கு அவை பற்றி எதுவும் தெரியாது என கூறியமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பின்னர் குறித்த பெண்ணும் அவருக்கு உதவிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.



எரிபொருளை விநியோகிக்கும் பணிகளை இன்று பிற்பகலுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவர முடியும் என கனிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

15 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகளவான எரிபொருள் தற்போதையளவில் நாடுமுழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், கொழும்பு மாவட்டத்தின் பெரும்பாலான எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைத்துள்ளதாகவும், வெளி மாவட்டங்களின் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என்றும் எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பெற்றோல் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவின் அறிக்கை அடுத்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கை கையளிக்கப்பட உள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்





-நிலாம்டீன் செய்தி -

ஊடகவியலாளரும் இணையதளமொன்றின் செய்தி ஆசிரியர்களில் ஒருவருமான பஷீர் சப்னி அகமட் நேற்று முந்தினம் இரவு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தமீம் ஆப்தீன் என்பவரால் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் காரியாலயத்தில் வைத்து தாக்கப்பட்டது குறித்து
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அவ்ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸ் நேரடியாகச் சென்று செய்த முறைப்பாட்டை அடுத்து நிலையப் பொறுப்பதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.

குறித்த பிரச்சனை தொடர்பில் நேரடியாக விசாரணை மேற்கொண்ட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் குமார ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து தக்கப்பட்ட ஊடகவியலாளரின் அனுமதியுடன் அந்த இடத்திலேயே தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக்கோரியதன் பின்னர் இதன் பிறகு ஊடக வியலாளர்களைத் தக்குதல் அச்சுறுத்தல் போன்றவை செய்யக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து சமாதானப்படுத்தி முறைப்பாட்டை பதிவு செய்து அனுப்பிவைத்தார்.


குறித்த நபரால் தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் சப்னி அஹமட் குறிப்பிடுகையில் எந்த குற்றமும் செய்யாத நிலையில் மற்றவர்களின் சேவைகளைப் பற்றி தன்னால் பதிவிடப்படும் கருத்துக்களில் வெறுப்படைந்ததன் காரணமாகவே இவர் என்னைத் தாக்கினார்.

ஆனால் இன்றய அரசியலில் சிறந்த இளைஞர்கள் முன்வரவேண்டும் மீண்டும் மீண்டும் அடிபுடி சண்டை போன்ற காடைத்தனமான அரசியல் கலாச்சாரத்தை ஒருபோதும் இளைஞர்கள் ஆதரிக்கக் கூடாது.

அரசியல் நாகரிகம் தெரியாத சரியான முறையில் அரசியலை அறிந்திடாதவர்கள் எல்லாம் அரசியலுக்குள் நுளைந்ததன் பின்னர்தான் அரசியல் சாக்கடை என்ற குப்பைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

ஆனால் நாளைய தலைவர்களை உருவாக்க வேண்டிய அரசியல்வாதிகள் நாளைய இளைஞர்களை வழிகெடுக்கும் நபர்களை வளர்த்தால் எதிர்வரும் இளைஞர் சமுதாயம் கேடுகெட்டு விடுவார்கள் எனவே எந்தக்கட்சியாக இருந்தாலும் நல்லவர்கள் சமூகத்துக்கு நல்ல சேவைகள் செய்யக்கூடியவர்கள் நாளைய தலைவர்களான இளைஞர்களை வழி நடாத்தக்கூடியவர்களை அரசியல்வாதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர அடியாட்களையும் காடையர்களையும் உருவாக்கும் அரசியல்வாதிகளை தெரிவு செய்து மீண்டும் சமூக சீரளிவுக்கு இடமளிக்க கூடாது என்று தெரிவித்த இளம் ஊடகவியலாளர் சப்னி அஹமட் அப்படியான அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.



உஷ்ணமான காலநிலையைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை ஐந்து பந்து வீச்சாளர்களை தமது குழாமில் உள்ளடக்கியிருந்தது. எனினும், இந்திய அணியுடன் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை நான்கு பந்துவீச்சாளர்களைக் கொண்ட ஒரு அணியாகவே எதிர்பார்க்க முடியும் என அணித்தலைவரான தினேஷ் சந்திமால் கூறியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

“பாகிஸ்தானுக்கு எதிராக, நாம் ஆறு துடுப்பாட்ட வீரர்களுடனும் ஐந்து பந்து வீச்சாளர்களுடனும் விளையாடியிருந்தோம். அது உஷ்ணமான காலநிலையில் எமக்கு மிகவும் உதவியாக (ஐக்கிய அரபு இராச்சியத்தில்) அமைந்திருந்தது. எனினும், நான்கு பந்துவீச்சாளர்களுடன் போட்டியொன்றில் வெல்வது இலகுவான விடயமாக அமையாது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிகவும் நல்ல சில பந்துவீச்சாளர்களை அவ்வணி கொண்டுள்ளது, எனவே நாங்கள் சகலதுறை வீரர்களை மையமாகக் கொண்டு போட்டிக்கு தகுதியான அணியை தேர்வு செய்ய வேண்டியுள்ளோம். போட்டிக்கான மைதானத்தை பார்த்த பின்னர் நாம் எமது திட்டங்களை வகுக்கவுள்ளோம்“ என சந்திமால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவுடனான அண்மைய தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் (9-0 என) சொந்த மண்ணில் வைத்து தோல்வியடைந்த இலங்கை அணி, அயல்நாடு ஒன்றில் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய போதிலும் ஒரு நாள் தொடரை 5-0 என பறிகொடுத்திருந்தது.

“எம் எல்லோருக்கும் இந்தியா (டெஸ்ட்) தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது என்பது தெரியும். அத்தோடு கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் முன்னேற்றகரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றனர். நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் சிறந்த முறையில் செயற்பட்டிருந்தோம். ஒரு அணியாகவும் சிறப்பாக செயற்பட்டிருந்தோம். இந்தியாவுடனான இத்தொடரை எமது வீரர்கள் ஒரு சவாலாக எடுத்து அதில் நல்ல முடிவுகளைத் தருவார்கள் என உறுதியாக நம்புகின்றேன்“ என்று சந்திமால் கூறியிருந்தார்.

அத்தோடு இந்தியாவுடன் விளையாடுவது மிகவும் கடினமான விடயம் என்பதையும் ஒப்புக் கொண்ட சந்திமால், இலங்கையின் கடந்த கால முடிவுகளால் மனம் தளரப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

“இது எமக்கு மிகவும் சவாலான ஒரு தொடராக அமையவுள்ளது. எனினும் இங்கிருக்கும் பார்வையாளர்களினால், நாம் இங்கே விளையாட மிகவும் விரும்புகின்றோம். நான் எமது கடந்த காலத்தை பின்னோக்கி பார்க்க விரும்பவில்லை. நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக (டெஸ்ட்) தொடரில் சிறந்த பதிவைக் காட்டியிருந்தோம். தற்போது எமது வீரர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான உரிய தரத்தில் காணப்படுகின்றனர். எனவே இனி நாம் வருகின்ற இந்த சவாலை முகம் கொடுக்கத் தயராகுவோம்“ என சந்திமால் கூறியிருந்தார்.


இந்திய அணியின் நட்சத்திர சுழல் வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோரையும் எதிர்கொள்வதற்கான உத்திகளையும் திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்த சந்திமால் அவற்றை தற்போது அறியத்தரப்போவதில்லை எனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

“ஒரு அணியாக நாம் சில திட்டங்களை எங்களுக்குள்ளேயே பேசி வைத்துள்ளோம். அதனை மைதானத்தில் மாத்திரமே நாங்கள் செயற்படுத்த வேண்டும் அப்போதே அவற்றின் துணையோடு இந்தியாவுடன் போட்டியை வெற்றி கொள்ள முடியும்“ என டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்ட பின்னர் சந்திமால் பேசியிருந்தார்.

1982ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அந்நாட்டு மண்ணில் ஒரு போட்டியில் கூட இதுவரையில் வெற்றி பெறவில்லை. இதனை மாற்றுவதில் நம்பிக்கை கொண்டிருப்பதாக சந்திமால் மேலும் தெரிவித்திருந்தார்.

“இந்திய மண்ணில் இதுவரையில் நாம் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறவில்லை. எங்கள் அனைவருக்கும் அது ஒரு கனவாக காணப்படுகின்றது. இதுவே நாம் கொல்கத்தாவில் விளையாடும் முதல் போட்டியும் கூட. கொல்கத்தா ரசிகர்களின் முன்னாள் விளையாடுவது எமக்கு மகிழ்ச்சியான விடயமே. ஒரு அணியாக நாம் நல்ல முறையில் ஆரம்பித்து அதனை அப்படியே தொடர வேண்டும்“

“இந்தியாவில் எனக்கு இதுவே முதல் (டெஸ்ட்) தொடர். இன்னும் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரைத் தவிர ஏனைய அனைத்து வீரர்களுக்கும் இந்தியாவில் முதல் தொடர் இது என்பதால், ஒவ்வொருவருக்கும் இது நல்ல சவாலாகவே அமையும்.”

ஊடகவியலாளர்கள் எப்படி நீங்கள் அஷ்வின், ஜடேஜா போன்றோரை எதிர்கொள்ளப்போகின்றீர்கள் எனக் கேட்டதற்கு சந்திமால் இவ்வாறு பதிலளித்தார், “அவர்கள் இருவரும் டெஸ்ட் தரவரிசைப்பந்து வீச்சாளர்களில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாகவும் அவர்களது பந்துவீச்சு சிறப்பாக இருக்கின்றது. எங்கள் திட்டங்களை நாங்கள் உங்கள் முன் கூறவிரும்பவில்லை“

“இந்தியாவுடனான போட்டித் தொடரில் வெற்றிகொள்வதற்கு சில திட்டங்களை எங்களுக்குள் இரகசியமாக வைத்துள்ளோம். நாம் இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு எதிராக என்ன திட்டங்களை பயன்படுத்தப் போகின்றோம் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.“



பங்களாதேஷ் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தனது ராஜினாமா கடிதத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு (BCB) கையளித்துள்ளார். அவரது ஒப்பந்தக் காலம் 2019ஆம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையிலேயே இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஜுன் மாதம் கிராஹம் போர்ட் ராஜினாமா செய்தது தொடக்கம் இலங்கைஅணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ள நிலையில், ஹதுருசிங்க2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மூன்று வருட காலத்திற்கு இலங்கைதேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவிருப்பதாகநம்பகமான வட்டாரங்கள் மூலம்  தெரியவருகிறது.



இலங்கை அணியின் நிழல் பயிற்சியாளராக செயற்பட்ட ஹதுருசிங்கவை 2010ஆம்ஆண்டு இலங்கை கிரிக்கெட் சபை அப்பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து அவர் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்தார்.

தான் ஆடிய காலத்தில் ஒரு நிலையான ஆரம்பத் துப்பாட்ட வீரராக செயற்பட்டஹதுருசிங்க இலங்கைக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 10, 861 முதல்தரஓட்டங்கள் மற்றும் 425 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஹதுருசிங்க அதிகஅனுபவம் கொண்ட முதல்தர கிரிக்கெட் வீரராக இருந்தார்.

கிரஹம் போர்டின் விலகலுக்கு பின், களத்தடுப்பு பயிற்சியாளர் நிக் போதாஸைஇடைக்கால தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் சபை நியமித்தது. அவர்இலங்கை அணியின் ஜிம்பாப்வே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்களில்பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாதத்திற்கு 30,000 டொலர்கள் (4.6 மில்லியன் ரூபாய்) சம்பளத்திற்கு ஹதுருசிங்க இணங்கியதாக க்கு மேலும் தெரியவருகிறது. 

இலங்கை கிரிக்கெட் சபை தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா கடந்த வாரம்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியதாவது,

“நாம் ஒருசில பயிற்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். நிக் போதாஸ்உட்பட 3-4 பேர் அடங்குகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் நாம் இந்த நியமனத்தைஉறுதி செய்வோம். அடுத்த ஆண்டு ஜனவரியில் நிரந்த தலைமை பயிற்சியாளர் ஒருவர்இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார். 



ஹதுருசிங்கவின் பயிற்சியின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் பங்களாதேஷ் பெரும்முன்னேற்றம் கண்டது. 2015 உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியபங்களாதேஷ் 2017 சம்பியன்ஸ் கிண்ணத்தின் அரையிறுதி வரை முன்னேற்றம்கண்டது. அதேபோன்று உள்நாட்டில் நடந்த இரு தரப்பு தொடர்களில் பங்களாதேஷ்அணி பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளையும் வீழ்த்தியது.

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தபங்களாதேஷ் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வெளிநாட்டில்இலங்கைக்கு எதிராகவும் இந்த ஆண்டில் முதல் வெற்றியை பெற்றது. 

இலங்கை கிரிக்கெட் சபை கடந்த வாரம் மூன்று ஆண்டு காலத்திற்கு துடுப்பாட்டபயிற்சியாளராக திலான் சமரவீரவின் சேவையை பெற்றது. எதிர்வரும் இந்திய சுற்றுப் பயணம் முதல் அவரது ஒப்பந்தம் ஆரம்பமாகிறது. ஹதுருசிங்கவின் பரிந்துரையின்கீழ் சமரவீர 2016 ஆம் ஆண்டு பங்களாதேஷின் துடுப்பாட்ட ஆலோசகராகபணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. 

புதிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும்ஒரு T20 போட்டி என்பவற்றில் ஆடுவதற்கு அடுத்த ஆண்டு பங்களாதேஷ்சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

thepapare



அருங்காட்சியகங்களுக்கு செல்லும் போது, கலைப் படைப்புக்களை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கான் செய்து, அவை தொடர்பில் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில், ‘ஸ்மார்ட்டிபை’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியினை ஐபோன் மற்றும் அன்ரொயிட் போன்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

கைபேசிகளுக்குள் அடங்கியுள்ள இவ் உலகில், தொலைபேசிகளுக்கான மென்பொருட்களும் அதிகளவில் உருவாகி, எமது தேவைகளை காலத்தின் வேகத்துக்கு ஏற்ப இலகுபடுத்துகின்றது.

அந்த வகையில், குறித்த செயலியும் சுற்றுலா செல்பவர்களுக்கு மொழி, பாகுபாட்டை தூண்டிவிடாமல் பயன்பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.



தேர்வு என்றாலே எல்லோருக்கும் பயம் இருக்கத்தான் செய்யும். அதிலும் சிறுவர்களுக்கு காய்ச்சலே வந்துவிடும். என்ன தான் தேர்வுக்கு படித்தாலும் எழுதப்போகும் இடத்தில் திக்கு திக்குனு இருக்கும். அதுக்காக சிலர் காப்பி அடிக்குற அளவுக்கும் போவதுமுண்டு.

இங்கே ஒரு மாணவன் எப்படியெல்லாம் யோசிச்சிருக்கானு பாருங்க. தேர்வுக்கு பயன்படுத்தும் பரிட்சை அட்டையில நவீன வகையில் பயன்படுத்தி காப்பி அடித்து மாட்டியுள்ளான்.

காப்பி அடித்து மாட்டிக் கொண்ட மாணவனிடமிருந்து கைப்பற்றபட்ட நவீன காப்பி அடிக்கும் பரிட்சை அட்டை பார்த்து ஆசிரியர்கள் வியந்து போய் விட்டனர்.

nnnn



சவூதி அரே­பி­யாவின் முன்னாள் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் நயிப்பின் வங்கிக் கணக்­குகள் முடக்­கப்­பட்­டுள்­ள தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஜூன் மாதம் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் நிலை­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட அவர் அந்­நாட்டில் ஊழ­லுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கையின் கீழ் இலக்­கு­வைக்­கப்­பட்ட பிந்­திய அரச குடும்ப அங்­கத்­த­வ­ரா­க­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேற்­படி நட­வ­டிக்­கையின் பிர­காரம் இள­வ­ரசர் மொஹமட் பின் நயிப்­பி­னதும் அவ­ரது நேரடி உற­வி­னர்­க­ளதும் வங்கிக் கணக்­குகள் சவூதி அதி­கா­ரி­களால் முடக்­கப்­பட்­டுள்­ளன.

ஏற்­க­னவே இந்த ஊழ­லுக்கு எதி­ரான நட­வ­டிக்­கையின் கீழ் அந்­நாட்டைச் சேர்ந்த 11 இள­வ­ர­சர்­களும் 4 அமைச்­சர்­களும் பல முன்னாள் அமைச்­சர்­களும் கைது­செய்து தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த நட­வ­டிக்­கை­யா­னது அந்­நாட்டு தற்­போ­தைய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான், தனக்கு சவா­லாக இருப்­ப­வர்­களை அகற்றி தான் அதி­கா­ரத்­துக்கு வரு­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு மேற்­கொண்ட ஒரு செயற்­பா­டாக நோக்­கப்­ப­டு­கி­றது.


இந்­நி­லையில் சவூதி அரே­பி­யாவில் மேற்­கொள்­ளப்­பட்ட பெருந்­தொ­கை­யான கைதுகள் மனித உரி­மைகள் தொடர்­பான கவலையை அதிகரிப்பதாகவுள்ளதாக அமெ ரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணி ப்பகம் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.



சவுதிஅரேபியா போன்று நாமும் மதுபானத்தை முற்றாகத் தடைசெய்வோம் அல்லது குறைந்த போதையுள்ள பியர் போன்றபானங்களை நாட்டில் அறிமுகம் செய்வோம் என நிதி அமைச்சர்மங்கள சமரவீர தெரிவித்தார்.

சவுதி அரேபியாவைப் போன்று, கை வெட்டுவது, கால்வெட்டுவது, கழுத்து வெட்டுவது போன்ற சட்டங்களை இங்கும்கொண்டுவர வேண்டும்.

வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதானவிவாதத்தில் கலந்துகொண்டு ஜே.வி.பி. யின் சுனில்ஹதுன்னெத்தி எம்.பி. எழுப்பிய கேள்விக்குப்பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.


சீனி விலை அதிகரிக்கப்பட்டமைக்கு நோயைக் காரணம் காட்டிநியாயம் கூறினார். பியருக்கு சாதாரண பானங்களை விடவும்சீனி அதிகளவு பயன்படுத்தப்படுகின்றது. 

அப்படியிருந்தும் பியருக்கான வரி நீக்கப்பட்டுள்ளது ஏன்? எனஹதுன்னெத்தி எம்.பி. வினவியதற்கே அமைச்சர் மங்களஇவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடாத்தியஆய்வொன்றின் படி,

நாட்டில் 49 வீதமானவர்கள் கசிப்பு குடிப்பதாகவும், சாதாரணமதுபானம் பயன்படுத்துபவர்களில் 84 வீதமானவர்கள் அரக்குரக மதுபானத்தைப் பயன்படுத்துகின்றனர். 


வளர்ச்சியடைந்த நாடுகளில் 80 வீதத்துக்கும் அதிகமானவர்கள்பியரே குடிக்கின்றனர். இதில் தான் போதை ஏற்படுத்தும்தன்மை குறைவாகவுள்ளது. இதற்காகவே பியருக்கான வரியைநீக்கினோம். சிறியளவில் மதுபானம் அருந்துவதுதவறில்லையென்பதே எனது நிலைப்பாடு எனவும் அவர் மேலும்குறிப்பிட்டார். DC



தர்ம பிரசாரத்திற்காக துபாய் நாட்டுக்கு செல்வதாக கூறி பல காலமாக சட்டவிரோதமாக பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த பிக்கு ஒருவர் உட்பட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்துக்கொண்ட 10 பெண்களிடம் பணியகத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்

பிக்கு ஒருவரின் உதவியுடன் தாம் வெளிநாட்டுக்கு பணிப் பெண்களாக செல்ல உள்ளதாக அந்த பெண்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து பிக்குவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

துபாய் நாட்டில் நடக்கும் தர்ம போதனைக்காக 10 பெண்களை அழைத்துச் சென்று அங்கிருந்து நேபாளத்திற்கு யாத்திரை அழைத்துச் செல்ல உள்ளதாக பிக்கு அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அதிகாரிகள் அவர்களை கைதுசெய்துள்ளனர்.

வட்டுகொட, மீகொடமுல்ல ஜயசிறி விகாரையில் வசித்து வரும் பள்ளதெனிய ரதனசிறி தேரர் என்ற பிரதான சந்தேக நபரும், பொரள்ளை சஹசுபுர பிரதேசத்தை சேர்ந்த ஹெட்டியாராச்சி சுரஞ்சித், வெல்லம்பிட்டி, மீதொடமுல்ல பிரதேசத்தை சேர்ந்த சசித சங்கல்ப ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே நான்கு முறை பெண்களை துபாய் நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

5 வயதுக்கும் குறைந்த வயதுடைய குழந்தைகள் இருக்கும் பெண்கள் வெளிநாடுகளுக்கு தொழில் புரிய செல்வது சட்டவிரோதமானது என்ற காரணத்தினால், பொய்யான தகவல்களை வழங்கி பெண்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பெண்கள் யாத்திரை செல்பவர்கள் போல் வெள்ளை ஆடை அணிந்து காணப்பட்டுள்ளனர். சந்தேக நபரான பிக்கு பெண்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா வழங்கியுள்ளார்.

ஏனைய இரண்டு சந்தேக நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வழங்கியுள்ளார். பெண்கள் வெளிநாடு சென்று இரண்டு வாரங்களில் உறவினர்களுக்கு தலா 75 ஆயிரம் ரூபாவை வழங்குவதாகவும் பிக்கு உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தவிர பெண்களுக்கு மாதாந்தம் 40 ஆயிரம் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதாக கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் இன்று மினுவங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்தனர்.


இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தலதா அத்துகோரள, மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்கு தொழில்களுக்காக செல்வதன் மூலம் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.


இவ்வாறான நேரங்களில் பணியகத்தினால் தலையீடுகளை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் வரும் நவம்பர் 16ல் கொல்கத்தாவில் துவங்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அணியை சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி..,) அறிவித்தது.


இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) தற்போது அறிவித்துள்ளது. அதில், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதால், காயம் ஏற்படுவதை தவிர்க்கவே பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தவிர, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பாண்டியா பயிற்சி மேற்கொள்வார் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்:

கோலி (கேப்டன்), ரகானே (துணைக்கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், ஷிகர் தவான், புஜாரா, ரோகித் சர்மா, சகா, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா.



அமெரிக்காவில் உள்ள லெக்ஸிங்டன் பகுதியை சேர்ந்தவர் சலாவுதீன் ஜிட்மவுட் .

இவர் கடந்த 2015 ஆண்டு பீட்ஸா விநியோகித்து கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்த பீட்ஸாவை கொள்ளை அடித்து கொண்டு அவரை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது நீதிபதி ஒருவர் குற்றவாளி என கூறி 31 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.


இதனை பார்த்த சலாவுதீன் ஜிட்மவுட் தந்தை அந்த குற்றவாளியை கட்டி அணைத்துகொண்டு தமது மகன் மற்றும் மனைவி சார்பில் மன்னித்துவிட்டதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை கண்ட நீதிபதி உட்பட அங்கிருந்தவர் பலரும் கண்கலங்கியுள்ளனர்.






இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 16-ஆம் திகதி இந்தியாவின் கொல்கத்தா நகரில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் சண்டிமால் தலைமையில் களமிறங்கவிருக்கும் இலங்கை அணியில் முன்னணி வீரர்களான அசேல குணரட்ண, ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் பெரேரா ஆகியோர் மீண்டும் இடம்பெறுள்ளனர்.

இலங்கை அணி விபரம் வருமாறு,

தினேஷ் சண்டிமால் (தலைவர்) குசல் சில்வா, திமுத் கருணரத்ன, குசல் மெண்டீஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, அசேல குணரட்ன, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, லஷான் சந்தகான், தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப், சுரங்க லக்மால், மலிந்த புஸ்பகுமர.



அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு சலுகைகள் அடங்கிய அறிக்கையை நிதியமைச்சர் நாடாளுமன்றில் வாசிக்கவுள்ளார்.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் மோட்டார் வாகன துறை தொடர்பிலேயே அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோட்டார் வாகனங்களின் விலைப் பட்டியலில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பான அறிக்கை ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதற்கமைய டொயாட்டோ மாதிரி எஞ்ஜின் திறன் கொண்ட 1500CCயை விடவும் குறைந்த AQUA, AXIO போன்ற கார்கள் பல மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. எனினும் வரவு செலவு திட்டத்தில் அதன் விலை ஒரு மில்லியன் ரூபாய் வரையில் குறைவடையவுள்ளது.

ஹொன்டோ மாதிரியை கொண்ட FIT, FREED, GRACE, INSIGHT போன்ற வாகனங்களின் விலை 3 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக விலை குறைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



இந்த பட்டியில்ல நிஸான் லீப், இலத்திரனியல் மோட்டார் வாகனங்களே மிகப்பெரிய அளவில் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் விலை குறைப்பு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

இதேவேளை, நிஸான் X-TRAIL கார்களின் விலை 2 மில்லின் ரூபாய் வரை அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

MARI themes

Powered by Blogger.