Showing posts with label HOT NEWS. Show all posts




காலியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களின் பொறுமையை மீண்டும் ஒரு தடவை சீண்டிப் பார்க்கும் செயலாகும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் தொடர்பாக அரசின் உயர்மட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் தென் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தான் தொலைபேசியில் உரையாடி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான இந்தத் திட்டமிட்ட தாக்குதலின் பின்னணியை அரசு கண்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவும், அரசு முன்வர வேண்டும் என்று அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.



உள்நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலை அடுத்து, மியான்மர் நாட்டில் இருந்து ரோஹிங்கியா மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் பல நாடுகளில் அகதிகளாக உள்ளனர். நெருக்கடி நிறைந்த சூழலில் முகாம்களில் அவர்கள் வசிப்பதனால் சிறு குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று அகதிகள் பலருக்கு போதிய உணவு, சுகாதார வசதி கிடைக்கவில்லை என்றும் அகதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதற்காக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி டில்லர்சன் இன்று மியான்மர் சென்றுள்ளார். அவர் அந்நாட்டு ராணுவ தளபதி மின் ஆங் மற்றும் சூ கியை சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்பொழுது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளன என கூறியுள்ளார்.

ரோஹிங்கியா விவகாரத்தில் மியான்மர் நாட்டு தலைவரான சூ கி அமைதியுடன் இருக்கிறார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் மியான்மர் தலைநகர் நேபையிடாவில் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சனுடன் இணைந்து செய்தியாளர்களுக்கு சூ கி அளித்துள்ள பேட்டியில், நான் அமைதியாக இருக்கவில்லை. மக்கள், நான் கூறுவது போதிய ஆர்வம் அளிக்கவில்லை என கருதுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

நான் கூறுவது பரபரப்பிற்காக அல்ல. அது சரியானது என்ற வகையில் இருக்க வேண்டும். மக்களை ஒருவருக்கொருவர் எதிராக மாற்றுவதற்கு அல்ல என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் பதற்றம் ஏற்பட்டு விடாமல் பேசுவதற்கான வழிகளை பற்றி கவனம் செலுத்தி வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


ஏ9 வீதியில் வாகன விபத்து : மாணவன் வைத்தியசாலையில்

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக நேற்று (15.11.2017) மதியம் 2.45மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவனோருவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,


வவுனியா மத்திய மகா வித்தியலாயத்திலிருந்து பாடசாலை மாணவனை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலில் மீது வவுனியாவிலிருந்து கண்டி வீதி நோக்கி பயணித்த கார் தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.


இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவனோருவன் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


-சுடர்-




உஷ்ணமான காலநிலையைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை ஐந்து பந்து வீச்சாளர்களை தமது குழாமில் உள்ளடக்கியிருந்தது. எனினும், இந்திய அணியுடன் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை நான்கு பந்துவீச்சாளர்களைக் கொண்ட ஒரு அணியாகவே எதிர்பார்க்க முடியும் என அணித்தலைவரான தினேஷ் சந்திமால் கூறியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

“பாகிஸ்தானுக்கு எதிராக, நாம் ஆறு துடுப்பாட்ட வீரர்களுடனும் ஐந்து பந்து வீச்சாளர்களுடனும் விளையாடியிருந்தோம். அது உஷ்ணமான காலநிலையில் எமக்கு மிகவும் உதவியாக (ஐக்கிய அரபு இராச்சியத்தில்) அமைந்திருந்தது. எனினும், நான்கு பந்துவீச்சாளர்களுடன் போட்டியொன்றில் வெல்வது இலகுவான விடயமாக அமையாது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிகவும் நல்ல சில பந்துவீச்சாளர்களை அவ்வணி கொண்டுள்ளது, எனவே நாங்கள் சகலதுறை வீரர்களை மையமாகக் கொண்டு போட்டிக்கு தகுதியான அணியை தேர்வு செய்ய வேண்டியுள்ளோம். போட்டிக்கான மைதானத்தை பார்த்த பின்னர் நாம் எமது திட்டங்களை வகுக்கவுள்ளோம்“ என சந்திமால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவுடனான அண்மைய தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் (9-0 என) சொந்த மண்ணில் வைத்து தோல்வியடைந்த இலங்கை அணி, அயல்நாடு ஒன்றில் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய போதிலும் ஒரு நாள் தொடரை 5-0 என பறிகொடுத்திருந்தது.

“எம் எல்லோருக்கும் இந்தியா (டெஸ்ட்) தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது என்பது தெரியும். அத்தோடு கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் முன்னேற்றகரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றனர். நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் சிறந்த முறையில் செயற்பட்டிருந்தோம். ஒரு அணியாகவும் சிறப்பாக செயற்பட்டிருந்தோம். இந்தியாவுடனான இத்தொடரை எமது வீரர்கள் ஒரு சவாலாக எடுத்து அதில் நல்ல முடிவுகளைத் தருவார்கள் என உறுதியாக நம்புகின்றேன்“ என்று சந்திமால் கூறியிருந்தார்.

அத்தோடு இந்தியாவுடன் விளையாடுவது மிகவும் கடினமான விடயம் என்பதையும் ஒப்புக் கொண்ட சந்திமால், இலங்கையின் கடந்த கால முடிவுகளால் மனம் தளரப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

“இது எமக்கு மிகவும் சவாலான ஒரு தொடராக அமையவுள்ளது. எனினும் இங்கிருக்கும் பார்வையாளர்களினால், நாம் இங்கே விளையாட மிகவும் விரும்புகின்றோம். நான் எமது கடந்த காலத்தை பின்னோக்கி பார்க்க விரும்பவில்லை. நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக (டெஸ்ட்) தொடரில் சிறந்த பதிவைக் காட்டியிருந்தோம். தற்போது எமது வீரர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான உரிய தரத்தில் காணப்படுகின்றனர். எனவே இனி நாம் வருகின்ற இந்த சவாலை முகம் கொடுக்கத் தயராகுவோம்“ என சந்திமால் கூறியிருந்தார்.


இந்திய அணியின் நட்சத்திர சுழல் வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோரையும் எதிர்கொள்வதற்கான உத்திகளையும் திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்த சந்திமால் அவற்றை தற்போது அறியத்தரப்போவதில்லை எனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

“ஒரு அணியாக நாம் சில திட்டங்களை எங்களுக்குள்ளேயே பேசி வைத்துள்ளோம். அதனை மைதானத்தில் மாத்திரமே நாங்கள் செயற்படுத்த வேண்டும் அப்போதே அவற்றின் துணையோடு இந்தியாவுடன் போட்டியை வெற்றி கொள்ள முடியும்“ என டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்ட பின்னர் சந்திமால் பேசியிருந்தார்.

1982ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அந்நாட்டு மண்ணில் ஒரு போட்டியில் கூட இதுவரையில் வெற்றி பெறவில்லை. இதனை மாற்றுவதில் நம்பிக்கை கொண்டிருப்பதாக சந்திமால் மேலும் தெரிவித்திருந்தார்.

“இந்திய மண்ணில் இதுவரையில் நாம் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறவில்லை. எங்கள் அனைவருக்கும் அது ஒரு கனவாக காணப்படுகின்றது. இதுவே நாம் கொல்கத்தாவில் விளையாடும் முதல் போட்டியும் கூட. கொல்கத்தா ரசிகர்களின் முன்னாள் விளையாடுவது எமக்கு மகிழ்ச்சியான விடயமே. ஒரு அணியாக நாம் நல்ல முறையில் ஆரம்பித்து அதனை அப்படியே தொடர வேண்டும்“

“இந்தியாவில் எனக்கு இதுவே முதல் (டெஸ்ட்) தொடர். இன்னும் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரைத் தவிர ஏனைய அனைத்து வீரர்களுக்கும் இந்தியாவில் முதல் தொடர் இது என்பதால், ஒவ்வொருவருக்கும் இது நல்ல சவாலாகவே அமையும்.”

ஊடகவியலாளர்கள் எப்படி நீங்கள் அஷ்வின், ஜடேஜா போன்றோரை எதிர்கொள்ளப்போகின்றீர்கள் எனக் கேட்டதற்கு சந்திமால் இவ்வாறு பதிலளித்தார், “அவர்கள் இருவரும் டெஸ்ட் தரவரிசைப்பந்து வீச்சாளர்களில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாகவும் அவர்களது பந்துவீச்சு சிறப்பாக இருக்கின்றது. எங்கள் திட்டங்களை நாங்கள் உங்கள் முன் கூறவிரும்பவில்லை“

“இந்தியாவுடனான போட்டித் தொடரில் வெற்றிகொள்வதற்கு சில திட்டங்களை எங்களுக்குள் இரகசியமாக வைத்துள்ளோம். நாம் இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு எதிராக என்ன திட்டங்களை பயன்படுத்தப் போகின்றோம் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.“



வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் அருகே இன்று (04.11) காலை 11.30மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அபகரித்துச் செல்ல முயன்ற போது அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



இச் சம்பவம் பற்றி தெரியவருவது,


இன்று காலை 11.30 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் பகுதியில் வீதியில் நடந்து வந்த வயோதிப பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை கறுப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரிக்க முயன்ற வேளையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்களாலும், பொதுமக்களாலும் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.


மேலும் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது. பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவரையும் தற்சமயம் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவுள்ளனர்.


மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


-சுடர் & சிவ குமார்-







இந்த 4 வயது சிறுவனை கொலை செய்ய துடிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.,தீவிரவாதிகள்… காரணம் என்ன..?

இங்கிலாந்தின் வருங்கால இளவரசராக கருதப்படும் ஜார்ஜ் என்ற குட்டிப் பையனைக் கொல்ல ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் பிரின்ஸ் வில்லியம் மற்றும் கேத்மிடில்டன் ஆகியோரின் மகன் ஜார்ஜ். இங்கிலாந்தில் ராணி எலிசபெத்திற்கு பிறகு இளவரசர் சார்லஸ் மன்னர் ஆவார். பின், வில்லியம் மன்னர் ஆவார். அடுத்து அவரது மகனான ஜார்ஜ் மன்னர் தகுதி உடையவர்.


இதனால், எதிர்கால பட்டத்து இளவரசராகவே கருதப்படுகிறார். 4 வயதாகும் இந்த குட்டிப் பையன் ராஜவம்ச அரண்மனை பள்ளியில் படித்து வருகிறார். கடந்த மாதம்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலைத் துடிக்கும் முக்கிய நபர்களின் பெயர் பட்டியலில் ஜார்ஜ் பெயரும் இடம்பெற்றிருப்பதாக இங்கிலாந்து பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்செய்தி வெளியானதாகக் கூறப்படுகிறது.

ஜார்ஜ் படிக்கும் அரண்மணைப் பள்ளி அருகே வீடியோ எடுத்த பெண் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக, அந்த பள்ளிக்குயைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜார்க் கொல்லப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வந்திருப்பது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னதாக ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொலை பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட 8 ஆயிரம் பேர் இருப்பதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.



இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் ஏராளமான முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் பயணியருக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. இந்த நடைமுறைக்கு 2018ல் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஹஜ் பயணியருக்கு மானியம் ரத்து உட்பட பல ஷரத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. 

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்துள்ள கொள்கை வரைவு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா மக்களை திரும்பப்பெற மியான்மர் அரசு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. இதன் அடிப்படையில், ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியின் தலைவரான ஆங் சான் சூகி, இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, அவர் தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை சூகி களம் இறக்கினார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ்(67) மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆங் சான் சூகி அரசு ஆலோசகராக இருந்து வருகிறார்.

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் மீதான ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமாகி உள்ளது.

மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 5 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

முன்னதாக, மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்தார். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா மக்களை திரும்பப்பெற மியான்மர் அரசு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக வங்காளதேசம் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் அலி இன்று தெரிவித்துள்ளார்



ஆஸ்திரியாவில் பெண் ஒருவரின் புர்காவை பொலிசார் வலுக்கட்டாயமாக கழற்ற கூறி அதை சோதனை செய்தது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள், முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிவதற்கான தடை இன்று அமலுக்கு வந்தது.


இது ஆஸ்திரியாவின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் விதமாகவும், தலைமுடியில் இருந்து, தாடை வரை முகம் முழுமையாக தெரிய வேண்டும் எனவும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சட்டம், முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைகளான புர்கா மற்றும் நிகாப்பிற்கு என்று கூறப்பட்டுள்ளது.


இதற்கு இஸ்லாமிய குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் ZellamSee என்ற கிராமத்தில் பெண் ஒருவர் புர்கா அணிந்திருந்தால், பொலிசார் அவரை வலுக்கட்டாயமாக கழற்றும்படி கூறியுள்ளனர்.


அதைத் தொடர்ந்து பொலிசார் அந்த புர்காவை கழற்றிய பின்னரும் நன்றாக உதறும் படி கூறியுள்ளனர்.


இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தடை செய்யப்பட்டிருந்தாலும் பொலிசார் இப்படி வலுக்கட்டாயமாக அப்பெண்ணின் புர்காவை கழற்றும் படி கூறியது கண்டனத்திற்குரியது என்று எதிர்ப்பு கிளம்பி வருகிறது.


மேலும் மருத்துவ முகமூடிகளுக்கு, கோமாளி போல அலங்காரம் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் சுமார் 150 பெண்கள் முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிகிறார்கள்.


இருப்பினும் தற்போது எடுத்துள்ள நடவடிக்கையால், ஆஸ்திரியாவிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.




ஸ்ரீலங்காவில் அண்மையில் தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர் தசுன் நிஷான் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இவர் உலகில் பலரின் வாழ்க்கையைப் பறித்த அதிபயங்கர விளையாட்டான ப்ளூவேல் விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளதாக அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தசுன் மன ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதனாலேயே தற்கொலையினை நாடியுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.


இணையதளங்களில் தற்கொலை தொடர்பான காணொளிகளை அவர் அதிகம் பார்வையிட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்கொலை செய்யும் முறை தற்கொலை செய்யும் இடம் என்பன குறித்து தசுனின் தேடல் அமைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அவர் தற்கொலைக்காக தன்னை சில காலமாகவே தயார்ப்படுத்தி வந்திருக்கிறார் என்பது நிரூபனமாகின்றது.


மேலும் மன ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த தசுன், மது பாவனைக்கு அடிமையாகியுள்ளதோடு தற்கொலைக்கு முதல் இறுதியாக தனது முக நூல் பக்கத்தில் மாறுபட்ட மன நிலையை வெளிப்படுத்தும் விதமாக பதிவிட்டிருந்தமை குறித்தும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.


சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்ட கண்ணிவெடிகளை பங்களாதேஷுடனான அதன் எல்லையில் மியன்மார் இராணுவம் புதைத்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) உறுதிப்படுத்துள்ளது.

இதனால் கடந்த வாரத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கடுமையாக காயமடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

நேரடியாகக் கண்டவர்களின் நேர்காணல் மற்றும் ஆயுத வல்லுநர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சர்வதேச மன்னிப்புச் சபை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.


ராக்கெய்ன் மாநிலத்தின் வடமேற்கு எல்லைப் பகுதியிலேயே இவ்வாறு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள அதேவேளை, கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்ற இராணுவ அடக்குமுறைகளால் குறித்த பகுதியின் ஊடகாவே சுமார் 270,000 பேர் தப்பிச்சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு செய்துள்ளது.
.
“ராக்கெய்ன் மாநிலத்தில் நிலவும் கொடூரமான நிலைமையில் இது மற்றுமொரு கீழ்த்தரமான விடயம். மியன்மார் இராணுவத்தின் கண்மூடித்தனமான, அலட்சியமான ஆயுத பயன்பாடு சாதாரண மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.” என மியன்மார் – பங்களாதேஷ் எல்லைக்கு அருகாமையில் கடமையில் உள்ள சர்வதேச மணிப்புச் சபையின் நெருக்கடிகள் தொடர்பில் பதிலளிக்கும் பணிப்பாளர் டிரானா ஹஸன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

ரோஹிங்கியா விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ஓக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரியில் இடம் பிடித்திருந்த ஆங் சான் சூ கியின் படம் அகற்றப்பட்டது.

மியான்மரின் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கி. இவர் 1967-ல் லண்டனில் உள்ள செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். ஓக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்குட்பட்ட இந்த கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். இதை தொடர்ந்து கடந்த 1999 முதல் அந்த கல்லூரியில் அவரது புகைப்படம் இடம்பிடித்தது.

நோபல் பரிசு பெற்ற இவரை கடந்த 2012-ம் ஆண்டில் செயின்ட் ஹூக்ஸ் கல்லூரி தனது கல்லூரிக்கு அழைத்து கவுரவித்தது. 

இந்நிலையில், இந்த கல்லூலியின் நுழைவு வாயிலில் இடம் பிடித்திருந்த ஆங் சான் சூ கியின் படத்தை பல்கலைக்கழக நிர்வாகம் அகற்றியுள்ளது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், கண்காட்சியில் வைப்பதற்காக இந்த மாத தொடக்கத்தில் புதிய ஓவியங்கள் கிடைத்துள்ளன. எனவே, ஆங் சான் சூ கியின் படம் அகற்றப்பட்டு பாதுகாப்பாக வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். 

ஆனால், மியான்மர் நாட்டில் அவதிப்பட்டு வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் சூ கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஓக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை கோழைத்தனமானது என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.



திருப்பூரில் பெண் ஒருவர் சாலையில் அடையாளம் தெரியாத ஒருவரால் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

அவரின் சடலத்திற்கு அருகில் ஒன்றரை வயது ஆண் குழந்தை அழுதுகொண்டே இருந்தது.


இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் .

விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் குழந்தையை மீட்டு அந்த குழந்தை யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது முஸ்லிம் அரசியல்வாதகளான அமைச்சர் றிசாத், ஹிபுல்லாஹ் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாதகமான விடயங்களை நீக்குவதற்கு கடுமையாக போராடியுள்ளனர்.

நேற்றுமுன் தினம் புதன்கிழமை காலை 8 மணிக்கு சபாநாயகருடன் முதற்சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.

இதையடுத்து அவர்கள் இரவு 9 மணிவரை பாராளுமன்றத்தில் இருந்து மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாதகங்கள் வந்துவிடலாகாது என்பதற்காக கடுமையாக முயன்றுள்ளனர்.

நேற்றுமுன் தினம் மாலை 6.30 மணிக்கு இதுதொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த போதும் இரவு 8.30 மணிக்கே வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.

இவர்கள் இருவரினதும் பிடிவாதத்தை கண்ட ஆளும்கட்சி எம்.பி.க்கள் இவர்கள் இருவருடனும் கடுமையாக நடந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்தின உள்ளிட்ட சிலர் றிசாத்தையும், ஹிஸ்புல்லாவையும் தாக்க முயன்றதாகவும் அறியவருகிறது.

கடும் குரலில் இவர்களுக்கிடையில் வாக்குவாதமும் நடைபெற்றுள்ளது.

ஒரு கட்டத்தில் ஹிஸ்புல்லாஹ்வை நோக்கி தாங்கள் தந்த தேசியப் பட்டியலை பெற்றுக்கொண்டு சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக முஸ்லிம்களுக்கு ஆதரவாக மாத்திரம் செயற்படுகிறீர்களா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இவற்றிக்கு அப்பால் பிரதமர் ரணில் உள்ளடங்கலாக பிரதான அமைச்சர்கள், மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு நல்கும்படி கடும் அழுத்தங்களை பிரயோகித்ததாகவும் அறியவருகிறது.

இவர்கள் இருவரினதும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் முயற்சியினால் பிரதான 4 விடயங்களை மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தில், உள்ளீர்ப்புச் செய்யமுடியுமாக இருந்துள்ளது.

பல்லின ஆசன அங்கத்தவர், எல்லை நிர்ணய ஆணைக்குழு மூலம் 4 மாதத்திற்குள் திர்வை எட்டுதல், பிரதமர் அடங்கலான 4 பேர் கொண்ட சிறப்புக் கமிட்டி மூலம் அநீதி இடம்பெறாதவாறு செயற்படுதல் மற்றும் கலப்பும், விகிதாசாரமும் கலந்த 50 க்கு 50 என்பதிலும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமானது முஸ்லிம்களுக்கு பாதகம் இல்லையென்று சொல்லமுடியாவிட்டாலும் முஸ்லிம்களுக்கு ஏற்படவிருந்த பல பாதகங்களை குறைத்துள்ளதாக முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் தெரிிவித்தார்.



கந்தளாய் நகர் பகுதியில் மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக கூறப்படும் நபருக்கு 82500/= ரூபாய் தண்டம் செலுத்துமாறு நேற்று (21) கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித தம்மிக்க உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாய் நகரத்தில் மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரை கைது செய்து மோட்டார் சைக்கிள் தொடர்பில் ஆவணங்களை கோரிய போது எவ்வித ஆவணமும் இல்லாத நிலையில் கந்தளாய் தலைமையக போக்குவரத்து பொலிஸார் கந்தளாய் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அவ்வழக்கு விசாரணையின் போது மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியதாகவும்,

பொலிஸாரின் சமிக்கையை கவனிக்காமல் சென்றமை.

வாகன வருமான உத்தரவு பத்திரம் இல்லாமல் செலுத்தியமை.

காப்புறுதி இல்லாமல் செலுத்தியமை.

தலைக்கவசம் இல்லாமல் சென்றமை.

இரு பக்க கண்ணாடிகளும் இல்லாமல் இருந்தமை.

மோட்டார் சைக்கிளில் காணப்பட்ட சைலன்சரை மாற்றி வேறு சைலன்சர் செய்தமை.

வாகனத்திற்குறிய இலக்கம் பொருத்தாமல் இருந்தமை என எட்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.

கந்தளா-யுனிட் 15 -வெண்றாசன்புர பகுதியைச்சேர்ந்த ஏ.ஜி.சுஜித் மதுசங்க (22வயது) என்பவருக்கே இத்தண்டம் செலுத்துமாறு நீதவான் கட்டளையிட்டார்.

(அப்துல்சலாம் யாசீம்)















லங்கை கிரிக்கெட்டை பொறுத்தவரை அண்மைக்காலம் மிகக் கடினமானது. அதற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அணி மீதும் அதிகாரிகள் மீதும் பலவகையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றமை அணிக்கு மேலும் நெருக்கடியாகவே இருந்து வருகின்றது.

ஜிம்பாப்வேயிடம் 2-3 என ஒருநாள் தொடரை தோற்றதை அடுத்து அஞ்செலோமெதிவ்ஸ் அணித்தலைமை பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்தார்.

இந்த துயர நிலையின் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள்மற்றும் T-20 என அனைத்து போட்டிகளிலுமே இலங்கை ஒட்டுமொத்தமாக 0-9 எனதோல்வி கண்டது. இந்த இரண்டு நிகழ்வுகளும் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில்இதற்கு முன்னர் ஒருபோதும் இடம்பெற்றதில்லை.


அணியின் தற்போதைய நிலை முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்குஉள்ளானதோடு அணியில் முன்னேற்றம் இன்மை குறித்து ரசிகர்கள் கூடகளைப்படைந்துவிட்டனர். இதன் தொடர்ச்சியாக அணி தேர்வுக் குழுவின்உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிட்டனர்.

உண்மையில் இவ்வாறான கடினமான தருணத்திலும் எதிர்காலத்தில் நம்பிக்கைதரக்கூடிய சாதகமான சூழல் இருக்கத்தான் செய்கிறது. நெருக்கடிகளுக்கு மத்தியில்அவ்வாறான திறமைகள் மற்றும் அனுகூல நிலை கண்ணில் தென்படாமல் இருப்பதுவழக்கமானதே.

எனவே, இலங்கை அணி முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு உள்ள நம்பிக்கை தரும் ஐந்து விடயங்கள் பற்றிப் பார்ப்போம்.

5. காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர்களின் மீள் வருகை

இலங்கை அணி தனது வழக்கமான சில வீரர்கள் இன்றியே அண்மைய தினங்களில்ஆடிவருவதை மறந்துவிடக்கூடாது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் இதனைஅதிகம் பார்க்கலாம். நுவன் பிரதீப், சுரங்க லக்மால் மற்றும் அசேல குணரத்ன போன்றவீரர்கள் அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்கும் வீரர்கள் என்றபோதும் காயங்களால்அண்மைக் காலத்தில் அவர்கள் விளையாடுவதில்லை என்பது தளம்பலைஏற்படுத்தியது.நுவன் பிரதீப்

இந்தியாவுடனான முதல் டெஸ்டில்பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதகமற்றஆடுகளத்தில் கூட நுவன் பிரதீப் எதிரணியைதள்ளாடச் செய்து ஆறு விக்கெட்டுகளைவீழ்த்தி இருந்தார். எனவே அவர் அல்லதுலக்மால் இல்லாதது அணிக்கு பெரும்பின்னடைவாகவே இருந்தது. மாலிங்க டெஸ்ட்அணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டவேளையில் இவர்களே வேகப்பந்து வீச்சில்பலம் சேர்த்தனர். ஆனால் இவர்களால்கிட்டத்தட்ட கடந்த ஓர் ஆண்டாக அணியில்தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது.

சுரங்க லக்மாலின் வேகம் மற்றும் நேர்த்தியான பௌன்ஸர்கள் இந்திய துடுப்பாட்டவீரர்களை தடுமாறச் செய்திருக்கக் கூடும்.

லஹிரு குமார உற்சாகமாக பந்துவீசி தனது வேகத்தால் இந்திய வீரர்களைஅதிர்ச்சியுறச் செய்தபோதும் அவரால் சரியாக சோபிக்க முடியவில்லை. அவர்ஒவ்வொரு ஓவரிலும் விட்டுக் கொடுத்த பௌண்டரிகள் எதிரணிக்கு அழுத்தத்தைகுறைத்தது.



பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ச்சியாக மணிக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தை வைத்திருக்க முடியாத நிலையில் அவ்வாறான திறமையைவெளிக்காட்டிய குமார மற்றும் சமீரவால் ஆகியோராால் சோபிக்க முடியும் என்றநம்பிக்கை அதிகமாக உள்ளது. 

குமார மற்றும் சமீரவுடன் லக்மால் மற்றும் பிரதீப் அணிக்கு திரும்பினால் அந்த கலவைஇலங்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சத்தை ஏற்படுத்தாது. அது எதிரணிதுடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக சவால் கொண்டதாக இருக்கும்.

உண்மையில் தற்போதைய டெஸ்ட் அணிகள் அனைத்தையும் பார்த்தோம் என்றால்இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் எந்த ஒரு அணியின்வேகப்பந்து வீச்சு வரிசையும் பலம் கொண்டதாக இல்லை.

4. ரங்கன ஹேரத், லசித் மாலிங்கவிடம் தங்கியிருக்கும் யுகம் முடிகிறது

முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் ஆடிய காலத்தில் அவர்கள் அணிக்கு பலம்சேர்த்தது போலவே ரங்கன ஹேரத் மற்றும் லசித் மாலிங்க ஆகியோரும் இன்றியமையாத வீரர்களாக உள்ளனர். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரைஇலங்கை அணி ஹேரத்தின் சுழலில் தங்கியிருப்பதோடு ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் மாலிங்கவின் வேகம் இலங்கை அணிக்கு தேவைப்படுகிறது.லசித் மாலிங்க

எனினும் காயங்கள் மாற்று வீரர்கள் பற்றி யோசிக்வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இதனாலேயே அகிலதனன்ஜய மற்றும் மலின்த புஷ்பகுமாரவுக்கு அணியில்இடம் பிடிக்க முடிந்தது.

புஷ்பகுமார அதிக தாக்கம் செலுத்தும் வீரராகஇருப்பதோடு அவரது பலம் மற்றும் நிதானம் காயமடைந்தரங்கன ஹேரத்தின் இடைவெளியை நிரப்ப போதுமாகஇருந்தது. இது இலங்கை அணி ஹேரத்துக்கு மாற்று வீரரையோசிக்கும் நேரத்தில் சாதக சூழலாக உள்ளது. 

எனினும் ஹேரத்தின் இடத்தை பிடிக்க புஷ்பகுமார நீண்டதூரம் செல்ல வேண்டி இருக்கும் என்பதோடுதற்போதைக்கு அவர் சிறந்த மாற்று தேர்வாக மாறிஇருக்கிறார் என்ற வகையில் நல்லதே.



இதே நிலைமையே மாலிங்கவின் கோணத்திலும் ஏற்பட்டுள்ளது. அவர்இந்தியாவுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களில் எதிர்பார்த்த அளவுசோபிக்காதபோது அகில தனன்ஜய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் அதிகவிக்கெட்டுகளை வீழ்த்தினர். 

சமீர, குமார மற்றும் லக்மால் போன்ற வீரர்கள் தமது ஆட்டத் திறமையை அதிகரித்துக்கொண்டால் மாலிங்கவின் இழப்பு பெரிதாக இருக்காது. இது அவரது ஓய்வுக்கு பின்பும்இலங்கை பந்துவீச்சு பலவீனம் அடைவதை தவிர்க்க போதுமாக இருக்கும்.

3. திறமையை காட்டும் துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டம்

ஒட்டுமொத்தமாக பார்த்தோம் என்றால் இந்தியாவுடனான போட்டிகளில்இலங்கையின் துடுப்பாட்டம் அதிருப்தி கொள்வதாகவே இருந்தது. டெஸ்ட்போட்டிகளில் அவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தனர். ஒருநாள் தொடர்மற்றும் ஒரு T-20 போட்டிகளில் விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்து ஒட்டங்கள்குவிக்கத் தவறினர். 

இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் டெஸ்ட் போட்டிகளில் குசல் மெண்டிஸ் மற்றும்திமுத் கருணாரத்ன அபார சதங்கள் குவித்தனர். நிரோஷன் திக்வல்ல தொடர்ச்சியாகஓட்டங்களை பெற்றார்.திரிமான்ன மற்றும் சந்திமால்

அணியின் தூண்களாக அஞ்செலோ மெதிவ்ஸ், உபுல் தரங்க மற்றும் டினேஷ் சந்திமால் உள்ளநிலையில் ஏனைய இளம் வீரர்களும்முழுமையாக தமது திறமைகளை காட்டினால்இலங்கை அணிக்கு பூரணமான துடுப்பாட்டவரிசை ஒன்று கிடைக்கும்.

குசல் மெண்டிஸ் தன்னால் சிறப்பாகதுடுப்பாட்ட வீரராக வர முடியும் என்பதைஇந்த தொடர் மூலம் காட்டியதோடுகருணாரத்ன நெருக்கடியான நேரத்தில்திறமையாக ஆடி இருந்தார். இவர்கள் இருவராலும் இணைந்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவு நெருக்கடி கொடுக்க முடிந்தது.

ஒருநாள் தொடரை பொறுத்தவரை மெதிவ்ஸ், தரங்க சோபிக்கவில்லை. லஹிருதிரிமான்ன தனது அனுபவ ஆட்டத்தை காட்டி இருந்தார். அவரது முன்னேற்றம் ஒருநாள்போட்டிகளில் அணி நல்ல பாதையை நோக்கி செல்வதற்கான சமிக்ஞையைகாட்டியுள்ளது.



அசேல குணரத்ன சகலதுறை வீரராக முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளைவீழ்த்துவதோடு பின் வரிசையில் வேகமாக ஓட்டங்களை குவிக்கிறார். அவர்காயத்தால் இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. அவரதுஇடத்திற்கு வந்த மிலின்த சிரிவர்தன சிறந்ததொரு பந்துவீச்சு தேர்வு என்பதையும்முக்கிய நேரங்களில் ஓட்டங்கள் பெறுபவர் என்பதையும் நிரூபித்துள்ளார். 

2. அனைத்து போட்டிகளிலும் சோபித்த நிரோசன் திக்வல்ல

அதிகம் கவரக் கூடிய துடுப்பாட்ட வீரராகவும் எல்லா பந்துகளிலும் ஓட்டங்களைதேடுபவராகவுமே திக்வல்லவை பார்க்க முடியும். அதேபோன்று அனைத்து வகைகிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கையின் முதல் நிலை விக்கெட் காப்பாளராகவும்அவர் தம்மை நிரூபித்துள்ளார்.

அவர் இந்தியாவுடனான தொடர் முழுவதும் ஓட்டங்களை பெற்றவராக இருந்ததோடுதைரியமாக பந்துகளுக்கு ஓட்டங்களை குவிப்பவராகவும் தன்னைக் காண்பித்துள்ளார். எனினும் அவர் மிக விரைவில் விக்கெட்டை பறிகொடுப்பவராக இருந்ததை தொடர்முழுவதிலும் பார்க்க முடிந்தது.

களத்தடுப்பில், விக்கெட்டுக்கு பின்னால் ஒரு சுறுசுறுப்பான விக்கெட் காப்பாளராக,திறமையாக பந்தை தடுப்பதோடு தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளைகைவிடாதவராகவும் உள்ளார். இந்த பண்புகள் இலங்கை அணிக்கு ஒரு சிறந்தஎதிர்காலத்தையே காட்டுகிறது. 

தற்போதைய நிலையில் திக்வல்ல ஒரு விக்கெட் காப்பாளராக அனைத்து வகைகிரிக்கெட்டிலும் எவ்வாறு செயற்படுகிறார் என்பது குறித்து அவதானத்துடன் இருப்பதுஅவசியமாகும். எனவே அவரை நல்ல முறையில் கையாள்வது அவசியம் என்பதோடுஅதிக சுமைகளை சுமத்துவது பாதகமாகவே முடியும். 

1. அகில தனன்ஜய – அடுத்த அஜன்த மெண்டிஸா?

2008 ஆம் ஆண்டு அஜன்த மெண்டிஸ் தனது கன்னி டெஸ்டில் இந்தியாவைஎதிர்கொண்டபோது அவரது பந்துவீச்சு இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு மாயமாகஇருந்ததை மறந்திருக்க மாட்டார்கள். அந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும்மெண்டிஸ் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை அணியால் அந்த டெஸ்ட்போட்டியை இன்னிங்ஸால் வெல்ல முடிந்தது. அகில தனன்ஜய

காலம் போகப்போக மெண்டிஸின் புதிர்பந்துவீச்சை அலசி ஆராய்ந்த எதிரணியினர்அவருக்கு முகம்கொடுக்க பழகிக்கொண்டார்கள். இது அவர் தேசிய அணியில்இருந்து விடுபடுவதற்கு காரணமானது.

எனினும் இந்திய அணி தற்போது வலுவாகஇருப்பது மட்டுமல்ல அதன் துடுப்பாட்டவீரர்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்குதிறமையாக முகம்கொடுக்கின்றனர்.

இலங்கையுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இளம் சுழற்பந்து வீச்சாளர்அகில தனன்ஜய இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அணித் தலைவர் கோலி, ராகுல் மற்றும் ஜாதவ் என்று இந்திய துடுப்பாட்ட வரிசையை சாய்த்துமொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


எம்.எஸ் தோனி மற்றும் புவனேஷ்வர் குமாரின் எட்டாவது விக்கெட் இணைப்பாட்டம்கைகொடுக்காவிட்டால் இந்திய அணி அந்த போட்டியில் தோற்றிருக்கும்.

இந்த பந்து வீச்சை தவிர்த்து பார்த்தால் ஒருநாள் தொடரில் தனன்ஜயவுக்கு இந்தியஅணி ஒப்பீட்டளவில் அதிக நெருக்கடி இல்லாமல் துப்பெடுத்தாடியது. ஆனால் அவரதுபந்து வீச்சு தொடர்ந்து எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக இருப்பதோடுதொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியதாகவும் உள்ளது.

உண்மையில் இலங்கை அணி மற்றொரு மெண்டிஸை கண்டுபிடித்திருக்கிறதா என்றகேள்விக்கு விரைவாக பதில் கூற முடியாதிருக்கிறது. தனன்ஜயவின் தொடர்ச்சியானஆட்டத் திறமையே அதனை நிரூபிக்கும். எப்படி இருந்தாலும் இப்போதையதருணத்தில் தனன்ஜய இலங்கை அணியின் அதிக நம்பிக்கை தரும் வீரராகமாறிவிட்டார்.

மூலம்: www.sportskeeda.com



இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணி யில் இடம்பெற்ற இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்களில் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.


ஏஞ்சலா மேத்யூஸ்

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். முன்னணி வீரரான இவர் இலங்கை அணிக்கு மட்டுமில்லாது கொல்கத்தா, புனே, டெல்லி போன்ற ஐ.பி.எல் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

முத்தையா முரளிதரன்

இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜாம்பவான் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்திய உலகின் ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தகாரராக உள்ளார்.

மஹேல ஜெயவர்தனே

எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் மஹேலா ஜெயவர்தனே இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். துடுப்பாட்டத்தில் பல்வேறு சாதனைகள் செய்திருக்கும் ஜெயவர்தனே ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

டாப் 10 பணக்கார வீரர்களின் பட்டியல்

ஏஞ்சலா மேத்யூஸ்
முத்தையா முரளிதரன்
மஹேலா ஜெயவர்தனே
லசித் மலிங்கா
குமார் சங்ககாரா
திலகரத்னே தில்ஷன்
அரவிந்த டி சில்வா
தினேஷ் சண்டிமால்
சமிந்தா வாஸ்
நுவன் குலசேகரா





ரோஹிங்யா முஸ்லிம்களுக்கான தேவையான உதவிகளைசெய்ய அந்நாட்டு அரசு பெயரளவில் சில நடவடிக்கைகளைஎடுத்து வரும் நிலையில் புத்த மதத்தினர் ஒன்று திரண்டுநிவாரண பொருட்கள் வழங்கக்கூடாது என போராட்டத்தில்ஈடுபட்டனர்.

மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 25-ந் தேதி போலீஸ் மீதுதாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்தஇனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 

ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீவைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 4லட்சத்துக்கும் 

அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம்புகுந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வந்த மியான்மர்நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி தன் மீதான சர்வதேசவிமர்சனங்களுக்கு பதில் அளிக்கிற வகையில் கடந்தசெவ்வாய்க்கிழமை டெலிவிஷனில் உரையாற்றினார்.

அப்போது அவர் ராக்கின் மாகாணத்தில் இயல்பு நிலைதிரும்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அங்குஉள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு மனித நேய உதவிகள்வழங்கப்பட்டு வருவதாகவும், தெரிவித்தார்


அதன்படி ராக்கின் மாகாணத்தில் உள்ள ரோஹிங்யாமுஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசுநடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒருபடகில் நிவாரண பொருட்களுடன் ராக்கின் மாகாணத்தின்தலைநகர் சிட்வே வந்தனர். அப்போது அங்கு புத்த மதத்தினர்நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு, ரோஹிங்யா 

முஸ்லிம்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கக்கூடாது எனகூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைகளில் இரும்புகம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் அங்குபெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு போலீசார்குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் நிவாரணபொருட்கள் கொண்டு வந்த படகின் மீது பெட்ரோல்குண்டுகளை வீசினர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும்மோதல் வெடித்தது.

இதையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால்சுட்டு போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். மோதலில்ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர். 


முன்னதாக நேற்று செஞ்சிலுவை சங்கத்தினர் உதவிக்காக சென்ற படகு பங்களாதேஷ் பகுதியில் விபத்துக்குள்ளாகி 9 அதிகாரிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Madawala 




கடந்த வாரம் 21 சிறுவர்களின் உயிரைக் குடித்த மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மத்ரசா பாடசாலையில் அதிகாலை இடம்பெற்ற தீவிபத்து திட்டமிட்ட வன்செயல்' என மலேஷிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் மின் ஒழுக்கு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்டாலும் பின்னர் விசா ரணைகளில் இது மத்ரசாவுக்கு வெளியே உள்ள சிறுவர் குழுவினால் வஞ்சம் தீர்க்கப்பட்ட நிகழ்வென்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் 11 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட ஏழு சிறுவர்களை மலேஷிய பொலிசார் கைது செய்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள் என பெரும்பாலாளோர் வாகனத்திருட்டு மற்றும் சமூகவிரோத செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுவர் கொண்ட இக்குழுவுக்கும் மத்ரசா மாணவர்களுக்குமிடையில் இருந்து வந்துள்ள நீண்டகால கசப்புணர்வுகளே இந்த வன்செய லுக்கு அடிநாதமாக அமைந்துள்ளன என விசார ணைகளில் தெரிவந்துள்ளது மத்ரசா மாணவர்களில் சிலர் தம்மை பட்டப் பெயர் சூட்டி அழைத்து தொடர்ந்து கேலி செய்து வந்ததாகவும் இதனால் எரிச்சலுற்ற சிறுவர்கள் அதற்கு வஞ்சம் தீர்க்கும் வகையிலே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த விடுதி அறையை பற்ற வைத்ததாக கைது செய்யபட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்


விடுதியினுள் நுழைந்து மாணவர்களின் கைத்தொலைபேசிகளை திருடுவதாகவே திட்டம் போடப்பட்டுள்ளது.

பின்னர் சிறுவன் ஒருவனின் யோசனைப் படி நெருப்பு வைக்கும் யோசனை முன்வைக்கபட்டது. இதற்காக குறித்த தினம் மத்ரசா வளாகம் அருகில் அதிகாலை 4.30 மணிக்கு பெற்றோல் கொள்கலன் மற்றும் சமையல் எரிவாயு கொள்கலனுடன் அக்குழு திருட்டுத்தனமாக பாடசாலை யினுள் நுழைந்து மூன்றாம் மாடிக்கு சென்று நெருப்புவைத்தது
விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தீவிபத்து நடந்த அன்றிரவு சந்தேகத்துக்கிடமான வகையில் மத்ரசா அருகே நடமாடித் திரிந்த சிறுவர் குழு ஒன்று சிசிடிவி கெமராவில் பதிவாகியதைத் தொடர்ந்தே பொலிசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.


மாடிக்கு கொண்டுசெல்லப்பட்டு, பற்றவைக் கப்பட்டு செயற்கையாக தீவிபத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கைதுசெய்யப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் தெரிவிக்கின்றன.

மூன்று மாடிகளைக் கொண்டதாருல் குர்ஆன் இத்திபாக்கியாஹ்" எனும் இந்த மத்ரஸாவில் மூன்றாம் மாடியில் மாணவர்கள் உறங்கும் விடுதியில் தீ பரவ ஆரம்பித்துள்ளது. எனினும், இந்த மாடியில் இருந்து வெளியேறுவதற்கான ஒரே ஒரு வாயிலும் அடைக்கப்பட்டு இருந்தமையால் அனர்த்தம் மிகைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இரும்பு யன்னல் கம்பிகளைப் பற்றிப் பிடித்தவாறு, தீப்பற்றி எரியும் விடுதிக்குள் சிக்குண்ட மாணவர்கள்
உதவிக்கு வருமாறு கூக்குரலிட்டு கதறிய அழு குரல்கள் இன்னும் காதுகளில் ஒலிப்பதாக நேரில் கண்ட அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

"தீப்பற்றி எரியும் மூன்றாம் மாடியில் அமைந் துள்ள விடுதிக்குள் வெளியேற முடியாதவாறு மாட்டிக் கொண்ட மாணவர்கள் யன்னல் கம்பி களை உடைத்து வெளியேறும் பொருட்டு கம்பி களை கால்களால் எட்டி உதைப்பதையும் பிஞ்சுக்கைகளை ஆட்டி உதவிக்கு எம்மை அழைப்பதையும்
கண்டேன்.

நானும் எனது அயலவர்களும் ஓடிச்சென்று அவர்களை மீட்க முயன்றோம். எனினும் எங்களால் அடைய முடியவில்லை. அதற்குள் எல்லாம் நடந்தாகி விட்டது." என மத்ரசா அருகே வசிக்கும் ஷாஹிர்மான் ஷஹ்ரில் தான் நேரில் கண்ட காட்சி களை விவரிக்கின்றார் "

நாம் வந்து சேர்ந்தபோது கட்டிடத்தின் 90 வீத மான பகுதிகள் பற்றி எரிந்துகொண்டிருந்தன உள்ளிருந்து மாணவர்கள் கதறும் மரண ஒலங்களை கேட்க முடியுமாக இருந்தது. கீழ் மாடியில் இருந்து ஐந்து சிறுவர்களை காப்பாற்ற முடியுமாக இருந்தது உண்மையில் அது மிக கொடூரமான அனுபவம்" என தீயணைப்பு மீட்புக் குழுவின் ஊழியர் ஒருவர் தெரிவிக்கின்றார். "ஒன்றன் மீது ஒன்று அடுக்கப்பட்ட வகையில் எரிந்து கருகிய உடல்களையே மீட்க முடியுமாக இருந்தது. இரும்பு யன்னல் கம்பிகளை உடைத்து வெளியேற சிறுவர்களால் முடியவில்லை

துரித வெளியேற்ற படிகளின் வாயிலை அடைத்த வாறு தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்தது. மத்ரஸா கட்டிடத்தில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதி என்று நினைக்கிறேன் என தீயணைப்பு மீட்புக்குழு அதிகாரி ஜாஹித் தெரிவிக்கின்றார்

கருகிய உடல்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அடையாளம் காணப்பட்டு வருவதாக கோலாலம்பூர் பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரி சுப்பிரமனியம் தெரிவிக்கின்றார்

மாணவர்களின் கொடூர மரணம் எல்லோர் மனதையும் உலுக்கியுள்ள அதேநேரம் மஷாவனி எனும் 29 வயது நிரம்பிய இளம் விதவைக்கு இது மும்மடங்கு பேரிழப்பாகும். மரத்தி லிருந்து விழுந்தவரை மாடேறி மிதித்தாற்போல 8 வருடங்களுக்கு முன்னர் கணவரை இழந்த மஷா வணி இக்கோரச் சம்பவத்தில் ஷயாபித் ஹைகல் (வயது 13), ஹாபிஸ் இஸ்கந்தர் (வயது 11).ஹாரிஸ் இஹ்வான் (வயது 10 ஆகிய தனது 3 மகன்களையும் இழந்து நிர்க்கதியாகியுள்ளார்.

கணவரின் இறப்புக்கு பின்னர் மறுமணம் செய்துகொள்ளாது உறவினர்களின் தயவுடன் மூன்று மகன்களையும் முறையாக வளர்ப்பதிலேயே கண் ணுங்கருத்துமாக இருந்துவந்துள்ள மஷாவனிக்கு மகன்களின் அகால மரணச் செய்தி பேரதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை
இது தொடர்பில் அப்பெண்மணியின் சகோதரி ரொஸ்னானி நூர் கூறும்போது "எட்டு வருடங்க ளுக்கு முன்னரே கணவனை இழந்து விட்டார் தற்போது தனக்கென வாழ்வின் அர்த்தமாய் இருந்த மூன்று மகன்களையும் ஒரேயடியாய் இழந்து தவிக்கும் என் சகோதரிக்கு எப்படி ஆறுதல் கூறு வதென்றே தெரியவில்லை. தன் பிள்ளைகளின் கருகிய உடல்களை கண்ணால் பார்ப்பதற்கு என் சகோதரிக்கு சக்தியில்லை. நான்தான் உடல்களை அடையாளம் காண்பித்தேன்.

ஒட்டுமொத்தமாய் இடிந்து போயுள்ளோம். இச்சோதனைக் கட்டத்தை கடந்துதான் ஆக வேண்டும்." என்கிறார் மஷாவணியின் மற்றுமோர் உறவினர் அலிஸா இது தொடர்பில் விவரிக்கும்போது "மஷாவனியின் கணவரின் இறப்புக்கு பின்னர் நாம்தான் மூன்று மகன்க ளையும் பராமரித்து வந்தோம்சம்பவத்திற்கு முதல் நாள் எனது தாயுடன் ஹாபிஸ் இஸ்கந்தர் தொலையேசியில் தொடர்புகொண்டிருந்தான்.

எங்களுடன் விடு முறையைக் கழிக்க விரும்புவதாகவும், தன்னையும் சகோதரர்களையும் விடுமுறைக்கு வீடு அழைத்துச் செல்லுமாறு வேண்டியிருந்தான். எங்களுடன் விடு முறையை கழிக்கவென நாம் சனிக்கிழமை அவர் களை அழைத்துச் செல்ல வருவதாக கூறினோம் மிகவும் சந்தோஷப்பட்டான். இதற்கிடையில் இக்கோரச் சம்பவம் நடைபெறும் என கனவிலு நினைத்துப் பார்க்கவில்லை."

ரொட்டித் துண்டை ஊட்டி விட்டேன்; அமீன் அஷ்ரபின் தாயின் கண்ணீர்க் கதை சம்பவம் நடைபெற்ற தினத்துக்கு முதல் நாள் தாருல் குர்ஆன் இத்தியாகியாஹ் மத்ரசா பாடசா லையில் பயின்று வந்த தனது மகன் அமீன் அஷ்ரபை (வயது 11) சந்தித்து உரையாடிய நூர்ஹயாதி எனும் பெண்மணி இறுதிச் சந்திப்பு குறித்து இவ்வாறு விவ ரிக்கிறார் "எனது மகனுக்கு கோழி இறைச்சி கறியுடன் ரொட்டி என்றால் அலாதிப் பிரியம் அதனால் வீட் டிலிருந்தே மகனுக்கென விசேடமாக சமைத்து கொண்டு சென்றேன். ஒரு சில ரொட்டித் துண் டுகளை எனது கையால் நானே ஊட்டி விட்டேன் அவனும் விருப்பமாகக் காப்பிட்டான். சிறிது நேரம் உரையாடி விட்டு ஓடிச் சென்று தன் கைகளால் எழுதப்பட்டதுண்டுச் சீட்டொன்றைதந்தான் அதில் தான் மத்ரசா பாடசாலையில் மிகவும் சந்தோ ஷமாக இருக்கின்றேன். எதிர்காலத்தில் நான் ஒரு ஹாபிஸாக (குர்ஆனை மனனமிட்டவர்) வர விரும் புகின்றேன். அதன் மூலம் எங்கள் குடும்பத்தினரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வேன்' எனவும் எழு தப்பட்டிருந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் நாம் எமது மகனை இந்த மத்ரஸாவில் சேர்த்தோம் மகனின் கருகிய உடலைக் காணவா?"
மத்ரசா கட்டிடம் தீ அபாயம் குறித்த சட்ட நியமங்களை பேணியிருக்கவில்லை தீஅனர்த்தம் நிகழ்ந்த "தாருல் குர்ஆன் இத்தி பாக்கியாஹ்" மத்ரசா பாடசாலை அல்குர்ஆனை மனனமிட்ட மாணவர்களை உருவாக்குதல், இஸ் லாமிய நெறிமுறைகளை பயிற்றுவித்தல் நோக்கின் பொருட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமிய கல்வி நிலையமாகும் இக்கட்டிடத்தின் தகுதிகாண் அனுமதிப்பத்திரங்கள் கூட இன்னும் உரிய அதிகாரிகளினால் மேற்பார்வை செய்யப்பட்டிருக்கவில்லை.

தீ அபாயம் தொடர்பில் துரித தீயணைப்பு கருவி, உபகரணங்கள் எதையும் இக்கட்டிடம் கொண்டிருக்கவில்லை பாடசாலையில் புனர்நிர்மானப் பணிகள் நடை பெற்றுக் கொண்டிருப்பதால் ஆபத்துக் காலங் களில் அவசரமாக வெளியேறும் பொருட்டு அமைக்கப்படும் துரித வெளியேற்ற வாயிலை அடைத்தவாறு தடுப்புச் சுவர் ஒன்று தற்காலிகமாக எழுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக தீ பரவ ஆரம்பிக்கும்போதே மாணவர்களால் துரிதமாக வெளியேற முடியாமற் போயுள்ளது.

இந்நிலையில் இக்கட்டிடத்தில், நிர்வாகம் தனது கல்விச் செயற்பாடுகளை தொடங்கியிருக்கக் கூடாது என குற்றம்சாட்டப்படுகிறது. பாடசாலை நிர்வாகம் மீது சட்டநடவடிக்கைகள் தொடரப்பட்டுள்ளதாக மலேஷியா பொலிஸ் உயரதிகாரி அமர்னாத்சிங் தெரிவிக்கின்றார் அல்குர்ஆனை மனனமிடல் தொடர்பாக 5-18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் பயிலும் பதிவுசெய்யப்பட்ட519 மதரசாக்கள் மலேஷியாவில் இயங்கி வருகின்றன. மேலும் பதிவுசெய்யப்படாது பல மத்ரசாக்கள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற இவ்வகை மதரசா பாடசாலைகள் கல்வி அமைச்சினால் நெறிப்படுத்தப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ஹஸன் இக்பால்- விடிவெள்ளி

MARI themes

Powered by Blogger.