Showing posts with label Sri Lanka. Show all posts



இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இலங்கை பீல்டர் ஏமாற்ற, இந்திய கேப்டன் விராட் கோலி, 5 ரன்கள் கொடுக்கும்படி கேட்டார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுருண்டது.


இந்நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்த போது, இலங்கையின் கேப்டன் சண்டிமால், பந்தை பிடிக்காமலேயா பிடித்து வீசுவது போல சைகை செய்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் சண்டிமால் சுதாரித்துக்கொண்டார்.

இதைப்பார்த்த களத்தில் இருந்த அம்பயர்கள் முதல் முறை என்பதால், சண்டிமாலை வெறும் எச்சரிக்கையுடன் விட்டனர். ஆனால் இதை பெவிலியனில் இருந்து கவனித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ஐசிசி., யின் புதிய விதிமுறைப்படி இந்திய அணிக்கு 5 ரன்கள் வழங்கும்படி கையால் சைகை காட்டினார்.




காலியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களின் பொறுமையை மீண்டும் ஒரு தடவை சீண்டிப் பார்க்கும் செயலாகும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் தொடர்பாக அரசின் உயர்மட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் தென் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தான் தொலைபேசியில் உரையாடி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான இந்தத் திட்டமிட்ட தாக்குதலின் பின்னணியை அரசு கண்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவும், அரசு முன்வர வேண்டும் என்று அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.



உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இலங்கையின் மருத்துவ துறைக்கு உதவ முன்வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பிரபல அமெரிக்க வர்த்தகரும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகருமான பில் கேட்ஸ்சுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, இந்த உதவியினை வழங்க அவர் முன்வந்துள்ளதாக அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

சுகாதாரம் தொடர்பாக அபுதாபியில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையில் சுகாதாரத்தின் மேம்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாக பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சுகாதாரத்தின் மேம்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் அதற்கு உதவ தாம் தயாராகவுள்ளதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



இலங்கை ரக்பி சம்மேளனமானதுஇ 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை ரக்பி அணியை பயிற்றுவிக்கும் பொறுப்பை ரஜீவ் பெரேரா மற்றும் இசிபதன கல்லூரி ரக்பி அணியின் தற்போதைய பயிறுவிப்பாளரான லசந்த டி கொஸ்தா ஆகியோருக்கு வழங்கியுள்ளது. எதிர்வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி தொடரை கருத்திற்கொண்டு இந்நியமனங்கள் இடம்பெற்றுள்ளது.

இவ்வருடம் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி தொடரானது புதிய முறையில் நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் மட்டுமே முதற் தர பிரிவில் விளையாடவுள்ளதுடன்இ சைனீஸ் தாய்பே அணி விளையாடவில்லை. ஆதலால் இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள்இ தத்தமது சொந்த நாட்டில் இரண்டு போட்டிகளில் பலப் பரீட்சை நடாத்தவுள்ளன.

இலங்கையில் முதலாவது போட்டி டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடுஇ தொடர்ந்து இரண்டாவது போட்டி 16 ஆம் திகதி ஹொங்கொங் நாட்டில் நடைபெறவுள்ளது.

நீண்ட காலமாக தேசிய அணியில் பிரதி பயிற்றுவிப்பாளராக கடைமையாற்றும் பெரேராஇ இவ் இளம் அணியை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்வதற்காக எதிர்பார்த்திருக்கிறார். ஹெவலொக் ரக்பி கழகத்தின் முன்னாள் தலைவரான இவர்இ இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கழக மட்ட போட்டிகளில் சம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் ஓய்வு பெற்றார். எனினும் மறுபடியும் பயிறுவிப்பாளராக ரக்பி களத்திற்குள் நுழைந்தார்.

கடற்படையை மூழ்கடித்த CR&FC தொடரும் கண்டி அணியின் வெற்றியோட்டம்

பலமுறை இலங்கை தேசிய ரக்பி அணியின் முகாமையாளராக பெரேரா கடமையாற்றியுள்ளதோடு, 2016 ஆம் ஆண்டு கெவின் டிக்சன் தலைமையில் ஆசிய 20 வயதிற்கு உட்பட்ட ரக்பி தொடரில் சம்பியனான இலங்கை அணியின் பிரதி பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நிறைவு பெற்ற ஆசிய அணிக்கு 7 பேர் கொண்ட ரக்பி தொடரின் ஒரு அங்கமாகவும் இவர் காணப்பட்டார்.

முதன் முறையாக தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், பயிறுவிப்பாளரான லசந்த கொஸ்தாவிற்கு இது சவாலானதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இசிபதன கல்லூரியின் பழைய மாணவரான இவர், பலமுறை இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றவர் ஆவார். தான் விளையாடும் காலத்தில் ப்ளை ஹாப் நிலையில் விளையாடிய இவர், இலங்கை அணிக்காக பல வெற்றிகளைத் தேடித்தந்துள்ளார்.

இசிபதன கல்லூரியின் பயிறுவிப்பாளராக தற்போது கடமையாற்றும் இவர், ரக்பி லீக் மற்றும் மைலோ நொக் அவுட் போட்டிகளில் இசிபதன கல்லூரியை இரண்டாம் இடத்திற்கு அழைத்து சென்றவர் ஆவார்.

ரஜீவ் பெரேரா மற்றும் லசந்த கொஸ்தா ஆகிய இருவரும் இரண்டாம் தரநிலை பயிற்றுவிப்பாளர்கள் என்பதோடு, தற்போது 3 ஆம் தரத்தை நோக்கி பயணித்துக்கொண்டு இருப்பவர்கள் ஆவர்.

இவற்றை உயர் நிலை அதிகாரியான இந்தி மரிக்கார் கண்காணிக்கவுள்ளதோடு, தற்போது இத்தொடரிற்கான பயிற்சி குழாமை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இப்பயிற்றுவிப்பாளர்கள் மீது, இலங்கை இளையோர் அணியை கனிஷ்ட ரக்பி உலக சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் சுமை சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை அணியின் கடந்த வருட பெறுபேறுகள் சிறப்பானதாக அமையவில்லை. கடந்த வருடம் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்ற இலங்கை அணியானது 3 ஆம் இடத்தையே பெற்றுக்கொண்டது. இவ்வருடம் இலங்கை அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ளதால், வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன.

thepapare


கொச்சியில் இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கோலாகலமாக நேற்று தொடங்கியது.

கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் அட்லெடிகோ டி கொல்கத்தா ஆடிய முதல் போட்டி டிராவில் முடிந்தது.

ஐ.எஸ்.எல்யின் நான்காவது சீசனான இந்த தொடரில், சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் உள்ளிட்ட பத்து அணிகள் பங்கேற்றுள்ளன.

கொச்சியில் உள்ள நேரு மைதானத்தில் நடந்த தொடக்க விழாவில், இந்தி நடிகர் சல்மான்கான், மம்முட்டி, சச்சின் டெண்டுல்கர், கத்ரீனா கைஃப் ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், சல்மான்கானும், கத்ரீனா கைஃப்பும் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.


அதன் பின்னர், மம்முட்டி கால்பந்தினை போட்டி ஒருங்கிணைப்பாளர் நிதா அம்பானியிடம் வழங்க போட்டி தொடங்கியது.



இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரு அணி கோல் கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டதால் கோல் ஏதும் விழவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

ஐ.எஸ்.எல் தொடரின் முதல் போட்டி எந்த அணிக்கும் வெற்றி இல்லாமல் டிராவில் முடிவது இதுவே முதல் முறையாகும்.



இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கையின் சுரங்கா லக்மல் அபூர்வ உலக சாதனையை படைத்துள்ளார்.

இலங்கை - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 74 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கடுமையான மழை காரணமாக இப்போட்டியில் மொத்தமாகவே, இரண்டு நாட்களிலும் சேர்த்து 32.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

இதில் முதல்நாளில் 6 ஓவர்கள் வீசிய இலங்கை வீரர் லக்மல் ஒரு ஓட்டம் கூட விட்டுக் கொடுக்கவில்லை.

இரண்டாம் நாள் தொடர்ந்து பந்து வீசிய லக்மல் தனது 47வது பந்தில் தான் முதல் ஓட்டத்தை விட்டுக் கொடுத்தார்.

இதன் மூலம் முதல் ஓட்டத்தை விட்டுக்கொடுக்கும் முன் அதிக பந்துகளை கட்டுப்படுத்திய பந்துவீச்சாளர் என்ற புதிய உலக சாதனையை லக்மல் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 2001-ல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டெய்லர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 40 பந்துகள் வரை கட்டுபடுத்தியதே சாதனையாக இருந்த நிலையில் லக்மல் அதை முறியடித்துள்ளார்.



புதிய அர­சியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூ­கத்தின் முதுகின் மீது நிரந்­த­ர­மான அடிமைச் சாச­ன­மொன்று எழு­தப்­படும் அபாயம் இருப்­ப­தாக அஞ்­சு­கிறோம் என்று அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.
பெண் எழுத்­தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீ.பி. எழு­திய “நான் மூச்­ச­யர்ந்த போது” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்­தளை ஹூணுப்­பிட்டி சாஹிரா மகா வித்­தி­யா­ல­யத்தில் நேற்றுமுன்தினம் நடை­பெற்றது. அந் நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு எச்­ச­ரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தேர்தல் முறை மாற்றம், புதிய யாப்பு உரு­வாக்கம், நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை ஒழிப்பு ஆகிய மூன்று விட­யங்­களும் முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­ளவில் பாதிப்­பான, ஆபத்­தான நிலை­யையே ஏற்­ப­டுத்தும் என நாம் கரு­து­கிறோம். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை மாற்றி சிறு­பான்மை சமூ­கத்தின் வாக்­கு­களை செல்­லாக்­கா­சாக மாற்­று­வ­தற்­கான முயற்சி மிக வேக­மாக நடந்­தேறி வரு­கின்­றது. அத்­துடன் கடந்த காலங்­களில் பாரா­ளு­மன்ற முறை­களில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட மாற்­றங்கள் போல, மீண்டும் இந்த முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வதற்­காக தேர்தல் முறையை மறு­சீ­ர­மைக்க வேண்­டு­மென அரசு வரிந்து கட்டிக்கொண்டு நிற்­கின்­றது.

முஸ்லிம் சமூ­கத்­தி­னது பாரிய பங்­க­ளிப்­பி­னாலும் பல்­வேறு அர்ப்­ப­ணிப்­புக்­க­ளி­னாலும் நாம் விரும்பி உரு­வாக்­கிய நாட்டுத் தலை­மைகள் இவ்­வா­றான புதிய முயற்­சி­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தனால், அதன் மூலம் நமக்கு வரப்­போகும் ஆபத்­துக்கள் குறித்து நாம் கண்­தி­றந்து பார்க்­காமல் கண்­மூ­டித்­த­ன­மா­கவே இருக்­கின்றோம்.

சிறிய பிரச்­சி­னை­க­ளுக்­காக ஊருக்கு ஊர், பிர­தே­சத்­துக்குப் பிர­தேசம் என ஏட்­டிக்குப் போட்­டி­யாக அடி­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றோ­மே­யொ­ழிய நமக்கு முன்னே வந்து நிற்கும் ஆபத்­துக்கள் தொடர்பில் எந்­த­வி­த­மான அக்­க­றையும் காட்­டாமல் இருப்­பதுதான் வேத­னை­யா­னது. அறி­வுள்ள, ஆற்­ற­லுள்ள, பண­ப­ல­முள்ள சமூ­க­மாக முஸ்லிம் சமூகம் பார்க்­கப்­ப­டு­கின்ற போதும் இவ்­வா­றான விட­யங்­களில் அலட்டிக் கொள்­ளாமல் இருப்­பது துர­திர்ஷ்­ட­மா­னதே. சிறிய கட்­சியின் தலைவன் என்ற வகை­யிலும் சிறு­பான்மை சமூ­கத்தைச் சார்ந்த கட்­சி­யொன்றின் பொறுப்­பாளன் என்ற வகை­யிலும் நாம் மிகவும் நொந்து போய் இருந்­தாலும் இந்த ஆபத்­துக்­களை எவ்­வாறு முறி­ய­டித்து, சமூகம் சார் வெற்­றி­களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற அதீத முயற்­சி­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்றோம்.

ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள இளை­ஞர்­களும் தமிழ் இளை­ஞர்­களும் ஆயு­த­மேந்­திய போதும் முஸ்­லிம்கள் அமை­தி­யா­கவே வாழ்ந்­தனர். ஜன­நா­யக வழி­யையே தேர்ந்­தெ­டுத்­தனர். நமது அர­சியல் முன்­னோ­டிகள் கற்­றுத்­தந்த வழி­மு­றை­களை பின்­பற்­றியே ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் எப்­போதும் ஒத்­து­ழைத்து வந்­தனர், வரு­கின்­றனர். இந்த யதார்த்­தத்­தை அனை­வரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்ச் சகோ­த­ரர்கள் மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக அர­சியல் தீர்வு ஒன்றை தேடி நிற்கும் பின்­ன­ணி­யிலும், அந்த கோரிக்­கையை எவ்­வாறு நிறை­வேற்­று­வ­தென்ற ஆழ­மான சிந்­த­னையில் அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்டு வரும் சூழ்­நி­லை­யிலும் முஸ்­லிம்­களின் சவால்­களை வென்­றெ­டுக்க வேண்­டிய நிலை நமக்கு நேரிட்­டுள்­ளது.

கல்வி, பொரு­ளா­தார, வாழ்­வா­தார மற்றும் மீள்­கு­டி­யேற்ற பிரச்­சி­னை­களைத் தீர்க்கும் நோக்கில் எமது கட்சி பல கட்­ட­மைப்­புக்­களை வைத்துக்கொண்டு நேர்­மை­யுடன் முன்­னெ­டுத்துச் செல்­கின்­றது. எனினும் இந்த பய­ணத்தை தடுப்­ப­தற்­காக பல முனை­க­ளிலும் அம்­புகள் எய்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. சமு­தாயம் சார்ந்­த­வர்­களின் அம்­பு­களும் சிங்­களப் பேரி­ன­வா­தி­களின் அம்­பு­களும், தமிழ்ப் பேரி­ன­வா­தி­களின் அம்­பு­களும் வெவ்வேறு வடி­வங்­களில் பல்­வேறு கோணங்­களில் இருந்தும் நமக்கு எறி­யப்­பட்ட போதும் இறை­வனின் உத­வி­யினால் அவற்­றை­யெல்லாம் முறி­ய­டித்துக்கொண்டு முன்­னேறும் சக்­தியை இறைவன் தந்­துள்ளான்.

சமூ­கத்­துக்கு நேர்ந்­துள்ள ஆபத்­துக்­களை வெளியில் பேசினால் ஆட்­சியை தொலைக்­கப்­பார்க்­கிறார், முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் ஒப்­பந்தம் மேற்­கொண்டு விட்டார், நல்­லாட்­சியை வீட்­டுக்கு அனுப்ப துடிக்­கின்றார் என்­றெல்லாம் கதை­ய­ளந்து எமது குரல்­வளையை நசுக்­கு­வ­தற்கு எத்­த­னிக்­கின்­றனர் என்றார்


ஏ9 வீதியில் வாகன விபத்து : மாணவன் வைத்தியசாலையில்

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக நேற்று (15.11.2017) மதியம் 2.45மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவனோருவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,


வவுனியா மத்திய மகா வித்தியலாயத்திலிருந்து பாடசாலை மாணவனை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலில் மீது வவுனியாவிலிருந்து கண்டி வீதி நோக்கி பயணித்த கார் தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.


இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவனோருவன் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


-சுடர்-




இலங்கையிலுள்ள தமது உண்மையான தாயை 26 வருடங்களின் பின்னர் ஷெரீ எச்செசன் என்ற பிரித்தானிய பெண் இன்று சந்தித்துள்ளார்.

பிரித்தானி தொழில்நுட்பத் துறையில் பிரபலமான ஷெரீ எச்செசன் என்பவரே தனது தாயை சந்தித்துள்ளார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது ஷெரீ எச்செசனின் உண்மையான தாய் என்பது விஞ்ஞான ரீதியாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஷெரீ எச்செசனின் தாயை கண்டறிவதற்காக முன்னெடுக்கப்பட்ட மரபணு பரிசோதனையின் முடிவு நேற்றிரவு வெளியானது.

ஷெரீ எச்செசனின் தாயை கண்டறிவதற்காக முன்னெடுக்கப்பட்ட மரபணு பரிசோதனையின் பின்னர் டிங்கிரி அம்மா என்பவரின் மரபணுவுடன், எச்செசனின் மரபணு 99.99 வீதம் பொருந்துவதாக பிரித்தானியாவின் எல்பா பயோ லேப் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி பிறந்து, நிரோஷிகா என பெயர் சூட்டப்பட்ட ஷெரீ எச்செசன் 15 நாட்களின் பின்னர் அயர்லாந்து பிரஜைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்த பிறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் உதவியுடன் அவரின் உண்மையான தாயை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

பிரித்தானியாவின் 35 பிரபல தொழில்நுட்பவியலாளர்களில் ஒருவரான இவரின் உண்மையான தாய் தொடர்பான முக்கியமான தகவல் கடந்த 17ஆம் திகதி வெளியாகியுள்ளது.
ஷெரி எச்சேசன் அயர்லாந்து பிரஜைகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றில் காணப்படும் பெண், எச்சேசனின் தாய் என நம்பப்பட்டது.

அந்தப் புகைப்படத்திலிருந்த பெண்ணும், கண்டறிந்தவரும் ஒரே உருவத்தை ஒத்திருந்தனர்.

ஷெரியிடமிருந்த பிறப்புச்சான்றிதழில் அவரின் தாயார் டிங்கிரி மெனிகா என குறிப்பிடப்பட்டிருந்ததுடன், கண்டறிந்தவரின் பெயர் டிங்கிரி அம்மா என்பதாகும்.

அந்த சந்தர்ப்பதிலும், டிங்கிரி அம்மாவின் சில புகைப்படங்களை ஷெரீக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உறவுத்தேடல் பயணத்தில் பெற்றுக்கொண்ட தகவல்களும், டிங்கிரி அம்மா வழங்கிய பல்வேறு தகவல்கள் பெரும்பாலும் பொருந்தியிருந்தன.

டிங்கிரி அம்மாவை தமது தாய் என ஷெரி ஏற்றுக் கொண்டாலும், அவரின் சில கருத்துக்களில் தடுமாற்றத்தை அவதானிக்க முடிந்தது.

இந்த உறவுத்தேடல் பயணத்தில் நிபுணர்கள் சிலரும் இணைந்து கொண்டமையால், மரபணு பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரு தரப்பினரின் ஒப்புதலுடன், டிங்கிரி அம்மாவின் மரபணு மாதிரியை, கொழும்பு வடக்கிலுள்ள போதனா வைத்தியசாலையின் உதவியுடன் பெற்று அதனை ஐக்கிய இராஜ்யத்தின் பரிசோதனை நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


பரிசேதனையின் பின்னர், ஷெரீ எச்செசனின் தாய் டிங்கிரி அம்மா என்பது விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஷெரீ எச்செசன் அவரின் உன்மையான தாயை இன்று சந்தித்தார்.




பிரித்தானியாவில் இணையத்தளமூடாக வாக்களிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளில் ஷெரி முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



சந்திக ஹதுருசிங்க , பங்களா தேஷ் கிரிக்கட் அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகி மீண்டும் இலங்கை வருவது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் போது அவர் குறிப்பிட்டதாவது , பங்களாதேஷ் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அதி கூடிய வேதனமொன்றை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் , நாட்டுக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டமை குறித்து நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது செய்தியாளர் ஒருவர் , அப்படியென்றால் சந்திக ஹதுருசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர , அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இதேவேளை , சந்திக ஹதுருசிங்க பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதனை தொடர்ந்து பங்களாதேஷ கிரிக்கட் அதிகாரிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.எவ்வாறாயினும் , எதிர்வரும் 2019ம் ஆண்டு வரை ஹதுருசிங்கவின் ஒப்பந்த காலம் உள்ள நிலையில் இவரின் பதவி விலகல் கடிதம் குறித்த தொடர்ந்தும் பங்களாதேஷ் கிரிக்கட் அதிகாரிகளால் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


பனாகொடையில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் கழகம் மற்றும் இராணுவப்படை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான பிரீமியர் எமர்ஜிங் லீக் போட்டியில் இலங்கையின் சகலதுறை வீரர் அசேல குணரத்ன போட்டிக்கான தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளார்.

இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது கையில் முறிவுக்கு உள்ளான குணரத்ன தனது காயத்தில் இருந்து முழுமையாக சுகம் பெற்றுள்ளார். எனினும் போட்டிக்கான போதிய உடல் தகுதி இல்லாததால் அவரால் எதிர்வரும் இந்திய தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடிக்க முடியாமல்போனது.


“அசேல உடற்தகுதியுடன் இருப்பதோடு மருத்துவ ரீதியிலும் நல்ல நிலையில் உள்ளார். எனினும் அவர் மூன்றரை மாதங்களாக எந்த ஒரு கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. உலகின் மிகச் சிறந்த அணியுடன் ஆடும்போது ஆட்ட திறனில் உச்சத்தில் இருக்கும் வீரர்களே தேவைப்படுகின்றனர். எல்லாம் சரியாக இடம்பெற்றால் அவர் ஒருநாள் அணிக்கு திரும்புவார்” என்று இலங்கையின் தேர்வுக் குழுத் தலைவர் கிரேம் லெப்ரோய் குறிப்பிட்டிருந்தார்.



இந்நிலையில் குணரத்ன 10 ஓவர்கள் பந்து வீசி 43 ஓட்டங்களைக் கொடுத்ததோடு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதேவேளை வலதுகை வேகப்பந்து வீச்சாளர் தரிந்து தர்ஷன 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை கிரிக்கெட் கழகத்தை 200 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இராணுவப்படை விளையாட்டுக் கழகம் ஆட்ட நேர முடிவின்போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப் பெற்றது. குணரத்ன 20 பந்துகளில் 17 ஓட்டங்களை பெற்ற நிலையில் இடது கை சுழல் பந்து வீச்சாளர் நவீன் கவிகாரவின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.

போட்டியின் சுருக்கம்


இலங்கை கிரிக்கெட் கழகம் – 200 (53.3) – சன்ஜன டி சில்வா 56, ஷமீர வீரசிங்க 47, கீத் குமார 32, மெத்சித் ஜயமான்ன 19, தரிந்து தர்ஷன 5/25, கீதால் பெர்னாண்டோ 3/28

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 139/6 (33) – சன்ஜிக்க ரித்ம 24*, லியோ பிரான்சிஸ்கோ 31, துலின டில்ஷான் 34, சிதும் பீரிஸ் 19, அசேல குணரத்ன 17, நவீன கவிகார 4/45



நினைவுகளை அழிக்ககூடிய மற்றும் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய திறனை மனிதர்களுக்கு வழங்ககூடிய மைக்ரோ CHIPனை அமெரிக்காவின் கெர்னல் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

மனிதனின் மூளையில் இந்த CHIP னை பொருத்துவதன் மூலம் மனிதனின் செயல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்று கெர்னல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனால் இன்னும் 15 ஆண்டுக்குள் அனைவரும் சூப்பர் ஹீரோக்கள் போல் செயல்படலாம் என கெர்னல் நிறுவனத்தின் தலைவர் பிரையன் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி இந்த CHIPஐ சாதாரண மக்களும் வாங்கும் வகையில் குறைந்த விலையில் விற்கவுள்ளதாகவும் பிரையன் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.


இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி கிரிக்கெட்டில் மட்டுமின்றி விளம்பரங்களிலும் தூள் கிளப்பி வருகிறார்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது வெற்றி மேல் வெற்றி குவித்து வருகிறது.

கோஹ்லியின் ஆக்ரோசமான ஆட்டமும், அவரது துடுப்பாட்டத்தினாலும் அவருக்கு விளம்பரங்கள் அடுத்தடுத்து வந்தபடி உள்ளன.

இந்நிலையில் விராட் கோஹ்லி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் விளம்பரம் தொடர்பாக புரோமோஷன் போட வேண்டும் எனில் ஒரு பதிவேற்றத்திற்கு 3.2 கோடி ரூபாய் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது கால்பந்து உலகின் ஜாம்பவான கிறிஸ்டியன் ரொனால்டோவுக்கு இன்ஸ்டாகிராமில் போடப்படும் ஒவ்வொரு பதிவேற்றத்திற்கு வழங்கப்படும் சம்பளம் என்று கூறப்படுகிறது.

அதிகபட்சமாக பிரபல காமெடி நடிகரான Kevin Hart தன்னுடைய இன்ஸ்டாகிராமில் விளம்பரத்திற்காக 6.4 கோடிரூபாய் வாங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோஹ்லியை இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16ம் திகதி தொடங்கவுள்ள நிலையில் இன்று இரு அணிகளும் மோதும் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது.

இலங்கை அணியை, சஞ்சு சாம்சன் தலைமையிலான 3-ம் நிலை வீரர்களை உள்ளடக்கிய வாரியத் தலைவர் அணி எதிர்கொள்கிறது.

கொல்கத்தாவில் இன்று தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் முனைப்புடன் செயல்பட இலங்கை வீரர்கள் தயாராக உள்ளனர்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய மண்ணில் இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய அரபு எமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் 2-0 என்ற கணக்கில் வென்றதால் அதே உத்வேகத்துடன் செயல்படவுள்ளது.

இருப்பினும் ஆல் ரவுண்டர் ஏஞ்சலா மேத்யூஸ், மூத்த வீரர் ரங்கன ஹேரத் தவிர மற்ற வீரர்கள் இந்திய மண்ணின் முதன்முறையாக டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளனர்.

இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில், ரங்கன ஹேரத் அனுபவம் வாய்ந்த வீரர், அவர்களுக்கு இது பயிற்சி ஆட்டமாக இருந்தாலும் மிகச்சிறந்த வீரரை எதிர்கொள்ள சிறப்பான வாய்ப்பாக எங்களுக்கு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.



பெண் ஒருவருடன் தொலைபேசியில் காதல் தொடர்பை வளர்த்துக் கொண்ட நபர் ஒருவர் குறித்த பெண்னை கராபிடிய நகரத்திற்கு வரவழைத்து அவரின் கழுத்திலிருந்த தங்க மாலையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

தவளம பகுதியில் வசித்து வரும் 43 வயதுடைய குறித்த பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காலி நகரத்திற்கு பஸ்ஸில் சென்றுள்ளார்.

குறித்த பஸ் பயணத்தில் அறிமுகமான நபர் அவரது தொலைபேசி எண்ணை துண்டுத் தாளில் எழுதி கொடுத்துள்ளார். அந்த பெண் வாங்க மறுக்க தொலை பேசி எண்ணை எழுதிய துண்டுத் தாளை அவரது மடியில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர் குறித்த பெண் வீட்டிற்கு சென்று துண்டுத் தாளில் இருந்த எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தி பேசியுள்ளார். அதன் பின்னர் இருவருக்கும் நட்பு பூத்துள்ளது.

இந் நிலையில் குறித்த பெண் காலி கராபிடிய போதனா வைத்தியசாலைக்கு குறித்த தொலைபேசி நண்பருக்கும் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.


கராபிடிய வைத்தியசாலையில் வைத்து இருவரும் சந்தித்து கொண்டுள்ளனர்.அப்போது குறித்த பெண்ணின் கழுத்தில் 2 பவுண் பெறுமதியான தங்க மாலை இருந்துள்ளது.

அங்கு அந்த நபர் குறித்த பெண்ணிடம் “உன் கழுத்தில் தொங்கும் தங்க மாலைக்கு பெண்டன் ஒன்றை வாங்கி வந்துள்ளேன் அதை என் கைகளாலேயே உன் கழுத்தில் போட்டு விட ஆசைப் படுகிறேன் அதனால் உன் கழுத்திலுள்ள மாலையை கழட்டித் தா” என கூறியுள்ளார்.

தனது காதலர் ஆசையாக தனக்கு பெண்டன் வாங்கி வந்துள்ளார் என நினைத்து கழுத்திலிருந்த தங்க மாலையை கழட்டி கொடுத்துள்ளார்.

மாலையை கழட்டி கையில் கொடுக்கவும் குறித்த நபர் தங்க மாலையினுள் பெண்டனை கோர்த்து தன் வசம் வைத்துக் கொண்டு “வைத்தியசாலையை விட்டு போகும் போது அழகான இடத்தில் வைத்து உன் கழுத்தில் போட்டு விடுகிறேன் அது வரை இந்த மாலை என்னிடம் இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

பிறகு குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரை பார்க்க செல்ல வேண்டும் என கூறி இருவரும் செல்ல முயற்சிக்கும் போது அது பார்வையாளர் நேரமாக இருந்தமையால் அனுமதி அட்டையின்றி உள்ளே செல்ல முடியாது என கூறி தனக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தெரியும் என கூறி தான் மட்டும் உள்ளே சென்று வருவதாக கூறி பெண்னை விட்டுச் சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் குறித்த நபர் வராததனால் அங்கும் இங்குமாக தேடியுள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த பெண் வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






குழந்தை பிரசவிக்க வாய்ப்பில்லாத பெண்களிடம் கடவுள் துணையுடன் பெற்று கொடுக்கப்படும் மருந்துகள் ஊடாக கருவுறலாம் என கூறி இடம்பெற்றுவந்த பாரிய மோசடி மாத்தறை - நாதுல பிரதேசத்தில் தெரியவந்துள்ளது.

பெண்ணொருவரினால் மேற்கொண்டு வந்த இந்த மோசடியை ஹிரு சி.ஐ.ஏ. குழு அம்பலப்பத்தியுள்ளது.

குறித்த பெண்ணிடம் சிகிச்சைப்பெற்று வந்த பல பெண்கள் பாரிய வயிற்று வலிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் பாதிப்படைந்த பெண்கள் பல முறை குறித்த இடத்திற்கு வந்து தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்தும் எதிர்ப்பலைகள் எழுந்த நிலையில், சிகிச்சையளிக்கப்படும் நிலையத்தின் நுழைவாயில் மூடப்பட்டதோடு, முன்னர் சிகிச்சைப்பெற்று வந்த பெண்களுக்கு மாத்திரம் பணம் அறவிடப்பட்டு இரகசியமாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.


இந்நிலையில் இது குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதனை தொடர்ந்து, மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள், ஹிரு சி.ஐ.ஏ குழுவின் ஊடாக குறித்த இடத்தை சுற்றிவளைத்தனர்.

பின்னர் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், கடந்த காலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் அங்கு சிகிச்சைப்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது அங்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகள் தொடர்பில் குறித்த பெண்ணிடம் வினவிய போது, தனக்கு அவை பற்றி எதுவும் தெரியாது என கூறியமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பின்னர் குறித்த பெண்ணும் அவருக்கு உதவிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.



எரிபொருளை விநியோகிக்கும் பணிகளை இன்று பிற்பகலுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவர முடியும் என கனிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

15 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகளவான எரிபொருள் தற்போதையளவில் நாடுமுழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், கொழும்பு மாவட்டத்தின் பெரும்பாலான எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைத்துள்ளதாகவும், வெளி மாவட்டங்களின் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என்றும் எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பெற்றோல் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவின் அறிக்கை அடுத்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கை கையளிக்கப்பட உள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்





-நிலாம்டீன் செய்தி -

ஊடகவியலாளரும் இணையதளமொன்றின் செய்தி ஆசிரியர்களில் ஒருவருமான பஷீர் சப்னி அகமட் நேற்று முந்தினம் இரவு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தமீம் ஆப்தீன் என்பவரால் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் காரியாலயத்தில் வைத்து தாக்கப்பட்டது குறித்து
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அவ்ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸ் நேரடியாகச் சென்று செய்த முறைப்பாட்டை அடுத்து நிலையப் பொறுப்பதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.

குறித்த பிரச்சனை தொடர்பில் நேரடியாக விசாரணை மேற்கொண்ட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் குமார ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து தக்கப்பட்ட ஊடகவியலாளரின் அனுமதியுடன் அந்த இடத்திலேயே தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக்கோரியதன் பின்னர் இதன் பிறகு ஊடக வியலாளர்களைத் தக்குதல் அச்சுறுத்தல் போன்றவை செய்யக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து சமாதானப்படுத்தி முறைப்பாட்டை பதிவு செய்து அனுப்பிவைத்தார்.


குறித்த நபரால் தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் சப்னி அஹமட் குறிப்பிடுகையில் எந்த குற்றமும் செய்யாத நிலையில் மற்றவர்களின் சேவைகளைப் பற்றி தன்னால் பதிவிடப்படும் கருத்துக்களில் வெறுப்படைந்ததன் காரணமாகவே இவர் என்னைத் தாக்கினார்.

ஆனால் இன்றய அரசியலில் சிறந்த இளைஞர்கள் முன்வரவேண்டும் மீண்டும் மீண்டும் அடிபுடி சண்டை போன்ற காடைத்தனமான அரசியல் கலாச்சாரத்தை ஒருபோதும் இளைஞர்கள் ஆதரிக்கக் கூடாது.

அரசியல் நாகரிகம் தெரியாத சரியான முறையில் அரசியலை அறிந்திடாதவர்கள் எல்லாம் அரசியலுக்குள் நுளைந்ததன் பின்னர்தான் அரசியல் சாக்கடை என்ற குப்பைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

ஆனால் நாளைய தலைவர்களை உருவாக்க வேண்டிய அரசியல்வாதிகள் நாளைய இளைஞர்களை வழிகெடுக்கும் நபர்களை வளர்த்தால் எதிர்வரும் இளைஞர் சமுதாயம் கேடுகெட்டு விடுவார்கள் எனவே எந்தக்கட்சியாக இருந்தாலும் நல்லவர்கள் சமூகத்துக்கு நல்ல சேவைகள் செய்யக்கூடியவர்கள் நாளைய தலைவர்களான இளைஞர்களை வழி நடாத்தக்கூடியவர்களை அரசியல்வாதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர அடியாட்களையும் காடையர்களையும் உருவாக்கும் அரசியல்வாதிகளை தெரிவு செய்து மீண்டும் சமூக சீரளிவுக்கு இடமளிக்க கூடாது என்று தெரிவித்த இளம் ஊடகவியலாளர் சப்னி அஹமட் அப்படியான அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.



உஷ்ணமான காலநிலையைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை ஐந்து பந்து வீச்சாளர்களை தமது குழாமில் உள்ளடக்கியிருந்தது. எனினும், இந்திய அணியுடன் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை நான்கு பந்துவீச்சாளர்களைக் கொண்ட ஒரு அணியாகவே எதிர்பார்க்க முடியும் என அணித்தலைவரான தினேஷ் சந்திமால் கூறியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

“பாகிஸ்தானுக்கு எதிராக, நாம் ஆறு துடுப்பாட்ட வீரர்களுடனும் ஐந்து பந்து வீச்சாளர்களுடனும் விளையாடியிருந்தோம். அது உஷ்ணமான காலநிலையில் எமக்கு மிகவும் உதவியாக (ஐக்கிய அரபு இராச்சியத்தில்) அமைந்திருந்தது. எனினும், நான்கு பந்துவீச்சாளர்களுடன் போட்டியொன்றில் வெல்வது இலகுவான விடயமாக அமையாது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிகவும் நல்ல சில பந்துவீச்சாளர்களை அவ்வணி கொண்டுள்ளது, எனவே நாங்கள் சகலதுறை வீரர்களை மையமாகக் கொண்டு போட்டிக்கு தகுதியான அணியை தேர்வு செய்ய வேண்டியுள்ளோம். போட்டிக்கான மைதானத்தை பார்த்த பின்னர் நாம் எமது திட்டங்களை வகுக்கவுள்ளோம்“ என சந்திமால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவுடனான அண்மைய தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் (9-0 என) சொந்த மண்ணில் வைத்து தோல்வியடைந்த இலங்கை அணி, அயல்நாடு ஒன்றில் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய போதிலும் ஒரு நாள் தொடரை 5-0 என பறிகொடுத்திருந்தது.

“எம் எல்லோருக்கும் இந்தியா (டெஸ்ட்) தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது என்பது தெரியும். அத்தோடு கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் முன்னேற்றகரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றனர். நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் சிறந்த முறையில் செயற்பட்டிருந்தோம். ஒரு அணியாகவும் சிறப்பாக செயற்பட்டிருந்தோம். இந்தியாவுடனான இத்தொடரை எமது வீரர்கள் ஒரு சவாலாக எடுத்து அதில் நல்ல முடிவுகளைத் தருவார்கள் என உறுதியாக நம்புகின்றேன்“ என்று சந்திமால் கூறியிருந்தார்.

அத்தோடு இந்தியாவுடன் விளையாடுவது மிகவும் கடினமான விடயம் என்பதையும் ஒப்புக் கொண்ட சந்திமால், இலங்கையின் கடந்த கால முடிவுகளால் மனம் தளரப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

“இது எமக்கு மிகவும் சவாலான ஒரு தொடராக அமையவுள்ளது. எனினும் இங்கிருக்கும் பார்வையாளர்களினால், நாம் இங்கே விளையாட மிகவும் விரும்புகின்றோம். நான் எமது கடந்த காலத்தை பின்னோக்கி பார்க்க விரும்பவில்லை. நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக (டெஸ்ட்) தொடரில் சிறந்த பதிவைக் காட்டியிருந்தோம். தற்போது எமது வீரர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான உரிய தரத்தில் காணப்படுகின்றனர். எனவே இனி நாம் வருகின்ற இந்த சவாலை முகம் கொடுக்கத் தயராகுவோம்“ என சந்திமால் கூறியிருந்தார்.


இந்திய அணியின் நட்சத்திர சுழல் வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோரையும் எதிர்கொள்வதற்கான உத்திகளையும் திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்த சந்திமால் அவற்றை தற்போது அறியத்தரப்போவதில்லை எனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

“ஒரு அணியாக நாம் சில திட்டங்களை எங்களுக்குள்ளேயே பேசி வைத்துள்ளோம். அதனை மைதானத்தில் மாத்திரமே நாங்கள் செயற்படுத்த வேண்டும் அப்போதே அவற்றின் துணையோடு இந்தியாவுடன் போட்டியை வெற்றி கொள்ள முடியும்“ என டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்ட பின்னர் சந்திமால் பேசியிருந்தார்.

1982ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அந்நாட்டு மண்ணில் ஒரு போட்டியில் கூட இதுவரையில் வெற்றி பெறவில்லை. இதனை மாற்றுவதில் நம்பிக்கை கொண்டிருப்பதாக சந்திமால் மேலும் தெரிவித்திருந்தார்.

“இந்திய மண்ணில் இதுவரையில் நாம் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறவில்லை. எங்கள் அனைவருக்கும் அது ஒரு கனவாக காணப்படுகின்றது. இதுவே நாம் கொல்கத்தாவில் விளையாடும் முதல் போட்டியும் கூட. கொல்கத்தா ரசிகர்களின் முன்னாள் விளையாடுவது எமக்கு மகிழ்ச்சியான விடயமே. ஒரு அணியாக நாம் நல்ல முறையில் ஆரம்பித்து அதனை அப்படியே தொடர வேண்டும்“

“இந்தியாவில் எனக்கு இதுவே முதல் (டெஸ்ட்) தொடர். இன்னும் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரைத் தவிர ஏனைய அனைத்து வீரர்களுக்கும் இந்தியாவில் முதல் தொடர் இது என்பதால், ஒவ்வொருவருக்கும் இது நல்ல சவாலாகவே அமையும்.”

ஊடகவியலாளர்கள் எப்படி நீங்கள் அஷ்வின், ஜடேஜா போன்றோரை எதிர்கொள்ளப்போகின்றீர்கள் எனக் கேட்டதற்கு சந்திமால் இவ்வாறு பதிலளித்தார், “அவர்கள் இருவரும் டெஸ்ட் தரவரிசைப்பந்து வீச்சாளர்களில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாகவும் அவர்களது பந்துவீச்சு சிறப்பாக இருக்கின்றது. எங்கள் திட்டங்களை நாங்கள் உங்கள் முன் கூறவிரும்பவில்லை“

“இந்தியாவுடனான போட்டித் தொடரில் வெற்றிகொள்வதற்கு சில திட்டங்களை எங்களுக்குள் இரகசியமாக வைத்துள்ளோம். நாம் இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு எதிராக என்ன திட்டங்களை பயன்படுத்தப் போகின்றோம் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.“



பங்களாதேஷ் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தனது ராஜினாமா கடிதத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு (BCB) கையளித்துள்ளார். அவரது ஒப்பந்தக் காலம் 2019ஆம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையிலேயே இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஜுன் மாதம் கிராஹம் போர்ட் ராஜினாமா செய்தது தொடக்கம் இலங்கைஅணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ள நிலையில், ஹதுருசிங்க2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மூன்று வருட காலத்திற்கு இலங்கைதேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவிருப்பதாகநம்பகமான வட்டாரங்கள் மூலம்  தெரியவருகிறது.



இலங்கை அணியின் நிழல் பயிற்சியாளராக செயற்பட்ட ஹதுருசிங்கவை 2010ஆம்ஆண்டு இலங்கை கிரிக்கெட் சபை அப்பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து அவர் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்தார்.

தான் ஆடிய காலத்தில் ஒரு நிலையான ஆரம்பத் துப்பாட்ட வீரராக செயற்பட்டஹதுருசிங்க இலங்கைக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 10, 861 முதல்தரஓட்டங்கள் மற்றும் 425 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஹதுருசிங்க அதிகஅனுபவம் கொண்ட முதல்தர கிரிக்கெட் வீரராக இருந்தார்.

கிரஹம் போர்டின் விலகலுக்கு பின், களத்தடுப்பு பயிற்சியாளர் நிக் போதாஸைஇடைக்கால தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் சபை நியமித்தது. அவர்இலங்கை அணியின் ஜிம்பாப்வே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்களில்பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாதத்திற்கு 30,000 டொலர்கள் (4.6 மில்லியன் ரூபாய்) சம்பளத்திற்கு ஹதுருசிங்க இணங்கியதாக க்கு மேலும் தெரியவருகிறது. 

இலங்கை கிரிக்கெட் சபை தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா கடந்த வாரம்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியதாவது,

“நாம் ஒருசில பயிற்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். நிக் போதாஸ்உட்பட 3-4 பேர் அடங்குகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் நாம் இந்த நியமனத்தைஉறுதி செய்வோம். அடுத்த ஆண்டு ஜனவரியில் நிரந்த தலைமை பயிற்சியாளர் ஒருவர்இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார். 



ஹதுருசிங்கவின் பயிற்சியின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் பங்களாதேஷ் பெரும்முன்னேற்றம் கண்டது. 2015 உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியபங்களாதேஷ் 2017 சம்பியன்ஸ் கிண்ணத்தின் அரையிறுதி வரை முன்னேற்றம்கண்டது. அதேபோன்று உள்நாட்டில் நடந்த இரு தரப்பு தொடர்களில் பங்களாதேஷ்அணி பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளையும் வீழ்த்தியது.

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தபங்களாதேஷ் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வெளிநாட்டில்இலங்கைக்கு எதிராகவும் இந்த ஆண்டில் முதல் வெற்றியை பெற்றது. 

இலங்கை கிரிக்கெட் சபை கடந்த வாரம் மூன்று ஆண்டு காலத்திற்கு துடுப்பாட்டபயிற்சியாளராக திலான் சமரவீரவின் சேவையை பெற்றது. எதிர்வரும் இந்திய சுற்றுப் பயணம் முதல் அவரது ஒப்பந்தம் ஆரம்பமாகிறது. ஹதுருசிங்கவின் பரிந்துரையின்கீழ் சமரவீர 2016 ஆம் ஆண்டு பங்களாதேஷின் துடுப்பாட்ட ஆலோசகராகபணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. 

புதிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும்ஒரு T20 போட்டி என்பவற்றில் ஆடுவதற்கு அடுத்த ஆண்டு பங்களாதேஷ்சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

thepapare

MARI themes

Powered by Blogger.