Showing posts with label gossip. Show all posts



இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் ஏராளமான முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் பயணியருக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. இந்த நடைமுறைக்கு 2018ல் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஹஜ் பயணியருக்கு மானியம் ரத்து உட்பட பல ஷரத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. 

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்துள்ள கொள்கை வரைவு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவுக்கும்முஸ்லிம்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிசெயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.


அனுராதபுர மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்துவெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒரு பௌத்த கட்சி என்ற பெயர் அண்மைக்காலமாகஇருந்தது அதனால் தமிழ் முஸ்லிம் மக்கள் எம்மிடம் இருந்து தூரமாகினர்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரி கட்சித் தலைமை பொறுப்பேற்ற பின்னர்எம்மிடம் இருந்து பிரிந்து சென்ற தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டும்எம்மோடு இணைந்து எமக்கு பலம் சேர்த்துள்ளனர்.


(எம்.ஏ.றமீஸ்)

கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் எமது முஸ்லிம் சமூகம் ஏமாற்றப்பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக எமது சமூகம் உள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும் வன ஜீவிகளுக்கும் எழுதப்பட்டுள்ளன. இவைகளை எல்லாம் கேட்பார் பார்ப்பாரற்ற சமூகமாகவும் தேர்தற் காலங்களில் மாத்திரம் கோசமிடுகின்ற அரசியல் தலைமைகளைக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது சமூகம் உள்ளது என கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.


ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் சரட்டி நிறுவனத்தின் உதவி மூலம் பொத்துவில் ஹிஜ்ரா நகரில் நவீன முறையில் அமைக்கப்படவுள்ள ஐம்பது வீட்டுத் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

காரிய வள கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.அப்துல் மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தொடர்ந்தும் உரையாற்றுகையில், எந்த சமூகத்திலும் இல்லாதவாறு எங்களை நாங்களே ஏமாற்றுகின்ற கலாசாரத்தினைக் கொண்ட சமூகமாக இன்று வரை எமது சமூகம் இருந்து வருகின்றது.


இறைவன் எமக்களித்திருக்கின்ற அறிவினை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். புரையோடிப் போயிருக்கும் தீய பல விடயங்களிலிருந்து எமது சமூகத்தினைக் காத்துக் கொள்ள நாம் விழிப்படைய வேண்டும். சீரிய சிந்தனைகளை எமக்குள்ளே வளர்த்துக் கொள்ள வேண்டும், கல்வியிலே எமது சமூகம் உயர்வடைய வேண்டும். நல்ல பொருளாதாரத்தினைக் கொண்ட சமூகமாக இந்நாட்டிலே எமது சமூகம் மிளிர்வதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.


எதிர்காலச் சந்ததியினரை சுதந்திரமாகவும், வளம் மிக்க சமூகத்தினராகவும் வாழ வைப்பதற்கான பாரிய வேலைத்திட்டத்தினை நாம் முன்னெடுத்துச் செல்ல அனைவரும் முனைப்புடன் செயற்பட வேண்டும். அதற்காக நாம் அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமைப்பட்டு செயற்படுகின்ற கலாசாரத்தினை ஏற்படுத்த வேண்டும். விட்டுக் கொடுப்புடனும் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் செயற்படுகின்றவர்களாக நாம் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்

இந்த நாட்டில் இனவாதம் மலிந்து கிடக்கின்ற இக்காலத்தில் நல்ல பல திட்டங்களை நாம் கொண்டு வருகின்றபோது உதவிகளைச் செய்யாமல் உபத்திரங்ளைக் கொடுக்கின்ற ஒரு கூட்டத்தினர் இந்நாட்டில் வளரந்து வரும் இத்தருணத்தில் நல்லெண்ணம் கொண்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் புத்தி ஜீவிகளும், கல்விமான்களும் எமது மக்களுக்கான நல்ல பல காரியங்களைச் செய்து கொடுப்பதற்கு முன்வர வேண்டும். அப்போதுதான் நாம் நல்ல பல அபிவிருத்திகளைச் செய்ய முடியும் என்றார்.

பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இங்குள்ள வருமானம் குறைந்த மக்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியதாக உள்ளது.


காலத்திற்குக் காலம் வாய்ப்பேச்சுக்களை மாத்திரம் வீசிச் செல்கின்ற தலைமைகளாக நாம் இருக்க முடியாது. செயற்பாடுகளில் நமது வீரத்தினைக் காட்ட வேண்டும். நாம் மக்களுக்காக நல்ல பல சேவைகளை புரிவதற்காக முன்னின்று செயற்படுகின்றோம் என்றார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் முயற்சியினால் சேஹ் செய்யட் பின் சுல்தான் அல்-நஹ்யன் கிராமம் என்னும் பெயரில் உருவாக்கப்படவுள்ள இவ்வீடமைப்புத் திட்டத்தில் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ள ஐம்பது வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்றும் அதில் பாடசாலை மற்றும் சுகாதார நிலையம் போன்ற வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வின்போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் அப்துல் ஹமீட் அப்துல் பத்தாஹ் காசிம் அப்துல் பத்தாஹ் அல்-முல்லா, டுபாய் சரட்டி அமைப்பின் செயலாளர் நாயகம் அஹமட் மொஹமட் பின் மிஸ்மர் அல்-சம்சி, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தின் முக்கியஸ்தர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், சமூக மட்ட முக்கியஸ்தர்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டனர்.








இன்றைய நவீன உலகில் ஒருவர் சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவார்கள். ஆனால் செல்போன் இருப்பது கஷ்டம்.

அந்த செல்போன்களால் தொலைதொடர்புக்கு பல நன்மைகள் இருந்தாலும், பெண்கள் விஷயத்தில் கெட்ட விஷயங்களே அதிகம் நடக்கிறது.


அதுபோல 13 வயதான 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அவரது பெற்றோர் செல்போன் ஒன்றை வாங்கி தந்தனர்.

எந்த நேரமும் அந்த செல்போனிலேயே நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.

எனவே சந்தேகத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் அந்த செல்போனை ஆய்வு செய்தபோது அதில் ஒரு போல்டரில் ரோஸ் லவ்வர் என்ற போல்டர் கிரியேட் செய்யப்பட்டுள்ளது.

அதனை பார்த்தபோது 28 ஆண்களின் பெயர்களும், அவர்களது போன் நம்பரும் இருந்தது.

இதனை தொடர்ந்து அந்த சிறுமியை பெற்றோர் கண்காணித்தபோது இரவில் அந்த அனைத்து ஆண்களிடமும் போனில் பேசிவிட்டு, சாட்டிங் செய்து விட்டுதான் தூங்குகிறாள் என்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் அவளது பெற்றோர் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.

மகளை கண்டித்து செல்போன் சாட்டிங்கில் இருந்து நிறுத்தி விட்டனர். ஆனால் அந்த 28 ஆண்கள் மூலம் வேறு ஏதாவது ரூபத்தில் பிரச்னை வருமோ என அச்சத்தில் உள்ளனர் அந்த சிறுமியின் பெற்றோர்.


வாய்விட்டு சிரிக்கும்போதே திடீரென அப்படியே தூங்கிவிடும் விசித்திர நோயால் இளம் பெண் ஒருவர் பாதிக்கபட்டுள்ளார்.

பிரித்தனியாவின் nottingham நகரை சேர்ந்தவர் jessica southall .இவருக்கு ஒரு வயது குழந்தை உள்ளது .

jessica,narcolepsy,மற்றும் cataplexy எனப்படும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.


அதாவது எதையாவது நினைத்து அவர் சிரித்தால் அடுத்த நொடியே அவர் தூங்கிவிடுவார்.


தூங்கும் சமயத்தில் அவரது மூளை செயல்பாட்டில் தான் இருக்கும். அருகில் நடக்கும் விசயங்களை அவரால் உணர முடியும்.


ஆனால் எழுந்திருக்க முடியாது. தசைகள் பலமாக இல்லாததால் உடல் சோர்வடைந்து அவருக்கு இப்படி தூக்கம் வந்துவிடுகிறது.


இவருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை அளித்தும் jessica-வுக்கு இந்த நோய் பிரச்சனை தீரவில்லை.


இது குறித்து jessica கூறுகையில் பதினாறு வயதில் இந்த பிரச்சனை ஏற்பட்டது.


உறவினருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் கூறிய ஜோக்கை கேட்டு சிரித்து அப்படியே தூங்கிவிட்டதாக கூறினார்.


தற்போது இது பழகிவிட்டதால் தூக்கம் வரப்போவதை முன்னரே அறிந்து கொண்டு படுக்கை அல்லது தரை பகுதிக்கு சென்று விடுவேன் என jessica கூறியுள்ளார்.



ஆஸ்திரியாவில் பெண் ஒருவரின் புர்காவை பொலிசார் வலுக்கட்டாயமாக கழற்ற கூறி அதை சோதனை செய்தது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள், முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிவதற்கான தடை இன்று அமலுக்கு வந்தது.


இது ஆஸ்திரியாவின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் விதமாகவும், தலைமுடியில் இருந்து, தாடை வரை முகம் முழுமையாக தெரிய வேண்டும் எனவும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சட்டம், முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைகளான புர்கா மற்றும் நிகாப்பிற்கு என்று கூறப்பட்டுள்ளது.


இதற்கு இஸ்லாமிய குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் ZellamSee என்ற கிராமத்தில் பெண் ஒருவர் புர்கா அணிந்திருந்தால், பொலிசார் அவரை வலுக்கட்டாயமாக கழற்றும்படி கூறியுள்ளனர்.


அதைத் தொடர்ந்து பொலிசார் அந்த புர்காவை கழற்றிய பின்னரும் நன்றாக உதறும் படி கூறியுள்ளனர்.


இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தடை செய்யப்பட்டிருந்தாலும் பொலிசார் இப்படி வலுக்கட்டாயமாக அப்பெண்ணின் புர்காவை கழற்றும் படி கூறியது கண்டனத்திற்குரியது என்று எதிர்ப்பு கிளம்பி வருகிறது.


மேலும் மருத்துவ முகமூடிகளுக்கு, கோமாளி போல அலங்காரம் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் சுமார் 150 பெண்கள் முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிகிறார்கள்.


இருப்பினும் தற்போது எடுத்துள்ள நடவடிக்கையால், ஆஸ்திரியாவிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.




தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை மீட்டெடுத்து புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 15ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஊடகவியலாளர்களின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்ட விசேட செயலமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் உள்ளடக்கிய திட்டங்களை ஆராய்ந்து அவற்றை அமுல்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் விசேட ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் உதவியைப் பெற்றுக்கொள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவரான ஹேமக விஜேசூரியவின் தலைமையிலான இக்குழுவில் முன்னாள் தலைவர்களான அநுர தென்னகோன், அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார மற்றும் விளையாட்டு வைத்திய நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய அத்தியட்சகர் லக்ஷ்மன் எதிரிசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

எனினும், இக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான குமார் சங்கக்காரவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மற்றுமொரு நட்சத்திர வீரரான மஹேல ஜயவர்தனவுக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த விசேட குழுவினால் எதிர்வரும் 3 மாதங்களில் கிரிக்கெட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான அறிக்கையை சமர்பிக்கவுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் இதற்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடத்தினைப் பிடித்து பல கிரிக்கெட் ஜாம்பவான்களை உருவாக்கி பலம் பொருந்திய அணிகளில் ஒன்றாக விளங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வருகின்றமை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணி சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளால் இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமன்றி அதிகாரிகளும் பல அழுத்தங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தோல்வி, ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடர் தோல்வி மற்றும் இந்திய அணியுடனான டெஸ்ட், ஒருநாள் மற்றும் T-20 உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தமை விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பின்னடைவை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுப்பதற்கான விசேட செயலமர்வொன்றை நடத்த விளையாட்டுத்துறை அமைச்சு முடிவுசெய்தது. இதற்காக தேசிய விளையாட்டு சபையின் தலைவர் மில்டன் அமரசிங்க, கொழும்பு பல்கலைக்கழக பேராசியர் ரஞ்சித் பண்டார, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்திய அதிகாரி லக்ஷ்மன் எதிரிசிங்க ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழுவொன்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்டது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் இடம்பெற்ற இவ்விசேட சம்மேளனம், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஊடகவியலாளர்களின் பங்குபற்றலுடன் கடந்த சில தினங்களுக்கு முன் கொழும்பில் நடைபெற்றது.

இந்நிலையில் குறித்த சம்மேளனத்தின் பிறகு தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை கொழும்பு பல்கலைக்கழக பேராசியர் ரஞ்சித் பண்டாரவினால் நேற்று முன்தினம் (27) விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, முன்னாள் தெரிவுக்குழு தலைவர் ஹேமக அமரசூரிய மற்றும் அரவிந்தி டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எனவே, குறித்த அறிக்கையை ஆராய்ந்து, இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்காக நீண்ட கால திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து மனிதவள ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொடுக்கமாறு விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளுக்கு பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் காணப்படுகின்ற குறைபாடுகளே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்னடைவை எதிர்நோக்கியுள்ள பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்ட விசேட குழுவொன்று கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டது.

அதன்படி முன்னாள் வீரர்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ள நியமிக்கப்பட்ட இவ் விசேட ஆலோசனைக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சிதத் வெத்தமுனி, ரொஜர் விஜேசூரிய, மஹேல ஜயவர்தன, ஜயந்த செனவிரத்ன, கால்டன் பேர்னார்ட் உள்ளிட்ட முன்னாள் வீரர்களுடன், பாடசாலை கிரிக்கெட் சங்க உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

ரோஹிங்கியா விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ஓக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரியில் இடம் பிடித்திருந்த ஆங் சான் சூ கியின் படம் அகற்றப்பட்டது.

மியான்மரின் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கி. இவர் 1967-ல் லண்டனில் உள்ள செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். ஓக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்குட்பட்ட இந்த கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். இதை தொடர்ந்து கடந்த 1999 முதல் அந்த கல்லூரியில் அவரது புகைப்படம் இடம்பிடித்தது.

நோபல் பரிசு பெற்ற இவரை கடந்த 2012-ம் ஆண்டில் செயின்ட் ஹூக்ஸ் கல்லூரி தனது கல்லூரிக்கு அழைத்து கவுரவித்தது. 

இந்நிலையில், இந்த கல்லூலியின் நுழைவு வாயிலில் இடம் பிடித்திருந்த ஆங் சான் சூ கியின் படத்தை பல்கலைக்கழக நிர்வாகம் அகற்றியுள்ளது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், கண்காட்சியில் வைப்பதற்காக இந்த மாத தொடக்கத்தில் புதிய ஓவியங்கள் கிடைத்துள்ளன. எனவே, ஆங் சான் சூ கியின் படம் அகற்றப்பட்டு பாதுகாப்பாக வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். 

ஆனால், மியான்மர் நாட்டில் அவதிப்பட்டு வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் சூ கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஓக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை கோழைத்தனமானது என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.




கடந்த வாரம் 21 சிறுவர்களின் உயிரைக் குடித்த மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மத்ரசா பாடசாலையில் அதிகாலை இடம்பெற்ற தீவிபத்து திட்டமிட்ட வன்செயல்' என மலேஷிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் மின் ஒழுக்கு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்டாலும் பின்னர் விசா ரணைகளில் இது மத்ரசாவுக்கு வெளியே உள்ள சிறுவர் குழுவினால் வஞ்சம் தீர்க்கப்பட்ட நிகழ்வென்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் 11 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட ஏழு சிறுவர்களை மலேஷிய பொலிசார் கைது செய்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள் என பெரும்பாலாளோர் வாகனத்திருட்டு மற்றும் சமூகவிரோத செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுவர் கொண்ட இக்குழுவுக்கும் மத்ரசா மாணவர்களுக்குமிடையில் இருந்து வந்துள்ள நீண்டகால கசப்புணர்வுகளே இந்த வன்செய லுக்கு அடிநாதமாக அமைந்துள்ளன என விசார ணைகளில் தெரிவந்துள்ளது மத்ரசா மாணவர்களில் சிலர் தம்மை பட்டப் பெயர் சூட்டி அழைத்து தொடர்ந்து கேலி செய்து வந்ததாகவும் இதனால் எரிச்சலுற்ற சிறுவர்கள் அதற்கு வஞ்சம் தீர்க்கும் வகையிலே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த விடுதி அறையை பற்ற வைத்ததாக கைது செய்யபட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்


விடுதியினுள் நுழைந்து மாணவர்களின் கைத்தொலைபேசிகளை திருடுவதாகவே திட்டம் போடப்பட்டுள்ளது.

பின்னர் சிறுவன் ஒருவனின் யோசனைப் படி நெருப்பு வைக்கும் யோசனை முன்வைக்கபட்டது. இதற்காக குறித்த தினம் மத்ரசா வளாகம் அருகில் அதிகாலை 4.30 மணிக்கு பெற்றோல் கொள்கலன் மற்றும் சமையல் எரிவாயு கொள்கலனுடன் அக்குழு திருட்டுத்தனமாக பாடசாலை யினுள் நுழைந்து மூன்றாம் மாடிக்கு சென்று நெருப்புவைத்தது
விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தீவிபத்து நடந்த அன்றிரவு சந்தேகத்துக்கிடமான வகையில் மத்ரசா அருகே நடமாடித் திரிந்த சிறுவர் குழு ஒன்று சிசிடிவி கெமராவில் பதிவாகியதைத் தொடர்ந்தே பொலிசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.


மாடிக்கு கொண்டுசெல்லப்பட்டு, பற்றவைக் கப்பட்டு செயற்கையாக தீவிபத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கைதுசெய்யப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் தெரிவிக்கின்றன.

மூன்று மாடிகளைக் கொண்டதாருல் குர்ஆன் இத்திபாக்கியாஹ்" எனும் இந்த மத்ரஸாவில் மூன்றாம் மாடியில் மாணவர்கள் உறங்கும் விடுதியில் தீ பரவ ஆரம்பித்துள்ளது. எனினும், இந்த மாடியில் இருந்து வெளியேறுவதற்கான ஒரே ஒரு வாயிலும் அடைக்கப்பட்டு இருந்தமையால் அனர்த்தம் மிகைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இரும்பு யன்னல் கம்பிகளைப் பற்றிப் பிடித்தவாறு, தீப்பற்றி எரியும் விடுதிக்குள் சிக்குண்ட மாணவர்கள்
உதவிக்கு வருமாறு கூக்குரலிட்டு கதறிய அழு குரல்கள் இன்னும் காதுகளில் ஒலிப்பதாக நேரில் கண்ட அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

"தீப்பற்றி எரியும் மூன்றாம் மாடியில் அமைந் துள்ள விடுதிக்குள் வெளியேற முடியாதவாறு மாட்டிக் கொண்ட மாணவர்கள் யன்னல் கம்பி களை உடைத்து வெளியேறும் பொருட்டு கம்பி களை கால்களால் எட்டி உதைப்பதையும் பிஞ்சுக்கைகளை ஆட்டி உதவிக்கு எம்மை அழைப்பதையும்
கண்டேன்.

நானும் எனது அயலவர்களும் ஓடிச்சென்று அவர்களை மீட்க முயன்றோம். எனினும் எங்களால் அடைய முடியவில்லை. அதற்குள் எல்லாம் நடந்தாகி விட்டது." என மத்ரசா அருகே வசிக்கும் ஷாஹிர்மான் ஷஹ்ரில் தான் நேரில் கண்ட காட்சி களை விவரிக்கின்றார் "

நாம் வந்து சேர்ந்தபோது கட்டிடத்தின் 90 வீத மான பகுதிகள் பற்றி எரிந்துகொண்டிருந்தன உள்ளிருந்து மாணவர்கள் கதறும் மரண ஒலங்களை கேட்க முடியுமாக இருந்தது. கீழ் மாடியில் இருந்து ஐந்து சிறுவர்களை காப்பாற்ற முடியுமாக இருந்தது உண்மையில் அது மிக கொடூரமான அனுபவம்" என தீயணைப்பு மீட்புக் குழுவின் ஊழியர் ஒருவர் தெரிவிக்கின்றார். "ஒன்றன் மீது ஒன்று அடுக்கப்பட்ட வகையில் எரிந்து கருகிய உடல்களையே மீட்க முடியுமாக இருந்தது. இரும்பு யன்னல் கம்பிகளை உடைத்து வெளியேற சிறுவர்களால் முடியவில்லை

துரித வெளியேற்ற படிகளின் வாயிலை அடைத்த வாறு தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்தது. மத்ரஸா கட்டிடத்தில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதி என்று நினைக்கிறேன் என தீயணைப்பு மீட்புக்குழு அதிகாரி ஜாஹித் தெரிவிக்கின்றார்

கருகிய உடல்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அடையாளம் காணப்பட்டு வருவதாக கோலாலம்பூர் பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரி சுப்பிரமனியம் தெரிவிக்கின்றார்

மாணவர்களின் கொடூர மரணம் எல்லோர் மனதையும் உலுக்கியுள்ள அதேநேரம் மஷாவனி எனும் 29 வயது நிரம்பிய இளம் விதவைக்கு இது மும்மடங்கு பேரிழப்பாகும். மரத்தி லிருந்து விழுந்தவரை மாடேறி மிதித்தாற்போல 8 வருடங்களுக்கு முன்னர் கணவரை இழந்த மஷா வணி இக்கோரச் சம்பவத்தில் ஷயாபித் ஹைகல் (வயது 13), ஹாபிஸ் இஸ்கந்தர் (வயது 11).ஹாரிஸ் இஹ்வான் (வயது 10 ஆகிய தனது 3 மகன்களையும் இழந்து நிர்க்கதியாகியுள்ளார்.

கணவரின் இறப்புக்கு பின்னர் மறுமணம் செய்துகொள்ளாது உறவினர்களின் தயவுடன் மூன்று மகன்களையும் முறையாக வளர்ப்பதிலேயே கண் ணுங்கருத்துமாக இருந்துவந்துள்ள மஷாவனிக்கு மகன்களின் அகால மரணச் செய்தி பேரதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை
இது தொடர்பில் அப்பெண்மணியின் சகோதரி ரொஸ்னானி நூர் கூறும்போது "எட்டு வருடங்க ளுக்கு முன்னரே கணவனை இழந்து விட்டார் தற்போது தனக்கென வாழ்வின் அர்த்தமாய் இருந்த மூன்று மகன்களையும் ஒரேயடியாய் இழந்து தவிக்கும் என் சகோதரிக்கு எப்படி ஆறுதல் கூறு வதென்றே தெரியவில்லை. தன் பிள்ளைகளின் கருகிய உடல்களை கண்ணால் பார்ப்பதற்கு என் சகோதரிக்கு சக்தியில்லை. நான்தான் உடல்களை அடையாளம் காண்பித்தேன்.

ஒட்டுமொத்தமாய் இடிந்து போயுள்ளோம். இச்சோதனைக் கட்டத்தை கடந்துதான் ஆக வேண்டும்." என்கிறார் மஷாவணியின் மற்றுமோர் உறவினர் அலிஸா இது தொடர்பில் விவரிக்கும்போது "மஷாவனியின் கணவரின் இறப்புக்கு பின்னர் நாம்தான் மூன்று மகன்க ளையும் பராமரித்து வந்தோம்சம்பவத்திற்கு முதல் நாள் எனது தாயுடன் ஹாபிஸ் இஸ்கந்தர் தொலையேசியில் தொடர்புகொண்டிருந்தான்.

எங்களுடன் விடு முறையைக் கழிக்க விரும்புவதாகவும், தன்னையும் சகோதரர்களையும் விடுமுறைக்கு வீடு அழைத்துச் செல்லுமாறு வேண்டியிருந்தான். எங்களுடன் விடு முறையை கழிக்கவென நாம் சனிக்கிழமை அவர் களை அழைத்துச் செல்ல வருவதாக கூறினோம் மிகவும் சந்தோஷப்பட்டான். இதற்கிடையில் இக்கோரச் சம்பவம் நடைபெறும் என கனவிலு நினைத்துப் பார்க்கவில்லை."

ரொட்டித் துண்டை ஊட்டி விட்டேன்; அமீன் அஷ்ரபின் தாயின் கண்ணீர்க் கதை சம்பவம் நடைபெற்ற தினத்துக்கு முதல் நாள் தாருல் குர்ஆன் இத்தியாகியாஹ் மத்ரசா பாடசா லையில் பயின்று வந்த தனது மகன் அமீன் அஷ்ரபை (வயது 11) சந்தித்து உரையாடிய நூர்ஹயாதி எனும் பெண்மணி இறுதிச் சந்திப்பு குறித்து இவ்வாறு விவ ரிக்கிறார் "எனது மகனுக்கு கோழி இறைச்சி கறியுடன் ரொட்டி என்றால் அலாதிப் பிரியம் அதனால் வீட் டிலிருந்தே மகனுக்கென விசேடமாக சமைத்து கொண்டு சென்றேன். ஒரு சில ரொட்டித் துண் டுகளை எனது கையால் நானே ஊட்டி விட்டேன் அவனும் விருப்பமாகக் காப்பிட்டான். சிறிது நேரம் உரையாடி விட்டு ஓடிச் சென்று தன் கைகளால் எழுதப்பட்டதுண்டுச் சீட்டொன்றைதந்தான் அதில் தான் மத்ரசா பாடசாலையில் மிகவும் சந்தோ ஷமாக இருக்கின்றேன். எதிர்காலத்தில் நான் ஒரு ஹாபிஸாக (குர்ஆனை மனனமிட்டவர்) வர விரும் புகின்றேன். அதன் மூலம் எங்கள் குடும்பத்தினரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வேன்' எனவும் எழு தப்பட்டிருந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் நாம் எமது மகனை இந்த மத்ரஸாவில் சேர்த்தோம் மகனின் கருகிய உடலைக் காணவா?"
மத்ரசா கட்டிடம் தீ அபாயம் குறித்த சட்ட நியமங்களை பேணியிருக்கவில்லை தீஅனர்த்தம் நிகழ்ந்த "தாருல் குர்ஆன் இத்தி பாக்கியாஹ்" மத்ரசா பாடசாலை அல்குர்ஆனை மனனமிட்ட மாணவர்களை உருவாக்குதல், இஸ் லாமிய நெறிமுறைகளை பயிற்றுவித்தல் நோக்கின் பொருட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமிய கல்வி நிலையமாகும் இக்கட்டிடத்தின் தகுதிகாண் அனுமதிப்பத்திரங்கள் கூட இன்னும் உரிய அதிகாரிகளினால் மேற்பார்வை செய்யப்பட்டிருக்கவில்லை.

தீ அபாயம் தொடர்பில் துரித தீயணைப்பு கருவி, உபகரணங்கள் எதையும் இக்கட்டிடம் கொண்டிருக்கவில்லை பாடசாலையில் புனர்நிர்மானப் பணிகள் நடை பெற்றுக் கொண்டிருப்பதால் ஆபத்துக் காலங் களில் அவசரமாக வெளியேறும் பொருட்டு அமைக்கப்படும் துரித வெளியேற்ற வாயிலை அடைத்தவாறு தடுப்புச் சுவர் ஒன்று தற்காலிகமாக எழுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக தீ பரவ ஆரம்பிக்கும்போதே மாணவர்களால் துரிதமாக வெளியேற முடியாமற் போயுள்ளது.

இந்நிலையில் இக்கட்டிடத்தில், நிர்வாகம் தனது கல்விச் செயற்பாடுகளை தொடங்கியிருக்கக் கூடாது என குற்றம்சாட்டப்படுகிறது. பாடசாலை நிர்வாகம் மீது சட்டநடவடிக்கைகள் தொடரப்பட்டுள்ளதாக மலேஷியா பொலிஸ் உயரதிகாரி அமர்னாத்சிங் தெரிவிக்கின்றார் அல்குர்ஆனை மனனமிடல் தொடர்பாக 5-18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் பயிலும் பதிவுசெய்யப்பட்ட519 மதரசாக்கள் மலேஷியாவில் இயங்கி வருகின்றன. மேலும் பதிவுசெய்யப்படாது பல மத்ரசாக்கள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற இவ்வகை மதரசா பாடசாலைகள் கல்வி அமைச்சினால் நெறிப்படுத்தப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ஹஸன் இக்பால்- விடிவெள்ளி


மன்னிக்கவும், தலைப்பை மட்டும் வாசிக்கும் வாசகர்களுக்கான கட்டுரையல்ல இது. 

சேவைகளை மட்டும் தமது முழுநேரப் பணியாக செய்த நேர்மையான சமூகத் தலைவர்கள் எம்மவிட்டுப் பிரிந்துவிட்டார்கள் நேற்று, வியாபார நோக்கில் அரசியல் செய்யும் குறுநில மன்னர்களைதான் இப்போது நாம் அரசியல் தலைவர்களாக தோலில் தூக்கி மாலைபோட்டு அழங்கரித்துவருகின்றோம். 

பல இலட்சம் ரூபாய் செலவில் விளம்பரங்கள் செய்து, பல கட்சி உறுப்பினர்களின் அன்றாட தொழில் நேரங்களை வீண‌டித்து, பாதைகளை மூடி, பல பொலிஸ் உத்தியோத்தர்களின் சங்கிளித்தொடர் பாதுகாப்புடன் தலைவர் வருகிறார்.................... எதுக்கு...? அடிக்கல் நாட்டு விழாவுக்கு தான்.

 இத்தனை செலவுக்கு பின் நாட்டப்பட்ட 'அடிக்கல்' சில காலங்கள் பின்னால் அடியோடு காணமல் போய் அரசியல்வாதிகளுக்கும் அவர் கட்சிக்கும் அடிமனதிலிருந்து மறந்து போய்விடுகிறது. பாடசாலை, பல்கலைக்கழம், துறைமுகம் என்று பெரும் திட்டங்களை நம் சமூகத்திற்கு சேவையாகச் செய்து தந்துவிட்டு மறைந்த தலைவர்கள் அடிக்கள் நாட்டு விழாக்களை கவனத்தில்கொண்டதில்லை தங்கள் அரசியல் வாழ்வில். 

30 வருடங்கள் கடந்தும் அகதியாக வாழும் நம் சமூகத்திற்கு ஒரு மலசல கூடத்தையாவது நிர்மாணித்துத் தரமுடியாத தலைவர்கள் முழு நாட்டு மக்களுக்கும் கக்கூஸ் கட்டப் போவதாக கதை விடுவது எவ்வளவு அபத்தமான வார்த்தை.....? 

தளபாடங்கள், ஆசிரியர்கள் இல்லா பாடசாலைகளில் நம் குழந்தைகள் கல்வி கற்கும் இந்த நிமிடத்தில் கல்முனையை துபாய் போன்று மாற்றுவேன் என்று வார்த்தையின் / வாக்கின் விபரீதம் தெரியாது வாய் திறந்து வாக்களித்த மக்களை மடயர்களாக்கும் முயற்சி ஒரு சமூகத்துரோகமான செயலாகும். 

வீண் செலவுகளை ஏற்படுத்தும் அடிக்கல் நாட்டு விழாக்களை மறந்துவிட்டு சமூகத்தின் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு ஏற்றாற் போல் சேவைசெய்ய ஒன்றிணையுமாறு தம் தலைவர்களை அன்பாய் அழைக்கின்றேன். மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்



மியன்மாரின் ரக்ஹைன் மாநிலத்தில் இராணுவத்தினர் நடத்தி வரும் அத்துமீறல் நடவடிக்கைகளால் கடந்த 15 நாட்களில் சுமார் மூன்று இலட்சம் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.

பங்களாதேஷிற்கும் மியன்மாருக்கும் இடையே உள்ள இடைவெளி 278 கிலோ மீற்றர்கள்.

இத்தூரத்தை கடக்க கடல் , தரை என இரு வழிகள் உள்ளன. கடல் வழியாக வருகின்றவர்கள் பணத்தைக் கொடுத்து சிறிய படகுகளில் தப்புகின்றனர். 


தரை வழியாக வருகின்றவர்கள் நடந்தே இத்தூரத்தை கடக்க வேண்டியுள்ளது. இரண்டுமே ஆபத்துகள் நிறைந்தவை என்றாலும், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பிவரும் ரோஹிங்யா அகதிகளுக்கு வேறு வழியில்லை.

பங்களாதேஷில் உள்ள காக்ஸ் பஜார் என்ற இடம் இவர்கள் பெரும்பாலும் வந்து சேரக்கூடிய இடமாக உள்ளது. 


1970 முதல் மியன்மாரிலிருந்து வெளியேறிய சுமார் 4 இலட்சம் ரோஹிங்யா அகதிகள் இதன் சுற்றுவட்டார பகுதியிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களில் வந்தோரின் எண்ணிக்கை 290,000. கடந்த செப்டம்பர் 7 அன்று ஐ.நா. அதிகாரிகள் அளித்த தகவலின் படி 270,000 ஆக இருந்த எண்ணிக்கை, அடுத்த ஒரே நாளில் 20,000 பேராக அதிகரித்து 290,000 ஆகியுள்ளது.

தஞ்சமடையும் ரோஹிங்யா அகதிகளில் பெரும்பாலானோர் பத்து நாட்களுக்கு மேலாக உணவின்றி வருவதாகவும் பணம் மற்றும் உணவிற்கான உதவிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் உலக உணவுத் திட்டம் (WFP) கூறியுள்ளது.

ரோஹிங்யா அகதிகளால் கடுமையான சமூக - பொருளாதார - சுற்றுப்புற நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பங்களாதேஷ் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்ற நிலையில், தற்போது அதிகரித்து வரும் ரோஹிங்யா அகதிகளின் எண்ணிக்கை பங்களாதேஷிற்கு நெருக்கடியினை உருவாக்கும் என கூறப்படுகின்றது.

tamilwin


பெண்ணொருவர் பேஸ்புக் மூலம் தொடர்பையேற்படுத்தி 13 ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் வரதட்சணை மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.


இவ்வாறு திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சொத்துக்களை தந்திரமாக வசூலித்த பின்னர் குறித்த பெண் ஆண்களை மிகவும் தந்திரமாக ஏமாற்றி விடுகிறார்.


32 வயதான ஜரியாபார்ன் புயாயய் என்பர் தாய்லாந்தின் நங் ஹாய் மாகாணத்தில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் இவர் பணம் சம்பாதிக்க புதிய முறையை கையாண்டார்.


பெரும்பாலும் திருமணம் செய்யும் ஆணுக்கு பெண் வரதட்சணை வழங்க வேண்டும். ஆனால் தாய்லாந்து பாரம்பரியபடி திருமணம் செய்யும் பெண்ணுக்கு ஆண் வரதட்சணை பணம் வழங்க வேண்டும்.

எனவே பணம் சம்பாதிக்க ஜரியாபார்ன் திருமணம் செய்து வரதட்சணை பணத்தை மோசடி செய்ய திட்டம் தீட்டினாள். 13 ஆண்களை தொடர்ந்து திருமணம் செய்தாள். அவர்களிடம் இருந்து வரதட்சணையாக ரூபா.4 இலட்சம் முதல் ரூ 20 இலட்சம்வரை வசூலித்தாள்.


பணம் மட்டுமின்றி கார் மற்றும் லொறி போன்றவற்றையும் வரதட்சணையாகப் பெற்றாள். பின்னர் ஏதாவது ஒரு காரணம் கூறி அவர்களுடன் சேர்ந்து வாழாமல் விவாகரத்துப் பெற்றாள்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாடடையடுத்து குறித்த பெண் தாய்லாந்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


தனது சொந்த ஊருக்கு வந்த அவள் தனது பெற்றோருடன் சேர்ந்து பழ வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தாள். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 4 ஆண்களை திருமணம் செய்திருந்தாள். அழகிய தோற்றம் கொண்ட அவள் ‘பேஸ்புக்‘ சமூக வலைதளத்தில் தனது போட்டோவை பிரசுரித்து அவர்களை வசியம் செய்து திருமணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



(பிறவ்ஸ்)


முஸ்லிம் அரசியலில் புதிய யுகமாற்றம் நிகழ்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய அழுத்தக்குழுவான ஒரு இளைஞர் படை தேவை. தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களை கேள்விக்குட்படுத்தும் வகையில், அவர்களை பொறுப்புதாரியாக மாற்றுகின்ற ஒரு யுகமாற்றத்துக்கான அறைகூவலை விடுக்கிறேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


இளைஞர் காங்கிரஸ் பேரவை அமைப்பதற்கான முதற்கட்ட செயலமர்வு இன்று (09) கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உரிமைக்கு குரல்கொடுப்பதற்காகவே மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபினால் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால், இன்று பல அபிவிருத்திகள் கட்சிமூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அபிவிருத்திகள் மட்டும்தான் கட்சியின் நோக்கம் என்று யாரும் நினைத்துவிடக்கூடாது. மேடைப் பேச்சுகளும், பத்திரிகை அறிக்கைகளும் உரிமைக்கு தீர்வை கொண்டுவரமாட்டாது. அதற்கான காத்திரமான முன்னெடுப்புகளை செய்தாகவேண்டும்.


உரிமைக்காக உருவாக்கப்பட்ட இக்கட்சி இன நல்லிணக்கத்துக்கு தூரப்பட்ட ஒரு கட்சியாக இருக்கமுடியாது. உலகளவில் கூட இன நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டு வரும்வகையில் இளைஞர்களின் பங்களிப்பு மிக பிரதானமானது. முஸ்லிம் சமூகம் மீதான பேரினவாதிகளின் சந்தேகத்தை கலைவதற்கான எங்களுடைய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் அவதானம் செலுத்தவேண்டும். இதில் இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது.


இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் சிங்கள மற்றும் தமிழ் சமூகத்துடன் உறவாடல்களை மேற்கொள்ளவேண்டும். விளையாட்டு, கலைநிகழ்ச்சி போன்றவற்றை நடாத்தி அவர்களுடன் நல்ல தொடர்புகளை பேணமுடியும். இவ்வாறான செயற்பாடுகள் எம்மீதுள்ள வீண் சந்தேகங்களை களைவதற்கு உதவியாக இருக்கும். முஸ்லிம்கள் மீதான வீண் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நான் புத்தகமொன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். அது விரைவில் வெளிவரும்.


இளைஞர் காங்கிரஸ் அணியின் அனர்த்த நிவாரணக்குழு அண்மைக்காலங்களில் சிறப்பாக செயற்பட்டு வந்தது. இதை நாடுமுழுவதும் விஸ்தரிக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அடங்கிய அனர்த்த நிவாரணக்குழுவை அமைக்கவேண்டும். இதுதவிர, மக்களின் ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களின் வீடுகளில் மரங்களை நட்டுவிட்டு, அந்தக் குடும்பத்துக்கும் கட்சிக்குமான உறவுப்பாலமாக இளைஞர்கள் இருக்கவேண்டும்.


எதிர்காலங்களில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் தேவையான சமூக செயற்பாடுகளில் இளைஞர் காங்கிரஸ் ஆர்வம் காட்டுவதோடு, கட்சியின் வளர்ச்சிப் பணியிலும் பங்களிப்பு செய்யவேண்டும். ஒவ்வொரு இளைஞரும் இந்தக் கட்சி எதற்காக உருவாக்கப்பட்டது, கட்சி தியாகங்கள் என்று சகல விடயங்களை தெரிந்துவைத்திருக்க வேண்டும். அப்போதுதான் கட்சித் தொண்டர்கள் போராளிகளாக மாறி கட்சியை உரமூட்டமுடியும்.



இலங்கை, இந்திய T20 போட்டியில் நாணய சுழற்சியை மாற்றிய வர்ணனையாளர் முரளி கார்த்திக்…!

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான ஒற்றை T20 போட்டி நேற்று கொழும்பு,ஆர்.பிரேமதாச மைதானத்தில் நிறைவுக்கு வந்தது.

நாள் முழுவதும் பெய்த கடுமையான மழையின் காரணமாக போட்டியின் நாணய சுழற்சி பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கை அணியின் தலைவர் தரங்க நாணயத்தை சுழற்ற, கோஹ்லி நாணயத்தின் தலை (Head ) கோரினார்,ஆயினும் நாணய சுழற்சியில் இலங்கை அணித்தலைவர் தரங்க வெற்றிபெற்றதாக போட்டி மத்தியஸ்தர் சைகைகாண்பிக்க அதனை சரியாக கவனிக்காத முரளி கார்த்திக் போட்டியின் நாணய சுழற்சியை கோஹ்லி வெற்றிகொண்டதாக அறிவித்தார்.

போட்டி மத்தியஸ்தர் அதனை திருத்த முற்பட்டும் முரளி கார்த்திக் அதனையும் கவனிக்கத்தவறிவிட்டார்.

எதுஎவ்வாறாயினும் நேற்றைய போட்டியில் இந்திய வெற்றி பெற்றதற்கு பின்னர் இந்த சர்ச்சை அதிகம் உருவெடுத்துள்ளது.

வீடியோ இணைப்பு.
              




– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவிக்கு சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள்ளும் வெளியிலும் யாரும் எதிர்பாராத வகையில் நிசாம் காரியப்பருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த நியமனம் தொடர்பில், பல்வேறு வகையான பேச்சுகள் எழுந்துள்ளன.

இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவி தொடர்பாகவும், நிசாம் காரியப்பருக்கு வழங்கப்பட்ட நியமனம் குறித்தும், அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் – தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கூர்மையானதொரு பதிவினை முன்வைத்துள்ளார்.

அதனை அப்படியே வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

[ ]

முஸ்லிம் காங்கிரசின் யாப்பில் 2015 இல் செய்யப்பட்ட திருத்தத்துக்கு அமைவாக, கட்சியின் உச்ச பீடத்திடமிருந்து கட்சித் தலைவர் பிடுங்கி எடுத்துக்கொண்ட அதிகாரத்தின் பிரகாரம், செயலாளர் பதவிக்க தலைவரால் நியமிக்கப்பட்ட மன்சூர் ஏ. காதர், தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.

இந்த நிலையில், பிரதிச் செயலாளராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் செயலாளராகவும், செயலாளராக இருந்த மன்சூர் ஏ. காதர் பிரதிச் செயலாளராகவும் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுவரை காலமும் தற்காலிகமாகச் செயலாளர் பதவியிலிருந்த மன்சூர் ஏ. காதர், பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று, தலைவரே இன்றைய (வெள்ளிக்கிழமை) வீரகேசரிப் பத்திரிகைக்குச் சொல்லியுள்ளார்.

கட்சி யாப்பில் தற்காலிகச் செயலாளர் என்றொரு பதவி இல்லை. மேலும், ஒரு பதவியில் தற்காலிகமாக இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக ஒருவரை எந்த நிறுவனமும் வைத்திருப்பதில்லை. இவையெல்லாம் தவைவருக்குத் தெரியாதா? அல்லது, வழமை போல உச்ச பீடத்துக்கும் முஸ்லிம் மக்களுக்கும் தனது புழுகு மூட்டையை அவசர அவசரமாக தலைவர் அவிழ்த்து விட்டுள்ளாரா?

சல்மானை தற்காலிக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்திருக்கிறேன் என்று மக்களுக்குப் பொய் சொல்லிவிட்டு, ஐந்து வருடங்களும் பதவியில் தொடர சல்மானுடன் ரகசியமாக ஒப்பந்தம் செய்தமையைப் போன்றதொரு தேவை, மன்சூர் ஏ. காதர் விடயத்தில் ஏற்பட்டிருக்கவில்லையே. இது மட்டுமன்றி, செயலாளராக காதர் இருந்த இரு வருடங்களும், பிரதிச் செயலாளராகத்தானே காரியப்பர் இருந்தார்.

காதரை தற்காலிகமாக நியமித்து விட்டு, அவருக்குக் கீழ் – பிரதியாக இருந்த ஒருவரை திடீரெனச் செயலாளராக நியமிக்கும் தேவை, என்ன இக்கட்டினால் ஏற்பட்டிருக்கக் கூடும்? 2015ஆம் ஆண்டிலேயே காதரைத் தவிர்த்து காரியப்பரைச் செயலாளராக நியமிக்க எந்தத் தடையும் இருக்கவில்லையே.

இரண்டு முழு வருடங்களிலும் இரண்டு தடவை மன்சூர் ஏ. காதர் தற்காலிகமாக நியமிக்கப்படவில்லை. மேலும், உச்ச பீடத்தில் இவர் தற்காலிகமாகவே செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று, தலைவர் எப்போதம் அறிவிக்கவுமில்லை. இது மட்டுமல்ல, புதிய யாப்பின்படி செயலாளரை மட்டுமே தலைவர் நியமிக்கலாம். பிரதிச் செயலாளரை உச்சபீடமே நியமிக்கவேண்டும். ஆயினும், தலைவரே கட்சி யாப்பை மீறி, பிரதிச் செயலாளராக காதரை நியமித்துள்ளார். மட்டுமன்றி,
அவரே இந்நியமனத்தைப் பற்றி பத்திரிகைக்கு அறிக்கையுமிட்டுள்ளார்.

கட்சியின் புதிய யாப்பினடிப்படையில் செயலாளராகப் பதவி வகிப்பவர் எந்தத் தேர்தல்களிலும் போட்டியிட முடியாது. காரியப்பர் பல தேர்தல்களில் போட்டியிட்டவர். கல்முனை மாநகர மேயராகப் பதவி வகித்தவர். விரைவில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை எதிர்நோக்கியிருக்கிற ஒரு சூழலில், தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் வேட்கையில் இருக்கும் காரியப்பரை, எந்தத் தேர்தலிலும் பங்கு பற்றும் விருப்பற்றிருந்த காதருக்குப் பதிலீடாக நியமிப்பதற்கு உந்தித் தள்ளிய ஆபத்தான காரணி எது? காரியப்பர் இந்நியமனத்தை ஏற்றுக்கொள்ள அல்லது கேட்டுப் பெற வைத்த சூழ்நிலையை ஏற்படுத்தியது எது?

தாறுஸ்ஸலாம் தொடர்பான நீதி விசாரணைக்கு காரியப்பர் முகம் கொடுத்துள்ளார். கோட்டை நீதவான் நீதி மன்றத்தில் பொரிஸ் மோசடிப் பிரிவு வழக்கும் பதிவு செய்துள்ளது. காரியப்பரை மோசடிப் பிரிவு அழைத்து உறுதிப் பத்திரம் தொடர்பாக விசாரித்துள்ளது. அடுத்த விசாரணை விரைவில் நடைபெற இருக்கிறது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி ஆவணங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை மன்றுக்கு மோசடிப்பிரிவு சமர்ப்பிக்க வேண்டும். நீதிக்கு முகம் கொடுப்பது கடினமாக உள்ளதாக அறிய முடிகிறது.

எனவே, இது விடயத்தில் உயர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. காரியப்பருக்கு கட்சியில் உயர்ந்த பதவி ஒன்றை வழங்கி, அவரை அரசாங்கத்தில் உச்ச பதவி வகிப்பவர்களிடம் சந்தைப்படுத்த வேண்டும். கட்சிக்கு இருக்கின்ற சொற்ப பேரம் பேசும் சக்தியை எதிர்வரும் தேர்தல்களில் பெருந்தேசியக் கட்சிகளுக்குப் பலிகொடுத்தாயினும் காரியப்பரைக் காப்பாற்றியாக வேண்டும். இல்லாவிட்டால் தாங்களும் கூண்டோடு ‘கைலாயம்’ செல்ல நேரிடும்.

இந்த ஆபத்தான நிலைமையைக் கையாள வேண்டுமானால், அரசாங்க தலைவர்களிடம் தலைவர்சென்று, “பார்த்தீர்களா எனது கட்சியின் செயலாளருக்கு இப்படியொரு கதி நிகழ்ந்துள்ளது, இவரைக் காப்பாற்றாவிட்டால் நாங்களும் அகப்படுவோம். இப்படி நடந்தால் எமது கட்சி கிழக்கில் செல்வாக்கை இழக்கும், நாம் செல்லாக் காசானால் அது உங்களுக்கும் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும்” என்று பெருந்தலைவர்களிடம் ஒப்பாரி வைப்பதற்கு வசதியாகவே, காரியப்பர் அவசர அவசரமாகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

madawalanews




(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான ஆவணங்கள் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளராக பதவி வகித்த மன்சூர் ஏ.காதர் ஆகியோரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் இன்று வியாழக்கிழமை மாலை கையளிக்கப்பட்டது.

சட்டப்படியான இந்த நியமனத்தை தாம் அங்கீகரிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் கட்சியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் பிரசன்னமாகியிருந்தார்.

கடந்த 2015 ஒக்டொபர் மாதம் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26 ஆவது பேராளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட கட்சியின் யாப்பு மாற்றத்தின் பிரகாரம் அப்போது செயலாளர் நாயகமாக பதவி வகித்து வந்த எம்.ரி.ஹசன் அலி, பதவியிழந்த அதேவேளை கட்சியின் உயர்பீட செயலாளராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற கட்சியின் 27 ஆவது பேராளர் மாநாட்டில் கட்சியின் செயலாளர் பதவிக்கு பொருத்தமானவரை நியமிக்கும் அதிகாரம் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன் தற்காலிக செயலாளராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த ஏற்பாட்டின் பிரகாரமே கட்சியின் புதிய செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் இரு வருட காலமாக கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கடந்த 13 வருடங்களாக கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமாக பதவி வகித்து வந்த அதேவேளை சர்வ கட்சி மாநாடுகள் மற்றும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பிலான உயர்மட்ட கூட்டங்களில் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தியபோது கட்சியின் முதலாவது இணைப்பு செயலாளராக சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பிளாஸ்டிக் பைகளைப்போல் மிதந்து மிதந்து வந்து கரை ஒதுங்கின அந்தச் சடலங்கள். இழுத்துப் போட்ட பிறகே எண்ணிப் பார்த்தார்கள்; பதினைந்து பெண்கள், பதினோரு குழந்தைகள். இது நடந்தது பங்களாதேஷில் உள்ள காக்ஸ் பஜார் என்னும் நகரில் உள்ள கடற்கரையில்.


எங்களுக்குக் கிடைத்தவற்றை மட்டுமே மீட்டிருக்கிறோம், கடலிலே கலந்து தொலைந்து விட்டவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை’ என்கிறார்கள் கரையோரம் பணிபுரியும் மக்கள். வருத்தத்தைக் காட்டிலும் அவர்கள் குரலில் அதிகம் தட்டுப்படுவது வெறுப்பே.


காரணம், இப்படி மனிதர்கள் மிதந்து வருவது அங்கே கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வாகி விட்டது.மிகச் சரியாக பங்களாதேஷுக்கும் பர்மாவுக்கும் நடுவில் இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையைப்போல் அமைந்திருக்கிறது நஃப் ஆறு.


ரோஹிங்கியா மக்களைப் பொறுத்த வரை இது வெறும் ஆறு மட்டுமல்ல, மரணத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பாலம். அதில் ஏறிவிட்டால், பர்மாவிலிருந்து விடுபட்டு பங்களாதேஷை அடைந்துவிட முடியும். ஆனால், அத்தனை எளிதானதல்ல இந்த மார்க்கம்.


கள்ளத்தனமாகத்தான் சென்றாக வேண்டும். கையில் அதிகக் காசில்லை என்பதால், சிறு கப்பல்களைத்தான் அமர்த்திக்கொள்ள முடியும். ஆட்டுமந்தைகளைப்போலத்தான் நெருக்கியடித்து அமர்ந்துகொள்ள முடியும். எப்போது வேண்டுமானாலும் நடுக்கடலில் கப்பல் கவிழலாம்; கடந்த புதனன்று நடந்ததைப் போல். அல்லது எப்போது வேண்டுமானாலும் பங்களாதேஷ் அதிகாரிகளிடம் பிடிபடலாம்.


கப்பலும் கவிழாமல் ஒருவரிடமும் மாட்டாமல் இருந்தாலும் மரணம் சாத்தியம்தான். செல்லும் வழியிலேயே பசி, குளிர், நோய் என்று பல காரணங்களால் கப்பலிலேயே சுருண்டு மாண்டிருக்கிறார்கள் பலர்.இருந்தும் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கடல் வழியாகவும் நிலம் வழியாகவும் தினம் தினம் பர்மாவிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.


ஆபத்து என்று தெரிந்தேதான் அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். காரணம் ஒன்றுதான். பர்மாவில் தங்கியிருப்பது என்பது இதைக் காட்டிலும் மோசமானது. அந்த வகையில் தப்பித்தல் என்பது அவர்கள் முன்னிருக்கும் ஒரு வாய்ப்பல்ல, அது ஒன்றுதான் உயிர்த்திருப்பதற்கான ஒரே வழி.


எல்லையைத் தாண்ட முடியாமல் பங்களாதேஷுக்கு மிக அருகில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லையில் இருக்கும் வங்கதேசத்து வீரர்கள் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு ஒரு விநாடி கண்களை மூடிக்கொண்டாலும், அவர்கள் அத்தனை பேரும் உள் நுழைந்து விடுவார்கள்.


பங்களாதேஷை ஆண்டுவரும் ஷேக் ஹசீனாவின் பயம் இதுதான். ரோஹிங்கியா என்றாலே அவர் குரலில் கோபமும், வெறுப்பும், சலிப்பும் கலந்து விடுகின்றன. ‘ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகளை நாங்கள் எங்கள் நாட்டுக்குள் அனுமதித்து விட்டோம்.


மனிதத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கருதியே இந்த உதவியை நாங்கள் செய்தோம். ஆனால், இப்போது அதுவே பிரச்னையாகிவிட்டது’ என்கிறார். அமெரிக்கா இதில் தலையிட வேண்டும் என்பது ஹசீனாவின் விருப்பம். பர்மாவுக்கு அழுத்தம் கொடுத்து எப்படியாவது ரோஹிங்கி யாக்களை அவர்களுடைய எல்லைகளுக்கு உள்ளேயே தடுத்துநிறுத்த உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.


பங்களாதேஷில் உள்ளவர்களின் பெரும்பான்மை கருத்தும் இதுவேதான். `நாங்களே ஆயிரத்தெட்டுப் பிரச்னைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது எதற்கு அலையலையாக அகதிகளை அனுமதிக்க வேண்டும்? எப்போதாவது சிலர் என்றால் பாதகமில்லை; இதுவே ஒரு வழக்கமாகி விடுவதை அனுமதிக்கக் கூடாது அல்லவா?


பங்களாதேஷ் என்ன அமெரிக்காவா, ஐரோப்பாவா? அவர்களே பார்த்துப் பார்த்துதான் அகதிகளைச் சேர்த்துக்கொள்கிறார்கள் என்னும்போது நாம் மட்டும் கதவுகளை அகலமாகத் திறந்துவைத்துக்கொண்டு உள்ளேவரும் எல்லோரையும் வரவேற்று மகிழ வேண்டுமா?’ என்பது பங்களாதேஷின் குரல்.


ரோஹிங்கியாக்கள் பர்மாவிலிருந்து துரத்தப்படுவது இது முதன்முறையல்ல. மிக மோசமான முறையில் நடத்தப்படுவதும் கொல்லப்படுவதும்கூட புதிதல்ல. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக நீண்டு வரும் திட்டமிட்ட தாக்குதலின் ஒரு பகுதிதான் கடந்த மாத இறுதியில் பர்மாவின் மேற்குப் பகுதியில் மூண்ட ஒரு மதக்கலவரத்தில் 89 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.


பிரிட்டனில் இருந்து செயல்படும் ரோஹிங்கியாக்களுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றின் கணிப்பின்படி சமீபத்தில் மட்டும் ஆயிரம் பேர் இத்தகைய கலவரங்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களின் குடியிருப்புகள் கொளுத்தப் பட்டிருக்கின்றன. உடைமைகள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன அல்லது முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன.


ஒவ்வொரு கலவரமும் ஒவ்வொரு தாக்குதலும் ரோஹிங்கியா முஸ்லிம்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதால், அவர்கள் உயிருக்குப் பயந்து எல்லாவற்றையும் போட்டது போட்டபடி பர்மாவிலிருந்து தப்பியோடுகிறார்கள். பர்மியர்கள் விரும்புவதும் இதைத்தான்.


இது எங்கள் நாடு. இனி இங்கே வராதே’ என்கிறார்கள் அவர்கள்.பங்களாதேஷ் மறுப்புச் சொல்வதற்குக் காரணம் ரோஹிங்கியாக்கள் அவர்களைப் பொறுத்தவரை அந்நியர்கள். ஆனால், அவர்களுடைய வாழ்விடமான பர்மாவும் இதையே சொல்கிறது என்றால், குழப்பமாக அல்லவா இருக்கிறது..?

MARI themes

Powered by Blogger.