Showing posts with label Anuradhapura. Show all posts




அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகள் /டிப்ளோமா தாரி ஆசிரியர்களுக்கான 05 நாட்கள் கொண்ட திசை முகப்படுத்தல் பயிற்சி செயலமர்வு ஒன்றை நடாத்த வ.ம.மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.இது சம்பந்தமான கடிதம் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .


வதிவிட பயிற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச் செயலமர்வு எதிர்வரும் 2017.11.04 பி .ப 1.00 மணி தொடக்கம் 2017.11.09 பி .ப.3.00 மணி வரையில் அநுராதபுரம் கல்வி அபிவிருத்தி மத்திய நிலையத்தில் இடம் பெறவுள்ளதாகவும் ,காலை உடற் பயிற்சிக்குத் தேவையான உடைகளுடன்,பயிற்சிச் செயலமர்வுக்குப் பொருத்தமான ஆடைகளுடனும் சகல ஆசிரியர்களும் கட்டாயம் சமூக மளிக்குமாறும் வேண்டப் பட்டுள்ளனர் .


கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு தங்குமிட வசதி,உணவு,பானம் என்பனவற்றுடன் கடமை லீவும் வழங்கப் படவுள்ளதாக 2017.10.23 ஆம் திகதி இடப்பட்ட உமெப/அ.தெ/சங்/01/10/2017 ஆம் இலக்கமிடப்பட்ட கடிதத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர் .


ஏ.ஆர்.எம்.ரபியுதீன் - அநுராதபுரம் நிருபர்


தமிழ் அரசியல் கைதிகள் மூவர் அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் இன்று தொடக்கம் நீராகாரத்தையும் நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். 


உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான மாகாணசபை உறுப்பினர் நேற்று சந்தித்த போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.


மாகாணசபை உறுப்பினர்களின் குழுவில் இடம்பெற்றிருந்த அனுராதபுர சிறைச்சாலையில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இது தொடர்பாக தகவல் வெளியிடுகையில், 

21 தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

உண்ணாவிரதம் இருந்து வரும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகள் 58 தடவைகள் வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டு விசாரணை செய்யப்படவில்லை.



இந்த சூழ்நிலைக்கு அரசு தரப்பு சாட்சிகளான 67 பேரில் 3 பேர் அரச படைகளை சேராதவர்கள். ஆரம்பத்தில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தற்போது திடீரென்று அனுராதபுர மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக அறிவித்துள்ளனர். இதனை எதிர்த்து தான் அவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று முதல் நீர் ஆகாரம் இன்றி போராட்டத்தை தொடரப்போவதாக தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்தனர். 

அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் போராட்டத்தை நிறுத்த முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் வழங்கிய காரணம் நியாயமானது என்று தெரிவித்தார்.


 அல்-குர்ஆன் , அஸ்-ஸுன்னா அடிப்படையில் இயங்கி வரும் ஹொரவ்பொதானையில் வேரூன்றி நிற்கின்ற அறபுக் கலாபீடம் றஷீதிய்யா அரபுக் கல்லூரியின் 2018 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 15.11.2017 ஆம் திகதிக்கு முன்பாக , குறிப்பிட்ட வரையறைகளுக்கு அமைவாக தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதோடு , தங்கள் உறவுகளின் ஆன்மீகப் பயணத்திற்கான வாயில்களை தங்குதடையின்றி திறந்து கொடுக்குமாறு தயவாய் வேண்டுகிறேன். 


தொடர்புகளுக்கு:- 0252278372 0773696498 0777164676 தகவல்: 

Muhamed Hasil


பட்டதாரிகள் பொது மக்களின் முதலீட்டால் உருவாக்கப்பட்ட சமூக முன்னேற்றத்திற்கான வளங்களல்லவா? வடமத்திய மாகாண பட்டதாரிகள் அனைவருக்கும் நியமணம் வழங்குவது என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தால் அதில் கையாடல்களா? முழுமையான நிதி ஒதுக்கப்பட்டால் நடந்தது என்ன? அலைந்து திரியும் பட்டதாரிகள் பக்கம் பார்வையைத் திருப்புவது அரசியல் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் என்போரின் கடமையல்லவா? வடமத்திய மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமணம் வழங்குவதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது வடமத்திய மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமணம் வழங்கப்பட்டு மிகுதியானவை ஏனைய மாகாணங்களுக்கு வழங்குவதாக மாகாண அரசும் முதலமைச்சரும் வாக்களித்தபோதிலும் பல்வேறு மறைமுக காரணிகள் அல்லது அளவுகடந்த அரசியல் தலையீட்டின் காரணமாக வடமத்திய மாகாண பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டு அதிகமான நியமனங்கள் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இதற்கான காரண காரியங்களை வெளிப்படுத்துமாறும் நியாயமான தீர்வைப் பெற்றுத்தருமாறும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடாத்திய போதிலும் எவ்விதமான, பொருத்தமானதும் நம்பகமான தீர்வு பெற்றுத்தரப்படவில்லை என்பதை அறியக்கிடைப்பது இலங்கைப் பிரஜைகள் மற்றும் இப்பிரதேச மக்கள் என்ற வகையில் எம் எல்லோருக்கும் மனவேதனையைத் தருகின்றது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். 

கொடுக்கப்பட்ட நியமனத்திலும் பல்வேறுபட்ட குழருபடிகளும் அநியாயங்களும் நடைபெற்றுள்ளது ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களே! புத்தி ஜீவிகளே! பொது நிர்வாக நடைமுறைகளில் அறிவார்ந்தவர்களே! எமது பிரதேச அனுபவமற்ற பட்டதாரிகள் என்றவகையில் இவர்களை Eliteness hypothesis மற்றும் Political advocacy இடையில் சரியாக வழிநடத்துவது உங்களது தார்மீகக் கடமை அல்லவா? வடமத்திய மாகாணத்தில் வாழும் சட்டத்தில் பாண்டித்தியம் பெற்ற சட்டவல்லுனர்களே! பாதிக்கப்பட்ட இப்பட்டதாரிகளுக்கு பொறுத்தமான தீர்வைப் பெற்றுக்கொள்ள சட்டத்தின் நுனுக்கங்களை அறிந்த தேர்ச்சி பெற்றவர்கள் என்ற ரீதியில் மாற்று வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பது உங்கள் மனச்சாட்சி தர்மம் என்ற உண்மையை உணர மாட்டீர்களா? இப்பிரதேச பொது மக்களே மற்றும் ஊர் நிர்வாக அமைப்புக்களின் நிர்வாகிகளே! இப்பட்டதாரிகள் நியமனம் பெற்றால் எமது பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களே நிரப்பப்பட போகின்றன. எமது குழந்தைகளே பயன்பெற போகிறார்கள். 

ஆகையால் இவர்களது பிரச்சினை எமது சமூகத்தின் பிரச்சனை அல்லவா? ஈற்றில் இப்பட்டதாரிகளின் நியமனப்பிரச்சனை இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளைத் தாண்டிய எமது பிரதேச பட்டதாரிகளுக்கு நடந்தேரிய வெளிப்படையான அநியாயத்திற்கான நீதி கேட்கும் பிரச்சினை. எமது பிரதேச பாடசாலைகளின் கடமைகளை சரிவர செய்வதற்கு தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டம். எமது எதிர்கால சந்ததிகளுக்கு கல்விக்கான அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதற்கான முக்கிய மைற்கல். எனவே யாவரும் ஒன்றுபட்டு எமது இச்சமூகப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முனைவது அறிவார்ந்த சமூகத்திற்கான அடையாளம்! ஒன்றுபடுவோம்!! உங்களது மௌனம் அரசியல் கட்சி தலைமைகளின் நலன்கருதி அல்லது அரசியல் இலாபம் கருதியோ என்றால் உங்கள் அரசியல் கதிரையின் எதிர்காலம் கட்சியின் தலைவரிடம் இல்லை மாறாக நாட்டின் இறைமையைக் கைக்குள் கொண்டுள்ள பொது மக்களிடமே என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்!!!

முகம்மத் ஜெஸ்மில் அப்துல் கபூர்
தம்பாளை,



சிசுவை வீதியில் விட்டுச்சென்ற பல்கலைக்கழக மாணவி பிணையில் விடுதலை!


சிசுவை வீதியில் விட்டுச்சென்ற பல்கலைக்கழக மாணவி ஒருவரை அநுராதபுரம் நீதிமன்ற நீதவானும் மாவட்ட மேலதிக நீதவானுமான ஹர்ஷன கெக்குனுவெல  பிணையில் விடுதலை செய்துள்ளார்.

ஒரு இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் குறித்த மாணவி இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்துக்கொண்ட குறித்த மாணவி 12 நாட்கள் கடந்த நிலையில், குழந்தையை துணியினால் சுற்றி வைத்தியசாலைக்கு அருகில் விட்டுச் சென்றுள்ளார்.

விட்டு சென்ற குழந்தையை மீட்ட காவல்துறையினர் அநுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், குழந்தையை பிரசவித்த பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியினை இனங்கண்டதோடு பொலன்னறுவையில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவிக்கு எதிராக காவல்துறையினர் வழக்கினையும் தாக்கல் செய்துள்ளனர்.

தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மாணவியினை சரீர பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

அத்துடன், குறித்த மாணவி புளியங்குளம் பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளதோடு கணவர் ஜப்பானில் பணிபுரிவதாகவும் வீட்டுரிமையாளரிடம் கூறியுள்ளார்.

மேலும் உறவினர்களுக்கு தெரிந்தால் தன்னை கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே தாம் குழந்தையை விட்டுச் சென்றதாகவும் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.






பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுகளின் படி அனுராதாபுர மாவட்ட ரீதியில் தமிழ் மூலம் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு அமைய மூன்று மாணவர்கள் 176 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


*எம்.எம்.முனீப்
அ/ஹோறாபொள.மு.வி

*அர்ஹம்
அ/சாஹிரா.ம.வி

*சாரா
அ/சாஹிரா.ம.வி

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 356728 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏ. ஆர்.எம்.ரபியூதீன் (ஊடகவியலாளர்)

அநுராதபுர மாவட்டத்தில் சாதனை புரிந்து வரும் கெக்கிராவ கல்வி வலய ஹோராப்பொல மு.ம. வித்தியாலயம் இம்முறையும் 4 வது தடவையாகவும் புலமை பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது.

கடந்த 2012 - 2014 - 2015 - 2017 ஆகிய வருடங்களில் மாவட்ட மட்டத்தில் பெற்ற 01 ஆம் இடங்களுக்குள் இப் பாடசாலையும் குறிப்பிடத்தக்கது.இம்முறை எம்.எம்.முனீப் என்ற மாணவன் 176 புள்ளிகளை பெற்று 2017 தரம் ஒன்று புலமை பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமையையும்,புகழையும் தேடிக் கொடுத்து மொத்தம் 09 மாணவர்கள் இம்முறை சித்தியடைய யு.கே.ஜெஸ்மின் ஆசிரியையின் அயராத உழைப்பின் பயனாக இவ் வெற்றிகிடைத்துள்ளதாக அதிபர் எஸ்.எச்.சாலிஹீன் தெரிவித்தார்.


அத்தோடு மற்றொரு சாதனையாக அநுராதபுரம் சாஹிரா தேசிய பாடசாலையை சேர்ந்த அர்ஹம் என்ற மாணவனும் ,சாரா என்ற மாணவியும் இம்முறை பெறு பேற்றில் 176 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாம் இடங்களை பெற்று சாதனை படைத்தது மொத்தம் 07 மாணவர்கள் இம்முறை சித்தியடைந்துளனர். இவர்களில் அர்ஹம் 176 . சாரா 176 . சப்கி 175 . ருசைக்கா 165 . ரிஸ்மி 165 . அம்மார் 160 . சிபா 154 . என்ற புள்ளி அடிப்படையில் சித்தியடைந்து பொன் விழா காணவுள்ள பாடசாலைக்கு பெருமையையும் , பெருமையையும் தேடித் தந்துள்ளார்கள் என பாடசாலை அதிபர் எம்.கே.எம்.ஜவ்பர் தெரிவித்தார்.




வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேற்றின் படி அனுராதபுரம்
சாஹிரா மகா வித்தியாலத்திற்கு மாவட்ட ரீதியாக முதல் இரண்டு இடங்களும், நான்காம் இடமோன்றும்
கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனடிப்படையில், அர்ஹம் என்ற மாணவனும்,சாரா என்ற மாணவியும் இம்முறை பெறு பேற்றில் 176 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாம்
இடங்களை பெற்றுள்ளதோடு, ஏழு மாணவ மாணவியர் இம்முறை சித்தியடைந்து 2018ல் பொன் விழா காணவுள்ள பாடசாலைக்கு பெருமையையும்,புகழையும் பெற்றுத் தந்துள்ளார்கள்.

அர்ஹம் 176 ,
சாரா 176 ,
சப்கி 175 ,
ருசைக்கா , 165 ,
ரிஸ்மி , 165 ,
அம்மார் , 160 ,
சிபா , 154
என்ற அடிப்படையில் புள்ளிகளை பெற்று சித்தி அடைந்துள்ளனர்.

பாடசாலை அதிபர் எம்.கே.எம்.ஜவ்பர், மற்றும் வகுப்பசிரியர்கலான எம்.ஏ.சமீரா,எம்.கே.சாஹிரா ஆகியோருக்கு நன்றிகளையும்
பாராட்டுக்களையும் சமூகம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்.
ஏ.எம்.அஸாருதீன்
படங்கள்: நிஸாம் பாருக் & ஜனிபர் இஸ்மாயில்



இம்முறை scholarship பரீட்சையில் 9 கும் அதிகமான மாணவர்கள் சித்தி அடைந்ததுள்ளதுடன் அனுராதபுர மாவட்டதில் முதல் மாணவனாக எம்.எம்.முனீப் முதலிடம் பெற்றுள்ளார். 

எமது பாடசாலை முதலிடம் பெறுவது இது முதன் முறைய அல்ல. தொடர் சாதனையாக 4 முறை முதலிடம் பெற்று மகத்தான வரலாற்றை கொண்டுள்ளது. 


சிப்ரா- 2012 
றுஸ்தி-2014
ஸம்ரா-2015
தொடர்ச்சியாக இம்முறையும் 2017ன் முதல் மாணவனாக எம்.எம்.முனீப் பெற்று எமது பாடசாலையை வரலாற்றில் பதித்துள்ளார்.

முதலில் இறைவனுக்கு நன்றி தெரிவித்தவனாக....
எமது பாடசாலையின் அதிபர் ஸாலிஹீன் ஆசிரியர், இவ்வெற்றியின் கதாநாயகி ஜெஸ்மின் ஆசிரியை மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

ஒவ்வொரு வருடமும் பல மாணவர்கள் சித்தி பெற்றுவது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் 10 மாணவர்கள் சித்தி அடைந்தனர். சிதியடயாத மாணவர்கள்களும் 100 அதிகமான புள்ளிகளை பெற்றுகிறார்கள். 5ம் தர வகுப்பு ஆசிரியைகளாக கடமையாற்றும் ஜெஸ்மின் ஆசிரியரை மற்றும் கதீஜா ஆசிரியைகளுக்கு எமது வாழ்த்துக்கள்.




இம்முறை scholarship பரீட்சையில் சித்தி பெற்ற நாளைய தலைமுறையின் தலைவர்களாகிய உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.


Aarshik Mohamed



ஏ.ஆர்.எம்.ரபியூதீன்(ஊடகவியலாளர்)

அநுராதபுரம் நகரம் உட்பட அநுராதபுர மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள் ஹோட்டல்களில் தேநீரின் விலைகள் அதிகரித்துள்ளதாக பாவணயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேநீரின் விலை 20 ரூபா வாகவும்,பால் தேநீர் 40 ரூபாவாகவும் அதிகரிக்கப் பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.இது சம்பந்தமாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது எரிவாயு விலை அதிகரிப்பால் உணவு,பான வகைகளின் விலை அதிகரிக்கப் பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தற்கிணங்கவே 15 ரூபாவாக காணப்பட்ட ஒரு கோப்பை தேநீரின் விலை 20 ரூபாவாகவும்,ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 40 ரூபாவாகவும் அதிகரிக்கப் பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.


இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த பாவனையாளர் ஒருவர் விலை சற்று அதிகரித்தால் உடனே விலைகள் கூடும் .ஆனால் விலைகளில் சற்று குறைவு ஏற்பட்டால் பொருட்களின் விலைகள் ஒரு நாளும் குறையாது.இது தான் உண்மையான நிலை என தெரிவித்தார்.



அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விரிவுரை பிரிவு இயங்கும் 6 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து நோயாளி ஒருவர் இன்று காலை தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
நான்காவது மாடியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 57 வயதான நோயாளியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மினுவங்கொடை – கலஹாகொடை பிரதேசத்தை சேர்ந்த இந்த நோயாளி வயிற்றுவலி காரணமாக நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் 29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா (27/09) அன்று மாலை04.00 மணியளவில் அனுராதபுரம் வட மத்திய மாகாண விளையாட்டு அரங்கில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதனுடைய நிறைவு நாள் நிகழ்வுகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

இவ் இறுதி நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்க அதிபர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் ஏரந்த வெலியங்கே, மாகாண மற்றும் மாவட்ட பணிப்பாளர்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள்,தேசிய இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள், விளையாட்டு வீர ,வீராங்கனைகள் மற்றும் இளைஞர் யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


























































MARI themes

Powered by Blogger.