அநீதிக்கு மேல் அநீதி! கைவிடப்படும் வடமத்திய மாகாண பட்டதாரிகள்!! போராடுவோம் போராடுவோம் இறுவரைப் போராடுவோம்???


பட்டதாரிகள் பொது மக்களின் முதலீட்டால் உருவாக்கப்பட்ட சமூக முன்னேற்றத்திற்கான வளங்களல்லவா? வடமத்திய மாகாண பட்டதாரிகள் அனைவருக்கும் நியமணம் வழங்குவது என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தால் அதில் கையாடல்களா? முழுமையான நிதி ஒதுக்கப்பட்டால் நடந்தது என்ன? அலைந்து திரியும் பட்டதாரிகள் பக்கம் பார்வையைத் திருப்புவது அரசியல் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் என்போரின் கடமையல்லவா? வடமத்திய மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமணம் வழங்குவதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது வடமத்திய மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமணம் வழங்கப்பட்டு மிகுதியானவை ஏனைய மாகாணங்களுக்கு வழங்குவதாக மாகாண அரசும் முதலமைச்சரும் வாக்களித்தபோதிலும் பல்வேறு மறைமுக காரணிகள் அல்லது அளவுகடந்த அரசியல் தலையீட்டின் காரணமாக வடமத்திய மாகாண பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டு அதிகமான நியமனங்கள் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இதற்கான காரண காரியங்களை வெளிப்படுத்துமாறும் நியாயமான தீர்வைப் பெற்றுத்தருமாறும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடாத்திய போதிலும் எவ்விதமான, பொருத்தமானதும் நம்பகமான தீர்வு பெற்றுத்தரப்படவில்லை என்பதை அறியக்கிடைப்பது இலங்கைப் பிரஜைகள் மற்றும் இப்பிரதேச மக்கள் என்ற வகையில் எம் எல்லோருக்கும் மனவேதனையைத் தருகின்றது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். 

கொடுக்கப்பட்ட நியமனத்திலும் பல்வேறுபட்ட குழருபடிகளும் அநியாயங்களும் நடைபெற்றுள்ளது ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களே! புத்தி ஜீவிகளே! பொது நிர்வாக நடைமுறைகளில் அறிவார்ந்தவர்களே! எமது பிரதேச அனுபவமற்ற பட்டதாரிகள் என்றவகையில் இவர்களை Eliteness hypothesis மற்றும் Political advocacy இடையில் சரியாக வழிநடத்துவது உங்களது தார்மீகக் கடமை அல்லவா? வடமத்திய மாகாணத்தில் வாழும் சட்டத்தில் பாண்டித்தியம் பெற்ற சட்டவல்லுனர்களே! பாதிக்கப்பட்ட இப்பட்டதாரிகளுக்கு பொறுத்தமான தீர்வைப் பெற்றுக்கொள்ள சட்டத்தின் நுனுக்கங்களை அறிந்த தேர்ச்சி பெற்றவர்கள் என்ற ரீதியில் மாற்று வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பது உங்கள் மனச்சாட்சி தர்மம் என்ற உண்மையை உணர மாட்டீர்களா? இப்பிரதேச பொது மக்களே மற்றும் ஊர் நிர்வாக அமைப்புக்களின் நிர்வாகிகளே! இப்பட்டதாரிகள் நியமனம் பெற்றால் எமது பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களே நிரப்பப்பட போகின்றன. எமது குழந்தைகளே பயன்பெற போகிறார்கள். 

ஆகையால் இவர்களது பிரச்சினை எமது சமூகத்தின் பிரச்சனை அல்லவா? ஈற்றில் இப்பட்டதாரிகளின் நியமனப்பிரச்சனை இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளைத் தாண்டிய எமது பிரதேச பட்டதாரிகளுக்கு நடந்தேரிய வெளிப்படையான அநியாயத்திற்கான நீதி கேட்கும் பிரச்சினை. எமது பிரதேச பாடசாலைகளின் கடமைகளை சரிவர செய்வதற்கு தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டம். எமது எதிர்கால சந்ததிகளுக்கு கல்விக்கான அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதற்கான முக்கிய மைற்கல். எனவே யாவரும் ஒன்றுபட்டு எமது இச்சமூகப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முனைவது அறிவார்ந்த சமூகத்திற்கான அடையாளம்! ஒன்றுபடுவோம்!! உங்களது மௌனம் அரசியல் கட்சி தலைமைகளின் நலன்கருதி அல்லது அரசியல் இலாபம் கருதியோ என்றால் உங்கள் அரசியல் கதிரையின் எதிர்காலம் கட்சியின் தலைவரிடம் இல்லை மாறாக நாட்டின் இறைமையைக் கைக்குள் கொண்டுள்ள பொது மக்களிடமே என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்!!!

முகம்மத் ஜெஸ்மில் அப்துல் கபூர்
தம்பாளை,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.