Showing posts with label India. Show all posts



இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இலங்கை பீல்டர் ஏமாற்ற, இந்திய கேப்டன் விராட் கோலி, 5 ரன்கள் கொடுக்கும்படி கேட்டார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுருண்டது.


இந்நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்த போது, இலங்கையின் கேப்டன் சண்டிமால், பந்தை பிடிக்காமலேயா பிடித்து வீசுவது போல சைகை செய்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் சண்டிமால் சுதாரித்துக்கொண்டார்.

இதைப்பார்த்த களத்தில் இருந்த அம்பயர்கள் முதல் முறை என்பதால், சண்டிமாலை வெறும் எச்சரிக்கையுடன் விட்டனர். ஆனால் இதை பெவிலியனில் இருந்து கவனித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ஐசிசி., யின் புதிய விதிமுறைப்படி இந்திய அணிக்கு 5 ரன்கள் வழங்கும்படி கையால் சைகை காட்டினார்.



ஒருகாலத்தில் டோணியின் வலது கையாக செயல்பட்டு வந்தார் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.

இந்திய அணியின் நிரந்தர சுழற்பந்து வீச்சளராக இவர் வருவார் என்று கணிக்கப்பட்டது.


ஆனால் கடந்த நான்கு ஒருநாள் தொடர் எதிலும் அவர் சேர்க்கப்படாமல் இருந்தார். அஷ்வினுக்கு பதிலாக சாஹல், குல்தீப் என்ற இரு புதிய சுழற்பந்து வீச்சாளர்களைக் களம் இறக்கினார் கோஹ்லி.


யோ யோ டெஸ்ட் கடந்த சில மாதமாக அஸ்வின் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பெங்களூரில் நடந்த யோ யோ டெஸ்டில் அஸ்வின் கலந்து கொண்டார்.

இதில் மிகவும் சிறப்பாக பெர்பார்ம் செய்த அஸ்வின் மொத்த டெஸ்டையும் முழுவதுமாக முடித்தார்.


இது இந்திய வீரர்களை அணியில் சேர்ப்பதற்காக செய்யப்படும் மிக முக்கியமான தேர்வு முறையாகும்.

அணி அறிவிப்பு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி இரண்டு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

கடந்த பல போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


பல நாட்களுக்கு பின் மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையாக அஸ்வின் இந்திய அணிக்கு வந்து இருக்கிறார். சில நாட்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில் ”இந்திய அணி என் வீட்டு கதவை தட்டும்” என குறிப்பிட்டார்.

இப்போது உண்மையாகவே அவர் வீட்டு கதவை பிசிசிஐ தட்டி இருக்கிறது. இலங்கை அணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் இந்த தமிழர், டெல்லியில் பிட்சில் மீண்டும் தன் சுழல் திறமையை காட்ட காத்து இருக்கிறார்.


இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி கிரிக்கெட்டில் மட்டுமின்றி விளம்பரங்களிலும் தூள் கிளப்பி வருகிறார்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது வெற்றி மேல் வெற்றி குவித்து வருகிறது.

கோஹ்லியின் ஆக்ரோசமான ஆட்டமும், அவரது துடுப்பாட்டத்தினாலும் அவருக்கு விளம்பரங்கள் அடுத்தடுத்து வந்தபடி உள்ளன.

இந்நிலையில் விராட் கோஹ்லி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் விளம்பரம் தொடர்பாக புரோமோஷன் போட வேண்டும் எனில் ஒரு பதிவேற்றத்திற்கு 3.2 கோடி ரூபாய் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது கால்பந்து உலகின் ஜாம்பவான கிறிஸ்டியன் ரொனால்டோவுக்கு இன்ஸ்டாகிராமில் போடப்படும் ஒவ்வொரு பதிவேற்றத்திற்கு வழங்கப்படும் சம்பளம் என்று கூறப்படுகிறது.

அதிகபட்சமாக பிரபல காமெடி நடிகரான Kevin Hart தன்னுடைய இன்ஸ்டாகிராமில் விளம்பரத்திற்காக 6.4 கோடிரூபாய் வாங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோஹ்லியை இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இலங்கை அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.

இத்தொடருக்கு 16 வீரர்களின் பட்டியலை இந்திய அணி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சகல துறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட அணியில் அவர் இடம்பெற்றிருந்தாலும், அதிக போட்டிகளில் பங்கேற்றிருப்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் சமீபகாலமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்த அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு இத்தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி


விராட் கோஹ்லி (தலைவர்)
கே.எல். ராகுல்
முரளி விஜய்
ஷிகர் தவான்
சட்டீஸ்வர் புஜாரா
அஜிங்கியா ரஹானே (துணைத் தலைவர்)
ரோகித் ஷர்மா
விருத்திமான் சாஹா
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவீந்திர ஜடேஜா
குல்தீப் யாதவ்
முகமது ஷமி
உமேஷ் யாதவ்
புவனேஷ்வர் குமார்
இஷாந்த் ஷர்மா



இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் வரும் நவம்பர் 16ல் கொல்கத்தாவில் துவங்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அணியை சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி..,) அறிவித்தது.


இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) தற்போது அறிவித்துள்ளது. அதில், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதால், காயம் ஏற்படுவதை தவிர்க்கவே பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தவிர, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பாண்டியா பயிற்சி மேற்கொள்வார் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்:

கோலி (கேப்டன்), ரகானே (துணைக்கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், ஷிகர் தவான், புஜாரா, ரோகித் சர்மா, சகா, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா.



பிறந்த நாள் கொண்டாடிய கோஹ்லி -புகைப்படங்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரின் உலகின் முதல்தர துடுப்பாட்ட நட்சத்திரமுமான கோஹ்லி இன்று தனது 29 பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

ராஜ்கோட்டில் நிறைவுக்கு வந்த இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது T20 போட்டியை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் கேக் வெட்டி கோஹ்லியின் பிறந்தநாளை கொண்டாடினர் .

அது தொடர்பிலான புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.








ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 40ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்துவெற்றி பெற்றது.


இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணியில் முகம்மது சிராஜ் புதுமுகமாககளமிறங்கினார். கப்தில் மற்றும் முன்ரோ தொடக்கஆட்டக்காரர்களாக பேட்டிங் செய்தனர்.

இருவரது அதிரடியை கட்டுபடுத்த முடியாமல் இந்திய பவுலர்கள்திணறினர். 11 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை கடந்தது. 12வது ஓவரை வீசிய சாகல் கப்திலை வெளியேற்றினார்.

இதனையடுத்து களமிறங்கிய வில்லியம்சன் 12 ரன்களில்புதுமுக பவுலர் சிராஜ் பந்தில் ரோகித் வசம் கேட்ச் கொடுத்தார்.ஆனாலும் முன்ரோ சிக்சர்கள், பவுண்டரிகளுடன் 54 பந்துகளில்தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 20 ஓவர்கள்முடிவில் நியூசிலாந்து அணி 196 ரன்கள் குவித்தது. முன்ரோ 109ரன்களுடனும், ப்ரூஸ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.இந்திய தரப்பில் சாகல், சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளைவீழ்த்தினர்.


இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாகரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இறங்கினர். ஆனால்நியூசிலாந்து பவுலர்கள் 2-வது ஓவரிலேயே இருவரையும்வெளியேற்றி அதிர்ச்சி அளித்தனர். ரோகித் 5 ரன்னுடனும்,தவான் ஒரு ரன்னுடனும் வெளியேறினர். 11 ரன்களுக்கு 2விக்கெட் இழந்தது.

அதன்பின் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயரும், விராட் கோலியும்ஓரளவு தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 53 ரன்கள் சேர்த்தது.ஷ்ரேயஸ் ஐயர் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரைதொடர்ந்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா ஒரு ரன்னில்வெளியேறினார்.

விராட் கோலி மட்டும் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 61 ரன்கள்எடுத்து ஆட்டமிழந்தார். தோனியுடன் இணைந்து 56 ரன்கள்சேர்த்தார்.


அவரை தொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல் 5 ரன்களில்ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் தோனி 37 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 49ரன்களில் அவுட்டானார். இதையடுத்து 40 ரன்கள்வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 20 ஓவர் முடிவில்இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.புவனேஷ்வர் குமார் 2 ரன்னுடனும், பும்ரா ஒரு ரன்னுடனும்களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் அற்புதமாகபந்து வீசி 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.


இதன்மூலம் நியூசிலாந்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் வரும் 7-ம்தேதி நடைபெறுகிறது.



டெல்லியில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்றார் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இரண்டாவது டி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று மாலை நடக்க இருக்கிறது.

மேலும் இந்திய அணியில் ஓய்வுபெற்ற நெஹ்ராவுக்கு பதில் புதிய பிளேயர் ஒருவர் சேர்க்கப்பட இருக்கிறார்.

முதல் போட்டி முடிந்த பிறகு கோஹ்லி கொடுத்த பேட்டியில் டி-20 போட்டியில் அதிக பவுலர்களுடன் களம் இறங்குவதையே தான் விரும்புவதாக கூறினார்.

ஓய்வுபெற்ற நெஹ்ராவுக்கு பதில் பவுலிங் செய்யக்கூடிய வீரர் விளையாடுவார் என கூறப்படுகிறது.

எனவே ஆல்ரவுண்டர் முகமது சிராஜ் முதல்முறையாக அணியில் இணைவார் என எதிர்பார்க்கபடுகிறது.



வாங்கிய அடியை மறக்காத நியூசி.., முதலில் பந்துவீசுகிறது இந்தியா 


இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.



இந்த தொடரில் கடந்த 1ம் தேதி டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.


மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.


இதில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.









இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முதல் போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டதால், அவருக்கு பதிலாக கஷ்மீரை சேர்ந்த முகமது ஸிராஜ், இன்றைய போட்டி மூலம் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
அணி விபரம்;

IND XI: RG Sharma, S Dhawan, V Kohli, MS Dhoni, H Pandya, S Iyer, A Patel, B Kumar, M Siraj, Y Chahal, J Bumrah



மீண்டும் வெளுத்து வாங்கும் கன மழை… அச்சத்தில் சென்னை மக்கள் 


சென்னையில் கடந்த ஒரு மணிநேரமாக மீண்டும் கன மழை பெய்து வருகிறது.


சென்னையில் கடந்த நான்கு நாட்களாக கனமழை தொடருகிறது. நேற்று பிற்பகல் தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்தது.


இதில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் ஒட்டுமொத்த சென்னையின் இயல்பு வாழ்க்கையே இன்று ஸ்தம்பித்தது.


நேற்று இரவு தேங்கிய தண்ணீரே இன்று முழுமையாக வெளியேறாத நிலையில், தற்போது மீண்டும் கன மழை பெய்து வருகிறது.


இக்கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


நேற்றைப் போலவே இன்றும் விடிய விடிய கனமழை கொட்டுமோ என்கிற அச்சம் சென்னைவாசிகளிடத்தில் ஏற்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.



நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.


இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.




இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 147 ரன்களும், கேப்டன் கோஹ்லி 113 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 337 ரன்கள் எடுத்தது.


இதனையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான கப்தில் 10 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்ததாக ஜோடி சேர்ந்த வில்லியம்சன் – முன்ரோ கூட்டணி இந்திய அணிக்கு நீண்ட நேரம் தலைவலியை கொடுத்து மளமளவென ரன் குவித்தது.


முன்ரோ 75 ரன்களும்,வில்லியம்சன் 64 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.

அடுத்தடுத்து வந்த டெய்லர் 39, லாதம் 65, நிக்கோலஸ் 37 என அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடிதன் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 14 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீசிய பும்ராஹ் அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி மிரட்டியதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கெத்தாக கைப்பற்றியுள்ளது.



இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் ஏராளமான முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் பயணியருக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. இந்த நடைமுறைக்கு 2018ல் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஹஜ் பயணியருக்கு மானியம் ரத்து உட்பட பல ஷரத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. 

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்துள்ள கொள்கை வரைவு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


போட்டியை முடிப்பதில் 1000 பாண்டியாவுக்கு சமம் தல தோனி

இந்திய அணியின் தல என செல்லமாக அழைக்கப்படும் தோனி, இளம் வீரர் பாண்டியாவை விட 1000 மடங்கு உயர்ந்தவர் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டராக திகழ்ந்துவரும் ஹர்திக் பாண்டியா அண்மையில் நடைப்பெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி அனைவரின் பாரட்டையும் பெற்று வருகின்றார்.

அவர் விளையாடிய சில போட்டிகளிலேயே கபில் தேவ், தோனி போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிடும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இந்திய அணியின் பெஸ்ட் ஃபிணிஷர் என போற்றப்படும் தல தோனியைப் போல, ஹர்திக் பாண்டியா முன்னேறி வருகிறார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1000 பாண்டியாவுக்கு சமம்:

பாண்டியாவை தோனியுடன் ஒப்பிடுவது குறித்து கர்சன் காவ்ரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தயவு செய்து தோனியுடன் பாண்டியாவை ஒப்பிட வேண்டாம். பாண்டியா வளர்ந்து வரும் வீரர். அவரின் திறமை அபாரம்.

சிறப்பாக வளர்ந்து வரும் பாண்டியாவை வாழ்த்தலாமே தவிர, இப்படி ஒப்பிட்டு பேசி அவரின் திறமைக்கு தடையாக அந்த வார்த்தைகள் அமைந்து விடக் கூடாது.

தோனி ஏற்கனவே 3 உலகக் கோப்பைகளை வென்றும், பேட்டிங், கீப்பிங் என பல சாதனைகளைப் படைத்து நிரூபித்து காட்டியவர். அவரின் மேட்ச் ஃபிணிஷிங்கை யாருடனும் ஒப்பிட முடியாது.

தோனி தற்போதும் தன் முழு திறமையை நிரூபித்து 1000 பாண்டியாவுக்கு சமமாக உள்ளார்.” என தெரிவித்துள்ளார்.



ராஞ்சி:


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரகானே, அக்சார் பட்டேல் நீக்கப்பட்டு தவான் மற்றும் சாஹல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.


வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 8 ரன்களில் புவனேஸ்வர் பந்தில் ஸ்டம்பை பறிக்கொடுத்தார்.


அடுத்து பிஞ்ச் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். 7-வது ஓவரின் மூன்றாவது பந்தில் மேக்ஸ்வெல் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய ஆரோன் பிஞ்ச் குல்தீப் யாதவின் 10-வது ஓவரின் 5-வது பந்தில் ஸ்டம்பை பறிக்கொடுத்தார். பிஞ்ச் 30 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ரன்கள் சேர்த்தார்.


பிஞ்ச் ஆட்டமிழந்த பின்னர் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அப்படியே மந்தமானது. ஹென்ரிக்ஸ் 8 ரன்களிலும், ட்ராவிஸ் ஹெட் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பும்ரா வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் பெய்ன் ஸ்டம்பை பறிகொடுத்தார். 4-வது பந்தில் கவுல்டர்-நைல் போல்டானார்.

19-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தில் கிறிஸ்டியன் ரன்அவுட் ஆனார். இந்தியா 18.4 ஓவர்கள் வீசியிருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது.


தொடர்ந்து மழை பெய்ததால் இத்துடன் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளபட்டு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர்.


ரோஹித் சர்மா 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கவுல்டர்-நைல் வேகத்தில் போல்டானார். அடுத்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 5.3 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. தவான் 12 பந்துகளில் 15 ரன்களுடனும், கோலி 14 பந்துகளில் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது டி-20 போட்டி வருகிற 10-ம் தேதி கவுஹாத்தியில் நடைபெற உள்ளது.



ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டிக்கான இந்திய வீரர்களின் பயிற்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.


இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி நாளை முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் துவங்குகிறது.

இந்நிலையில் இன்று முதல் டி-20 போட்டிக்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு தொடர் மழை பெய்ததால், இந்திய அணியினரின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இது இந்த பருவகாலத்தில் சகஜம் தான். ஆனால் இதனால் போட்டிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என மைதான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



உடல்தகுதி தேர்வு புள்ளியில் விராட் கோஹ்லியின் ஸ்கோரை ஆஷிஷ் நெஹ்ரா நெருங்கியுள்ளதாக வீரேந்தர ஷேவாக் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆஷிஷ் நெஹ்ரா இடம்பிடித்துள்ளார்.

நாளை நடக்கும் இந்தியா- அவுஸ்திரேலியா டி20 போட்டியில் அவர் களமிறங்குவார் என தெரிகிறது.

நெஹ்ரா அணியில் சேர்க்கப்பட்டதற்கு சமூகவலைதளங்களில் பலர் கிண்டல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய அணி ஜாம்பவான் வீரேந்திர ஷேவாக் கூறுகையில், நெஹ்ரா சர்வதேச போட்டியில் விளையாடாவிட்டாலும் ஜிம்மில் தினமும் 8 மணி நேரம் செலவழித்தார்.

அதன் பலனாகவே அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய வீரர்களுக்கு நடந்த யோ-யோ உடல் தகுதி தேர்வில் அவர் 17-18 புள்ளிகள் பெற்றுள்ளார்.

இதன் மூலம் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லியின் ஸ்கோரை அவர் நெருங்கியுள்ளதாக கூறியுள்ளார்.



புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கதிர்வேல்- அருணாதேவி தம்பதியின் மகள் கங்கா (19). இவருக்கும் அவரின் உறவினர் பாலுவுக்கும் (21) காதல் இருந்து வந்த நிலையில் கடந்த யூன் மாதம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தனது மனைவி கங்காவை, பாலு அவர் தாய் வீட்டில் விட்டு சென்றார். இந்நிலையில், நேற்று முன் தினம் கங்கா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் விசாரித்து வந்த நிலையில், கங்காவின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனை நடந்த மருத்துவமனை வாசலில் குவிந்த கங்காவின் உறவினர்கள், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில், கங்கா இறந்தது குறித்து பாலுவுக்கு தகவல் கொடுத்தும் அவர் கங்காவின் உடலை பார்க்கவரவில்லை. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் உறுதியளித்ததையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.


கோவில் திருணம் முடிந்து ஊர்வலாக ஆட்பர கார் ஒன்றில் மணமகளுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த மணமகன், திடீரென காரின் கதை திறந்து ஓட்டமெடுத்துள்ளார். இதனால் மணப் பெண் அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் வரவேற்பதற்காக காத்திருந்த உறவினர்கள், அயலவர்கள் எல்லோரும் மணமகன் (மாப்பிளை) காரில் இருந்து இறங்கி ஏன் ஓடுகின்றார் என தெரியாது பதற்றமடைந்தனர்.

மாப்பிளை ஓடும்போது கைக்குழந்தை ஒன்றை கையில் தாங்கியிருந்த பெண் ஒருவர் ”அவனை பிடியுங்கள்“ என உரக்க சத்தமிட்டபோதுதான் எல்லோருக்கும் விடயம் தெரியவந்ததாக செய்தியாளர் கூறினார்.

மாத்தறை மாவட்டத்தின் புறகர் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

கோவிலில் திருமணம் முடிவடைந்து மணமகனும் மணமகளும் விருந்துபசாரத்துக்காக மணமகளின் வீடு நோக்கி ஊர்வலமாக திரும்பிக் கொண்டிருந்தனர். வீடு நெருங்கியதும் மணமக்களின் கார் மெதுவாக நகர்ந்து கொண்டு சென்றது.

மணமக்களை வரவேற்பதற்காக உறவினர்கள் மணமகளின் வீடுக்கு முன்பாகவும் விதிக்கு அருகிலும் காத்திருந்தனர். அப்போது மணமகன் திடீரென கார்க் கதவைத் திறந்து எட்டிப்பார்த்தார். மணமகளின் வீட்டுக்கு அருகில் தனது மனைவி கைக்குழந்தையுடன் நிற்பதைக் கண்டார்.

இதனால் செய்வதறியாது பதற்றமடைந்த மணமகன் காரில் இருந்து இறங்கி ஓட்டமெடுத்தார். அப்போது உறவினர்கள், அயலவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மணமகனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்து விட்டதாக எண்ணி மணமகளின் பெற்றோர் குழப்பமடைந்தனர்.

காருக்குள் இருந்த மணமகள் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தார். மணமகன் ஓடியபோது கைக்குழந்தையுடன் அங்கு நின்ற பெண் ஒருவர் சத்தமிட்டு அழுதவாறு, ”அந்தக் கள்ளனை பிடியுங்கள்“ எனக் கூறிக் கொண்டு, காரில் இருந்து இறங்கிய ஓடிய மணமகனை துரத்திச் சென்றார்.

அப்போதுதான் உறவினர்களுக்கும், அயலவர்களுக்கும் நிலைமை தெரியவந்தது. மணமகன் ஏற்கனவே திருணம் முடித்தவர் என்றும் அதனை மறைத்து இந்த திருமணத்தை செய்துள்ளார் எனவும் அறிந்துகொண்டனர். மணமகனின் மனைவியும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை அங்கு நின்றவர்களிடம் எடுத்துச் சொன்னார். மணமகனை துரத்திப் பிடித்த அயலவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மணப்பெண் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இந்த பேச்சுத் திருமணத்தை ஒப்பேற்றிய கலியாணத் தரகரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



பால்கர் மாவட்டம் விரார் கிழக்கு காஸ்கோப்ரி பகுதியை சேர்ந்தவர் சோம்நாத் . இவருடைய நண்பர் ஆனந்தா இவருக்கு மும்பை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.60 ஆயிரம் வாங்கியிருக்கிறார்.

இந்த பணத்தை சோம்நாத் தனது தந்தையிடம் இருந்து கடனாக வாங்கி, ஆனந்தாவிடம் கொடுத்து உள்ளார்.


ஆனால் ஆனந்தா விமான நிலையத்தில் வேலை வாங்கிக்கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதனால் சோம் நாத் விரக்தி அடைந்தள்ளார்.

இந்நிலையில் நேற்று நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சோம்நாத் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது தரையில் கிடந்த அவரது செல்போனை எடுத்து போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் தூக்கில் உயிருக்கு போராடியபடி தொங்கும் ‘செல்பி’ புகைப்படம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர் எழுதிவைத்த கடிதம்கிடைத்தது.அதில் தனது இந்த முடிவுக்கு ஆனந்தா தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் தனது தந்தையிடமும் மன்னிப்பு கேட்டு எழுதி இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்தியாவை பழி தீர்க்காமல் போகமாட்டோம் ; திருந்தாத ஆஸ்திரேலியா !!

இந்திய அணிக்கு எதிரான டி.20 தொடரை நிச்சயம் கைப்பற்றுவோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று, 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.


அடுத்ததாக இரு அணிகள் இடையேயான 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 7ம் தேதி துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி.20 தொடரை கைப்பற்றிவிட்டு வெற்றியுடன் தான் நாடு திரும்புவோம் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காகவே அந்த அணியில் இடம் பெற்றுள்ள 14 வீரர்களில் 10 பேர் ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.

MARI themes

Powered by Blogger.