இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் வரும் நவம்பர் 16ல் கொல்கத்தாவில் துவங்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அணியை சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி..,) அறிவித்தது.
இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) தற்போது அறிவித்துள்ளது. அதில், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதால், காயம் ஏற்படுவதை தவிர்க்கவே பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தவிர, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பாண்டியா பயிற்சி மேற்கொள்வார் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்:
கோலி (கேப்டன்), ரகானே (துணைக்கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், ஷிகர் தவான், புஜாரா, ரோகித் சர்மா, சகா, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா.


Post a Comment