Showing posts with label Politics. Show all posts




காலியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களின் பொறுமையை மீண்டும் ஒரு தடவை சீண்டிப் பார்க்கும் செயலாகும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் தொடர்பாக அரசின் உயர்மட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் தென் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தான் தொலைபேசியில் உரையாடி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான இந்தத் திட்டமிட்ட தாக்குதலின் பின்னணியை அரசு கண்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவும், அரசு முன்வர வேண்டும் என்று அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.



புதிய அர­சியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூ­கத்தின் முதுகின் மீது நிரந்­த­ர­மான அடிமைச் சாச­ன­மொன்று எழு­தப்­படும் அபாயம் இருப்­ப­தாக அஞ்­சு­கிறோம் என்று அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.
பெண் எழுத்­தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீ.பி. எழு­திய “நான் மூச்­ச­யர்ந்த போது” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்­தளை ஹூணுப்­பிட்டி சாஹிரா மகா வித்­தி­யா­ல­யத்தில் நேற்றுமுன்தினம் நடை­பெற்றது. அந் நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு எச்­ச­ரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தேர்தல் முறை மாற்றம், புதிய யாப்பு உரு­வாக்கம், நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை ஒழிப்பு ஆகிய மூன்று விட­யங்­களும் முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­ளவில் பாதிப்­பான, ஆபத்­தான நிலை­யையே ஏற்­ப­டுத்தும் என நாம் கரு­து­கிறோம். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை மாற்றி சிறு­பான்மை சமூ­கத்தின் வாக்­கு­களை செல்­லாக்­கா­சாக மாற்­று­வ­தற்­கான முயற்சி மிக வேக­மாக நடந்­தேறி வரு­கின்­றது. அத்­துடன் கடந்த காலங்­களில் பாரா­ளு­மன்ற முறை­களில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட மாற்­றங்கள் போல, மீண்டும் இந்த முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வதற்­காக தேர்தல் முறையை மறு­சீ­ர­மைக்க வேண்­டு­மென அரசு வரிந்து கட்டிக்கொண்டு நிற்­கின்­றது.

முஸ்லிம் சமூ­கத்­தி­னது பாரிய பங்­க­ளிப்­பி­னாலும் பல்­வேறு அர்ப்­ப­ணிப்­புக்­க­ளி­னாலும் நாம் விரும்பி உரு­வாக்­கிய நாட்டுத் தலை­மைகள் இவ்­வா­றான புதிய முயற்­சி­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தனால், அதன் மூலம் நமக்கு வரப்­போகும் ஆபத்­துக்கள் குறித்து நாம் கண்­தி­றந்து பார்க்­காமல் கண்­மூ­டித்­த­ன­மா­கவே இருக்­கின்றோம்.

சிறிய பிரச்­சி­னை­க­ளுக்­காக ஊருக்கு ஊர், பிர­தே­சத்­துக்குப் பிர­தேசம் என ஏட்­டிக்குப் போட்­டி­யாக அடி­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றோ­மே­யொ­ழிய நமக்கு முன்னே வந்து நிற்கும் ஆபத்­துக்கள் தொடர்பில் எந்­த­வி­த­மான அக்­க­றையும் காட்­டாமல் இருப்­பதுதான் வேத­னை­யா­னது. அறி­வுள்ள, ஆற்­ற­லுள்ள, பண­ப­ல­முள்ள சமூ­க­மாக முஸ்லிம் சமூகம் பார்க்­கப்­ப­டு­கின்ற போதும் இவ்­வா­றான விட­யங்­களில் அலட்டிக் கொள்­ளாமல் இருப்­பது துர­திர்ஷ்­ட­மா­னதே. சிறிய கட்­சியின் தலைவன் என்ற வகை­யிலும் சிறு­பான்மை சமூ­கத்தைச் சார்ந்த கட்­சி­யொன்றின் பொறுப்­பாளன் என்ற வகை­யிலும் நாம் மிகவும் நொந்து போய் இருந்­தாலும் இந்த ஆபத்­துக்­களை எவ்­வாறு முறி­ய­டித்து, சமூகம் சார் வெற்­றி­களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற அதீத முயற்­சி­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்றோம்.

ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள இளை­ஞர்­களும் தமிழ் இளை­ஞர்­களும் ஆயு­த­மேந்­திய போதும் முஸ்­லிம்கள் அமை­தி­யா­கவே வாழ்ந்­தனர். ஜன­நா­யக வழி­யையே தேர்ந்­தெ­டுத்­தனர். நமது அர­சியல் முன்­னோ­டிகள் கற்­றுத்­தந்த வழி­மு­றை­களை பின்­பற்­றியே ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் எப்­போதும் ஒத்­து­ழைத்து வந்­தனர், வரு­கின்­றனர். இந்த யதார்த்­தத்­தை அனை­வரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்ச் சகோ­த­ரர்கள் மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக அர­சியல் தீர்வு ஒன்றை தேடி நிற்கும் பின்­ன­ணி­யிலும், அந்த கோரிக்­கையை எவ்­வாறு நிறை­வேற்­று­வ­தென்ற ஆழ­மான சிந்­த­னையில் அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்டு வரும் சூழ்­நி­லை­யிலும் முஸ்­லிம்­களின் சவால்­களை வென்­றெ­டுக்க வேண்­டிய நிலை நமக்கு நேரிட்­டுள்­ளது.

கல்வி, பொரு­ளா­தார, வாழ்­வா­தார மற்றும் மீள்­கு­டி­யேற்ற பிரச்­சி­னை­களைத் தீர்க்கும் நோக்கில் எமது கட்சி பல கட்­ட­மைப்­புக்­களை வைத்துக்கொண்டு நேர்­மை­யுடன் முன்­னெ­டுத்துச் செல்­கின்­றது. எனினும் இந்த பய­ணத்தை தடுப்­ப­தற்­காக பல முனை­க­ளிலும் அம்­புகள் எய்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. சமு­தாயம் சார்ந்­த­வர்­களின் அம்­பு­களும் சிங்­களப் பேரி­ன­வா­தி­களின் அம்­பு­களும், தமிழ்ப் பேரி­ன­வா­தி­களின் அம்­பு­களும் வெவ்வேறு வடி­வங்­களில் பல்­வேறு கோணங்­களில் இருந்தும் நமக்கு எறி­யப்­பட்ட போதும் இறை­வனின் உத­வி­யினால் அவற்­றை­யெல்லாம் முறி­ய­டித்துக்கொண்டு முன்­னேறும் சக்­தியை இறைவன் தந்­துள்ளான்.

சமூ­கத்­துக்கு நேர்ந்­துள்ள ஆபத்­துக்­களை வெளியில் பேசினால் ஆட்­சியை தொலைக்­கப்­பார்க்­கிறார், முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் ஒப்­பந்தம் மேற்­கொண்டு விட்டார், நல்­லாட்­சியை வீட்­டுக்கு அனுப்ப துடிக்­கின்றார் என்­றெல்லாம் கதை­ய­ளந்து எமது குரல்­வளையை நசுக்­கு­வ­தற்கு எத்­த­னிக்­கின்­றனர் என்றார்



ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவுக்கும்முஸ்லிம்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிசெயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.


அனுராதபுர மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்துவெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒரு பௌத்த கட்சி என்ற பெயர் அண்மைக்காலமாகஇருந்தது அதனால் தமிழ் முஸ்லிம் மக்கள் எம்மிடம் இருந்து தூரமாகினர்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரி கட்சித் தலைமை பொறுப்பேற்ற பின்னர்எம்மிடம் இருந்து பிரிந்து சென்ற தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டும்எம்மோடு இணைந்து எமக்கு பலம் சேர்த்துள்ளனர்.


(எம்.ஏ.றமீஸ்)

கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் எமது முஸ்லிம் சமூகம் ஏமாற்றப்பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக எமது சமூகம் உள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும் வன ஜீவிகளுக்கும் எழுதப்பட்டுள்ளன. இவைகளை எல்லாம் கேட்பார் பார்ப்பாரற்ற சமூகமாகவும் தேர்தற் காலங்களில் மாத்திரம் கோசமிடுகின்ற அரசியல் தலைமைகளைக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது சமூகம் உள்ளது என கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.


ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் சரட்டி நிறுவனத்தின் உதவி மூலம் பொத்துவில் ஹிஜ்ரா நகரில் நவீன முறையில் அமைக்கப்படவுள்ள ஐம்பது வீட்டுத் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

காரிய வள கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.அப்துல் மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தொடர்ந்தும் உரையாற்றுகையில், எந்த சமூகத்திலும் இல்லாதவாறு எங்களை நாங்களே ஏமாற்றுகின்ற கலாசாரத்தினைக் கொண்ட சமூகமாக இன்று வரை எமது சமூகம் இருந்து வருகின்றது.


இறைவன் எமக்களித்திருக்கின்ற அறிவினை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். புரையோடிப் போயிருக்கும் தீய பல விடயங்களிலிருந்து எமது சமூகத்தினைக் காத்துக் கொள்ள நாம் விழிப்படைய வேண்டும். சீரிய சிந்தனைகளை எமக்குள்ளே வளர்த்துக் கொள்ள வேண்டும், கல்வியிலே எமது சமூகம் உயர்வடைய வேண்டும். நல்ல பொருளாதாரத்தினைக் கொண்ட சமூகமாக இந்நாட்டிலே எமது சமூகம் மிளிர்வதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.


எதிர்காலச் சந்ததியினரை சுதந்திரமாகவும், வளம் மிக்க சமூகத்தினராகவும் வாழ வைப்பதற்கான பாரிய வேலைத்திட்டத்தினை நாம் முன்னெடுத்துச் செல்ல அனைவரும் முனைப்புடன் செயற்பட வேண்டும். அதற்காக நாம் அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமைப்பட்டு செயற்படுகின்ற கலாசாரத்தினை ஏற்படுத்த வேண்டும். விட்டுக் கொடுப்புடனும் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் செயற்படுகின்றவர்களாக நாம் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்

இந்த நாட்டில் இனவாதம் மலிந்து கிடக்கின்ற இக்காலத்தில் நல்ல பல திட்டங்களை நாம் கொண்டு வருகின்றபோது உதவிகளைச் செய்யாமல் உபத்திரங்ளைக் கொடுக்கின்ற ஒரு கூட்டத்தினர் இந்நாட்டில் வளரந்து வரும் இத்தருணத்தில் நல்லெண்ணம் கொண்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் புத்தி ஜீவிகளும், கல்விமான்களும் எமது மக்களுக்கான நல்ல பல காரியங்களைச் செய்து கொடுப்பதற்கு முன்வர வேண்டும். அப்போதுதான் நாம் நல்ல பல அபிவிருத்திகளைச் செய்ய முடியும் என்றார்.

பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இங்குள்ள வருமானம் குறைந்த மக்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியதாக உள்ளது.


காலத்திற்குக் காலம் வாய்ப்பேச்சுக்களை மாத்திரம் வீசிச் செல்கின்ற தலைமைகளாக நாம் இருக்க முடியாது. செயற்பாடுகளில் நமது வீரத்தினைக் காட்ட வேண்டும். நாம் மக்களுக்காக நல்ல பல சேவைகளை புரிவதற்காக முன்னின்று செயற்படுகின்றோம் என்றார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் முயற்சியினால் சேஹ் செய்யட் பின் சுல்தான் அல்-நஹ்யன் கிராமம் என்னும் பெயரில் உருவாக்கப்படவுள்ள இவ்வீடமைப்புத் திட்டத்தில் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ள ஐம்பது வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்றும் அதில் பாடசாலை மற்றும் சுகாதார நிலையம் போன்ற வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வின்போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் அப்துல் ஹமீட் அப்துல் பத்தாஹ் காசிம் அப்துல் பத்தாஹ் அல்-முல்லா, டுபாய் சரட்டி அமைப்பின் செயலாளர் நாயகம் அஹமட் மொஹமட் பின் மிஸ்மர் அல்-சம்சி, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தின் முக்கியஸ்தர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், சமூக மட்ட முக்கியஸ்தர்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டனர்.








(பிறவ்ஸ்)


முஸ்லிம் அரசியலில் புதிய யுகமாற்றம் நிகழ்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய அழுத்தக்குழுவான ஒரு இளைஞர் படை தேவை. தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களை கேள்விக்குட்படுத்தும் வகையில், அவர்களை பொறுப்புதாரியாக மாற்றுகின்ற ஒரு யுகமாற்றத்துக்கான அறைகூவலை விடுக்கிறேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


இளைஞர் காங்கிரஸ் பேரவை அமைப்பதற்கான முதற்கட்ட செயலமர்வு இன்று (09) கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உரிமைக்கு குரல்கொடுப்பதற்காகவே மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபினால் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால், இன்று பல அபிவிருத்திகள் கட்சிமூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அபிவிருத்திகள் மட்டும்தான் கட்சியின் நோக்கம் என்று யாரும் நினைத்துவிடக்கூடாது. மேடைப் பேச்சுகளும், பத்திரிகை அறிக்கைகளும் உரிமைக்கு தீர்வை கொண்டுவரமாட்டாது. அதற்கான காத்திரமான முன்னெடுப்புகளை செய்தாகவேண்டும்.


உரிமைக்காக உருவாக்கப்பட்ட இக்கட்சி இன நல்லிணக்கத்துக்கு தூரப்பட்ட ஒரு கட்சியாக இருக்கமுடியாது. உலகளவில் கூட இன நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டு வரும்வகையில் இளைஞர்களின் பங்களிப்பு மிக பிரதானமானது. முஸ்லிம் சமூகம் மீதான பேரினவாதிகளின் சந்தேகத்தை கலைவதற்கான எங்களுடைய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் அவதானம் செலுத்தவேண்டும். இதில் இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது.


இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் சிங்கள மற்றும் தமிழ் சமூகத்துடன் உறவாடல்களை மேற்கொள்ளவேண்டும். விளையாட்டு, கலைநிகழ்ச்சி போன்றவற்றை நடாத்தி அவர்களுடன் நல்ல தொடர்புகளை பேணமுடியும். இவ்வாறான செயற்பாடுகள் எம்மீதுள்ள வீண் சந்தேகங்களை களைவதற்கு உதவியாக இருக்கும். முஸ்லிம்கள் மீதான வீண் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நான் புத்தகமொன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். அது விரைவில் வெளிவரும்.


இளைஞர் காங்கிரஸ் அணியின் அனர்த்த நிவாரணக்குழு அண்மைக்காலங்களில் சிறப்பாக செயற்பட்டு வந்தது. இதை நாடுமுழுவதும் விஸ்தரிக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அடங்கிய அனர்த்த நிவாரணக்குழுவை அமைக்கவேண்டும். இதுதவிர, மக்களின் ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களின் வீடுகளில் மரங்களை நட்டுவிட்டு, அந்தக் குடும்பத்துக்கும் கட்சிக்குமான உறவுப்பாலமாக இளைஞர்கள் இருக்கவேண்டும்.


எதிர்காலங்களில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் தேவையான சமூக செயற்பாடுகளில் இளைஞர் காங்கிரஸ் ஆர்வம் காட்டுவதோடு, கட்சியின் வளர்ச்சிப் பணியிலும் பங்களிப்பு செய்யவேண்டும். ஒவ்வொரு இளைஞரும் இந்தக் கட்சி எதற்காக உருவாக்கப்பட்டது, கட்சி தியாகங்கள் என்று சகல விடயங்களை தெரிந்துவைத்திருக்க வேண்டும். அப்போதுதான் கட்சித் தொண்டர்கள் போராளிகளாக மாறி கட்சியை உரமூட்டமுடியும்.

MARI themes

Powered by Blogger.