Showing posts with label Technology. Show all posts



நினைவுகளை அழிக்ககூடிய மற்றும் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய திறனை மனிதர்களுக்கு வழங்ககூடிய மைக்ரோ CHIPனை அமெரிக்காவின் கெர்னல் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

மனிதனின் மூளையில் இந்த CHIP னை பொருத்துவதன் மூலம் மனிதனின் செயல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்று கெர்னல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனால் இன்னும் 15 ஆண்டுக்குள் அனைவரும் சூப்பர் ஹீரோக்கள் போல் செயல்படலாம் என கெர்னல் நிறுவனத்தின் தலைவர் பிரையன் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி இந்த CHIPஐ சாதாரண மக்களும் வாங்கும் வகையில் குறைந்த விலையில் விற்கவுள்ளதாகவும் பிரையன் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.



அருங்காட்சியகங்களுக்கு செல்லும் போது, கலைப் படைப்புக்களை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கான் செய்து, அவை தொடர்பில் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில், ‘ஸ்மார்ட்டிபை’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியினை ஐபோன் மற்றும் அன்ரொயிட் போன்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

கைபேசிகளுக்குள் அடங்கியுள்ள இவ் உலகில், தொலைபேசிகளுக்கான மென்பொருட்களும் அதிகளவில் உருவாகி, எமது தேவைகளை காலத்தின் வேகத்துக்கு ஏற்ப இலகுபடுத்துகின்றது.

அந்த வகையில், குறித்த செயலியும் சுற்றுலா செல்பவர்களுக்கு மொழி, பாகுபாட்டை தூண்டிவிடாமல் பயன்பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.



தேர்வு என்றாலே எல்லோருக்கும் பயம் இருக்கத்தான் செய்யும். அதிலும் சிறுவர்களுக்கு காய்ச்சலே வந்துவிடும். என்ன தான் தேர்வுக்கு படித்தாலும் எழுதப்போகும் இடத்தில் திக்கு திக்குனு இருக்கும். அதுக்காக சிலர் காப்பி அடிக்குற அளவுக்கும் போவதுமுண்டு.

இங்கே ஒரு மாணவன் எப்படியெல்லாம் யோசிச்சிருக்கானு பாருங்க. தேர்வுக்கு பயன்படுத்தும் பரிட்சை அட்டையில நவீன வகையில் பயன்படுத்தி காப்பி அடித்து மாட்டியுள்ளான்.

காப்பி அடித்து மாட்டிக் கொண்ட மாணவனிடமிருந்து கைப்பற்றபட்ட நவீன காப்பி அடிக்கும் பரிட்சை அட்டை பார்த்து ஆசிரியர்கள் வியந்து போய் விட்டனர்.

nnnn


மாத்தறையில் யுவதி ஒருவரை சந்திப்பதற்காகசென்ற இளைஞர்அதிர்ச்சி சம்பவம் ஒன்றுக்குமுகங்கொடுத்துள்ளார்.


பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய யுவதிசந்திப்பதற்காக மாத்தறை கடற்கரைக்கு சென்ற23 வயதுடைய இளைஞர் ஒருவரேபாதிக்கப்பட்டுள்ளார்.


பேஸ்புக் ஊடாக அறிமுகமாகி இருவரும் வைபர்ஊடாக தங்கள் நட்பை வளர்த்துள்ளனர்.


நாளடைவில் குறித்த இளைஞனை மாத்தறைகடற்கரைக்கு வருமாறு யுவதி அழைப்புவிடுத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்டஇளைஞன் கடற்கரைக்கு சென்றுள்ளார்.


தான் இதுவரை பார்த்திராத யுவதியை நேரில்பார்க்கும் மிகவும் ஆர்வத்துடன் கடற்கரைக்குசென்றுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை ஊடாக மாத்தறைநகரத்திற்கு வந்த இளைஞனை முச்சக்கர வண்டிஒன்றுக்கு பின்னால் வருமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதன்போது வலுக்கட்டாயமாக குறித்துஇளைஞனை, முச்சக்கர வண்டியில் ஏற்றியகுழுவினர், அவரை தெவுன்தர துறைமுக பகுதிக்குகொண்டு சென்றுள்ளனர்.
அங்கு வைத்து ஒரு லட்சத்து 60 ஆயிரம்பெறுமதியான கையடக்க தொலைபேசியைபறித்து கொண்டு இளைஞனை வீதியில் விட்டுச்சென்றுள்ளனர்.

பேஸ்புக் காதலினால் இவ்வாறு பலர் தொடர்ந்துஏமாற்றப்படுவதாக இது தொடர்பில் அவதானமாகஇருக்குமாறு இளைஞர்களிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.



புளூ வேல் விளையாட்டை முறியடிக்க கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஒரு புதிய கேமை உருவாக்கி உள்ளனர்.

கேரள மாநிலம், கன்னூரில் உள்ள ஆம்பிஷியஸ் காலேஜ் ஆப் அட்வான்ஸ் ஸ்டெடிஸ் என்ற கல்லூரி மாணவர்களும், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் சேர்ந்து இந்த புதிய கேமை உருவாக்கி உள்ளனர்.
இந்த விளையாட்டில் 10 வகையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். அதில் முதல் நிலையில் மாணவர்கள் தங்கள் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட வேண்டும்.
அதே போன்று பத்து விதமான கட்டளைகள் கொடுக்கப்படும் அதனை மாணவர்கள் செய்து முடித்தால் போதுமானது.
புத்தகங்கள் படிப்பது, முதியோர் இல்லத்துக்கு செல்ல வேண்டும்.
மாணவர்கள் அனைவரும் சுற்றுலா செல்ல அறிவுறுத்தப்படுவர்.
சேற்றில் விளையாட வேண்டும்.
மாணவர்கள் புற்றுநோய் சிகிச்சை மையம், அல்லது வலி நிவாரண சிகிச்சை மையத்திற்கு செல்ல வேண்டும்
சமைத்தல், சுத்தம் செய்தல், படித்தல், பாட்டு கேட்டல், உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த புதிய விளையாட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.



இன்றைய நவீன உலகில் ஒருவர் சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவார்கள். ஆனால் செல்போன் இருப்பது கஷ்டம்.

அந்த செல்போன்களால் தொலைதொடர்புக்கு பல நன்மைகள் இருந்தாலும், பெண்கள் விஷயத்தில் கெட்ட விஷயங்களே அதிகம் நடக்கிறது.


அதுபோல 13 வயதான 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அவரது பெற்றோர் செல்போன் ஒன்றை வாங்கி தந்தனர்.

எந்த நேரமும் அந்த செல்போனிலேயே நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.

எனவே சந்தேகத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் அந்த செல்போனை ஆய்வு செய்தபோது அதில் ஒரு போல்டரில் ரோஸ் லவ்வர் என்ற போல்டர் கிரியேட் செய்யப்பட்டுள்ளது.

அதனை பார்த்தபோது 28 ஆண்களின் பெயர்களும், அவர்களது போன் நம்பரும் இருந்தது.

இதனை தொடர்ந்து அந்த சிறுமியை பெற்றோர் கண்காணித்தபோது இரவில் அந்த அனைத்து ஆண்களிடமும் போனில் பேசிவிட்டு, சாட்டிங் செய்து விட்டுதான் தூங்குகிறாள் என்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் அவளது பெற்றோர் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.

மகளை கண்டித்து செல்போன் சாட்டிங்கில் இருந்து நிறுத்தி விட்டனர். ஆனால் அந்த 28 ஆண்கள் மூலம் வேறு ஏதாவது ரூபத்தில் பிரச்னை வருமோ என அச்சத்தில் உள்ளனர் அந்த சிறுமியின் பெற்றோர்.

MARI themes

Powered by Blogger.