மீண்டும் வெளுத்து வாங்கும் கன மழை… அச்சத்தில் சென்னை மக்கள்
சென்னையில் கடந்த ஒரு மணிநேரமாக மீண்டும் கன மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக கனமழை தொடருகிறது. நேற்று பிற்பகல் தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்தது.
இதில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் ஒட்டுமொத்த சென்னையின் இயல்பு வாழ்க்கையே இன்று ஸ்தம்பித்தது.
நேற்று இரவு தேங்கிய தண்ணீரே இன்று முழுமையாக வெளியேறாத நிலையில், தற்போது மீண்டும் கன மழை பெய்து வருகிறது.
இக்கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நேற்றைப் போலவே இன்றும் விடிய விடிய கனமழை கொட்டுமோ என்கிற அச்சம் சென்னைவாசிகளிடத்தில் ஏற்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


Post a Comment