(Asela Gunerathne return Sri Lanka Squad 2017)
இலங்கை அணியின் சகலதுறை வீரர் அசேல குணரத்ன உபாதையிலிருந்து குணமாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
அசேல குணரத்னவின் உபாதை குணமாகவில்லையென செய்தி வெளியிடப்பட்டிருந்த போதும், அஷ்லி டி சில்வா மற்றும் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் நிக் போதஸ் ஆகியோர், அசேல குணரத்ன உபாதையிலிருந்து குணமாகியுள்ளமையை உறுதிசெய்துள்ளனர்.
இதேவேளை எஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரும் உபாதையிலிருந்து நீங்கியுள்ளதாகவும் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் அசேல குணரத்ன, குசல் பெரேரா மற்றும் எஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரை அணியில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்திய தொடருக்கான இலங்கை குழாம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment