செல்பி எடுத்துக்கொண்டே தூக்கில் தொங்கிய வாலிபர்! நடந்தது என்ன தெரியுமா?!



பால்கர் மாவட்டம் விரார் கிழக்கு காஸ்கோப்ரி பகுதியை சேர்ந்தவர் சோம்நாத் . இவருடைய நண்பர் ஆனந்தா இவருக்கு மும்பை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.60 ஆயிரம் வாங்கியிருக்கிறார்.

இந்த பணத்தை சோம்நாத் தனது தந்தையிடம் இருந்து கடனாக வாங்கி, ஆனந்தாவிடம் கொடுத்து உள்ளார்.


ஆனால் ஆனந்தா விமான நிலையத்தில் வேலை வாங்கிக்கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதனால் சோம் நாத் விரக்தி அடைந்தள்ளார்.

இந்நிலையில் நேற்று நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சோம்நாத் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது தரையில் கிடந்த அவரது செல்போனை எடுத்து போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் தூக்கில் உயிருக்கு போராடியபடி தொங்கும் ‘செல்பி’ புகைப்படம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர் எழுதிவைத்த கடிதம்கிடைத்தது.அதில் தனது இந்த முடிவுக்கு ஆனந்தா தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் தனது தந்தையிடமும் மன்னிப்பு கேட்டு எழுதி இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.