பரபரப்பான போட்டியில் பட்டையை கிளப்பிய இந்தியா… தொடரை கெத்தாக கைப்பற்றியது



நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.


இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.




இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 147 ரன்களும், கேப்டன் கோஹ்லி 113 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 337 ரன்கள் எடுத்தது.


இதனையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான கப்தில் 10 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்ததாக ஜோடி சேர்ந்த வில்லியம்சன் – முன்ரோ கூட்டணி இந்திய அணிக்கு நீண்ட நேரம் தலைவலியை கொடுத்து மளமளவென ரன் குவித்தது.


முன்ரோ 75 ரன்களும்,வில்லியம்சன் 64 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.

அடுத்தடுத்து வந்த டெய்லர் 39, லாதம் 65, நிக்கோலஸ் 37 என அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடிதன் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 14 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீசிய பும்ராஹ் அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி மிரட்டியதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கெத்தாக கைப்பற்றியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.