மும்பையிலிருந்து டெல்லிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே தரையிறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகு, விமானப் பணிப்பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு ஒரு மர்ம கடிதம் ஒன்று சிக்கியது.
அதில் விமானம் கடத்தப்பட்டு, குண்டு வைத்து தகர்க்கப்படும் என எழுதியிருந்தது. இதனை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த ஊழியர் இது பற்றி விமான பைலட்டுக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார். அதிகாரிகள் உடனடியாக தரையிறங்க அனுமதித்தனர்.
விமான நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பு காணப்பட்டது. பாதுகாப்பு படையினர் விமானம் தரையிறங்கியது சுற்றி சூழ்ந்துக்கொண்டு அனைவரையும் தீவிர சோதனை செய்தனர்.
ஆனால் விமானத்தில் தீவிரவாதிகள் யாரும் இல்லை. இந்த திடீர் கடிதம் பற்றி பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Post a Comment