அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகள் /டிப்ளோமா தாரி ஆசிரியர்களுக்கான 05 நாட்கள் கொண்ட திசை முகப்படுத்தல் பயிற்சி செயலமர்வு ஒன்றை நடாத்த வ.ம.மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.இது சம்பந்தமான கடிதம் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
வதிவிட பயிற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச் செயலமர்வு எதிர்வரும் 2017.11.04 பி .ப 1.00 மணி தொடக்கம் 2017.11.09 பி .ப.3.00 மணி வரையில் அநுராதபுரம் கல்வி அபிவிருத்தி மத்திய நிலையத்தில் இடம் பெறவுள்ளதாகவும் ,காலை உடற் பயிற்சிக்குத் தேவையான உடைகளுடன்,பயிற்சிச் செயலமர்வுக்குப் பொருத்தமான ஆடைகளுடனும் சகல ஆசிரியர்களும் கட்டாயம் சமூக மளிக்குமாறும் வேண்டப் பட்டுள்ளனர் .
கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு தங்குமிட வசதி,உணவு,பானம் என்பனவற்றுடன் கடமை லீவும் வழங்கப் படவுள்ளதாக 2017.10.23 ஆம் திகதி இடப்பட்ட உமெப/அ.தெ/சங்/01/10/2017 ஆம் இலக்கமிடப்பட்ட கடிதத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர் .
ஏ.ஆர்.எம்.ரபியுதீன் - அநுராதபுரம் நிருபர்


Post a Comment