ரோஹிங்யா அகதிகளின் வருகையால் நெருக்கடியை சந்திக்கும் பங்களாதேஷ்



மியன்மாரின் ரக்ஹைன் மாநிலத்தில் இராணுவத்தினர் நடத்தி வரும் அத்துமீறல் நடவடிக்கைகளால் கடந்த 15 நாட்களில் சுமார் மூன்று இலட்சம் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.

பங்களாதேஷிற்கும் மியன்மாருக்கும் இடையே உள்ள இடைவெளி 278 கிலோ மீற்றர்கள்.

இத்தூரத்தை கடக்க கடல் , தரை என இரு வழிகள் உள்ளன. கடல் வழியாக வருகின்றவர்கள் பணத்தைக் கொடுத்து சிறிய படகுகளில் தப்புகின்றனர். 


தரை வழியாக வருகின்றவர்கள் நடந்தே இத்தூரத்தை கடக்க வேண்டியுள்ளது. இரண்டுமே ஆபத்துகள் நிறைந்தவை என்றாலும், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பிவரும் ரோஹிங்யா அகதிகளுக்கு வேறு வழியில்லை.

பங்களாதேஷில் உள்ள காக்ஸ் பஜார் என்ற இடம் இவர்கள் பெரும்பாலும் வந்து சேரக்கூடிய இடமாக உள்ளது. 


1970 முதல் மியன்மாரிலிருந்து வெளியேறிய சுமார் 4 இலட்சம் ரோஹிங்யா அகதிகள் இதன் சுற்றுவட்டார பகுதியிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களில் வந்தோரின் எண்ணிக்கை 290,000. கடந்த செப்டம்பர் 7 அன்று ஐ.நா. அதிகாரிகள் அளித்த தகவலின் படி 270,000 ஆக இருந்த எண்ணிக்கை, அடுத்த ஒரே நாளில் 20,000 பேராக அதிகரித்து 290,000 ஆகியுள்ளது.

தஞ்சமடையும் ரோஹிங்யா அகதிகளில் பெரும்பாலானோர் பத்து நாட்களுக்கு மேலாக உணவின்றி வருவதாகவும் பணம் மற்றும் உணவிற்கான உதவிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் உலக உணவுத் திட்டம் (WFP) கூறியுள்ளது.

ரோஹிங்யா அகதிகளால் கடுமையான சமூக - பொருளாதார - சுற்றுப்புற நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பங்களாதேஷ் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்ற நிலையில், தற்போது அதிகரித்து வரும் ரோஹிங்யா அகதிகளின் எண்ணிக்கை பங்களாதேஷிற்கு நெருக்கடியினை உருவாக்கும் என கூறப்படுகின்றது.

tamilwin
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.