ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக இருப்பதாக இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்ற இந்திய கிரிக்கெட் அணி இலங்கையுடன் 5 ஒருநாள், 3 டெஸ்ட் மற்றும் ஒரு டி.20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று ஒட்டுமொத்த தொடரையையும் முழுமையாக கைப்பற்றியது.
இதன்பின் இந்தியா வரும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இந்திய அணிக்கு எதிராக ஒருநாள், டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான அட்டவணையை பி.சி.சி.ஐ., வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Post a Comment