நாடு மோசமான கொள்கைகளுடன் தவறான திசையில் பயணிக்கிறது.



நல்லாட்சி அரசாங்கம் தமது ஆட்சியை தக்கவைக்க தேர்தல்களை பிற்போட்டு வருகின்றனர்.பெண்களின்பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளை கூறிக்கொண்டு சகல தேர்தல்களையும் பிட்போடவே முயற்சித்துவருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் 20 வருட அரசியல் வாழ்வின் பூர்த்த்தியை முன்னிட்டுஇடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,!


நாட்டுக்கு பொருத்தம் இல்லாத கொள்கைகளையும், சட்டங்களையும் கொண்டுவந்து நாட்டின் இறைமையைஅழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

நல்லாட்சி அரசாங்கம் தந்திரமான முறையில் தேர்தலை பிற்போட்டு தமது ஆட்சியை தக்கவைக்கை முயற்சித்துவருகின்றனர். 

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் தேர்தலை பிற்போட தயாராக இல்லையாம். எனினும் பெண்களின் அரசியல்பலத்தை பெருக்கவே தேர்தல்கள் தாமதமாகின்றது என்றும் அரசாங்கம் கூறுகின்றது. 

நாம் உருவாக்கிய இந்த நாட்டின் அமைதியும் ஜனநாயகமும் இன்று அழிக்கப்பட்டு மோசமான திசையில் நாடுபயணித்து வருகின்றது. மேலும் இந்த நாட்டுக்கு ஏற்கப்படாத பல சட்டங்கள், கொள்கைகள் இந்த ஆட்சியில்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் போது இந்த நாட்டை ஆதரிக்கும், நேசிக்கும் எம்மால் ஒருபோதும்ஏற்றுகொள்ளமுடியாது உள்ளது என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.