ப்ளூவேல் விளையாட்டல்ல! குரூர மனம் படைத்த மனநோயாளிகள் உங்கள் சாவுக்கு விரிக்கும் வலை! அவதானம்!


(Blue Whale Challenge Suicide Game Vigilant Regards Symptoms)

உலகம் முழுவதும் பிரபலமடைந்த ப்ளூவேல் விளையாட்டு தற்போது கிராமங்களிலும் ஊடுருவி மாணவர்களின் உயிரை பறித்து வருகிறது.

ரஷ்யாவில் உருவாக்கப்பட்டதுதான் ப்ளூவேல் எனப்படும் நீல திமிங்கல விளையாட்டு. இந்த விளையாட்டில் மொத்தம் 50 நிலைகள் உள்ளன.

இதை விளையாடத் தொடங்கியதும் நம் செல்போன், லேப்டாப்பில் உள்ள தகவல்கள் திருடப்படுகிறது.


இதை விளையாடுபவருக்கு தினமும் குறுந்தகவல் ஒன்று அனுப்பபடும், அந்த குறுந்தகவலில் கொடுக்கப்படுள்ளவைகளை அப்படியே செய்யவேண்டும்.

ஒருவேளை இந்த கட்டளைகளை செய்ய மறுத்து விளையாட்டை பாதியில் முடித்து கொள்வதாக கூறினால் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தகவல்களை வெளியே தெரிவித்து விடுவோம் என்று மிரட்டல்கள் வருகின்றன. இதற்கு பயந்து விளையாடி ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதில் உள்ள 50 சவால்களும் இதோ :

01 : ஒரு ரேஸர் கொண்டு கையில் “f57” என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

02 : அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து, கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை பார்க்க வேண்டும்.

03 : ஒரு ரேஸர் கொண்டு நரம்புகளோடு சேர்த்து மணிக்கட்டை வெட்டிக்கொள்ள வேண்டும், ஆனால் மிகவும் ஆழமாக வெட்டிக்கொள்ள கூடாது.வெறும் 3 வெட்டுக்கள் நிகழ்த்தி அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

04 : காகிதத்தில் ஒரு திமிங்கிலத்தை வரைந்து, அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

05 : நீங்கள் ஒரு திமிங்கிலமாக மாற தயாராக இருந்தால், காலின் மீது YES என்று வெட்ட வேண்டும். இல்லையென்றால் – கைப்பகுதியில் பல முறை வெட்டிக்கொள்ள வேண்டும் (அதாவது தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள வேண்டும்)

06 : சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு டாஸ்க்.


07 : கையில் “f57” என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

08 : ஒரு ரஷியன் ஆன்லைன் சமூக ஊடக மற்றும் சமூக வலைப்பின்னல் சேவையான கொண்டெக்ட் (VKontakte) அக்கவுண்டில் #i_am_whale என்று ஸ்டேட்டஸ் டைப் செய்ய வேண்டும்.

09 : பயத்தை நீங்கள் கடக்க வேண்டும்.

10 : அதிகாலை 4:20 மணிக்கு எழுந்து ஒரு வீட்டுக்கூரைக்கு மேலே ஏற வேண்டும்

11: ஒரு ரேஸர் கொண்டு கையில் திமிங்கலம் ஒன்றை செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

12: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை நாள் முழுவதும் பார்க்க வேண்டும்.

13: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் இசையை கேட்க வேண்டும்.

14: உதட்டை வெட்டிக்கொள்ள வேண்டும்.

15 : பல முறை ஒரு ஊசி கொண்டு கையை குத்திக்கொள்ள வேண்டும்.

16 : அவர்களுக்கு அவரே வலியை ஏற்படுத்தி, நோய்வாய்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

17 : கண்டுபிடிக்க முடிந்த மிகவும் உயரமான கூரையின் மீது ஏற வேண்டும், சில நேரம் விளிம்பில் நிற்க வேண்டும்.

18 : ஒரு பாலத்தின் மீதேறி அதன் விளிம்பில் நிற்க வேண்டும்.

19 : ஒரு கிரேன் மீது ஏற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஏறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

20 : விளையாடுபவர் நம்பகமானவரா எனக் கண்காணிப்பாளர் கேட்டறிவார்.

21 : ஸ்கைப் உதவியுடன் மற்றொரு திமிங்கலத்துடன், அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன் பேச வேண்டும்.

22 : ஒரு கூரை மீதேறி, அதன் விளிம்பில் உட்கார்ந்து கால்களை தொங்க விட வேண்டும்.

23 : மற்றொரு சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு டாஸ்க்.

24 : இரகசிமான டாஸ்க்.

25 : திமிங்கலத்துடன் (அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன்) சந்திப்பு நிகழ்த்த வேண்டும்.

26 : எப்போது மரணிக்க வேண்டுமென்ற தேதியைக் கண்காணிப்பாளர் சொல்வார், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

27 : அதிகாலை 4:20 மணிக்கு விழித்து அருகாமையில் கண்டுபிடிக்க முடிந்த தண்டவாளங்கள் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்.

28 : ஒரு நாள் முழுவதும் யாருடனும் பேசக்கூடாது.

29 : “நான் ஒரு திமிங்கிலம்” என்ற சபதமெடுக்க வேண்டும்.

30-49 : ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:20 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். கண்காணிப்பாளர் அனுப்பும் திகில் வீடியோக்கள் மற்றும் இசையை கேட்க வேண்டும், நாள் ஒன்றிற்கு ஒரு வெட்டை உடலில் நிகழ்த்த வேண்டும் மற்றும் ஒரு “திமிங்கலத்துடன்” பேச வேண்டும்.

50 : ஒரு உயரமான கட்டிடத்தின் மேலே ஏறி அங்கிருந்து குதித்து மரணிக்க வேண்டும்.

உயிருக்கு உலை வைக்கும் இந்த கேம் விளையாடுவதை தடுக்க பெற்றோர் தங்களது பிள்ளைகளிடம் நவீன செல்போனை கொடுக்க வேண்டாம். அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.

பிள்ளைகளின் உடலில் கீறல் காயங்களை கண்டால் உடனே உஷாராகி கொள்ளுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.