அசார் அலியின் போராட்டத்தால் வலுவான நிலையில் பாகிஸ்தான்



பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான ஷான் மசூத், சமி அஸ்லம் மற்றும் அசார் அலி ஆகியோரின் அரைச் சதங்களுடன் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் காணப்படுகின்றது.

போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை முதல் இன்னிங்சினை (419 ஓட்டங்களுடன்) நிறைவு செய்த பின்னர், பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சினைஆரம்பித்திருந்த பாகிஸ்தான் அணி 23 ஓவர்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி64 ஓட்டங்களினைப் பெற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது சிறப்பானதொடக்கம் ஒன்றினை வெளிக்காட்டியிருந்தது. களத்தில் ஆரம்ப வீரர்களான ஷான்மசூத் 30 ஓட்டங்களுடனும் சமி அஸ்லம் 31 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.இலங்கை அணியினை விட 355 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த பாகிஸ்தான் இன்றுபோட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமது துடுப்பாட்டத்தினை தொடர்ந்தது.

பொறுப்புடன் ஆடிய பாகிஸ்தானின் ஆரம்ப வீரர்கள் முதலாம் விக்கெட்டுக்காக 114 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இலங்கைக்கு மிகவும் தேவையாககாணப்பட்டிருந்த பாகிஸ்தானின் முதல் விக்கெட்டினை போட்டியின் 45 ஆவது ஓவரில்தில்ருவான் பெரேரா மூன்றாம் நடுவரின் உதவியோடு கைப்பற்றியிருந்தார். இதனால்தனது 7 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தினை பூர்த்தி செய்த சமி அஸ்லம் 51 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார். 

சமி அஸ்லமின் விக்கெட்டினை அடுத்து, தில்ருவான் பெரேரா வீசிய அதே ஓவரில் புதியதுடுப்பாட்ட வீரராக மைதானம் விரைந்த அசார் அலியின் விக்கெட்டினை கைப்பற்றும்சந்தர்ப்பம் ஒன்றும் LBW முறையில் இலங்கைக்கு கிட்டியது. எனினும், மூன்றாம் நடுவர்அது ஆட்டமிழப்பில்லை என தீர்ப்பு வழங்க பாகிஸ்தானுக்கு அதிஷ்டம்கைகொடுத்தது.

எனினும் முதலாம் விக்கெட்டினை அடுத்து சில நிமிடங்களில் போட்டியின் மதியபோசண இடைவேளைக்கு முன்பாக இலங்கையின் முன்னணி சுழல் வீரர் ரங்கனஹேரத்தினால் பாகிஸ்தானின் இரண்டாம் விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது. இம்முறை,அரைச் சதம் கடந்து சிறப்பான ஆட்டத்தினை காட்டியிருந்த மற்றைய ஆரம்ப வீரர்ஷான் மசூத் போல்ட் செய்யப்பட்டு 6 பெளண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களுடன்மைதானத்தினை விட்டு வெளியேறினார்.மதிய போசண இடைவேளையினை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் புதிய வீரர்களான அசார் அலி மற்றும் அசாத் சபீக் ஆகியோர் மந்த கதியிலாக ஓட்டங்கள் சேர்த்து போதும்தமது அணியினை மெதுவாக கட்டியெழுப்பினர். மூன்றாம் நாளின் தேநீர்இடைவேளை வரை இலங்கை வீரர்களால் பாகிஸ்தானின் மேலதிக விக்கெட்டுக்கள்எதனையும் கைப்பற்ற முடியாது போயிருந்தது.

இன்று 32 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பாகிஸ்தானின் அனுபவமிக்க துடுப்பாட்டவீரர் அசார் அலி தனது 5,000 ஆவது டெஸ்ட் ஓட்டத்தினை கடந்திருந்தமைகுறிப்பிடத்தக்கது. 

தேநீர் இடைவேளையினை அடுத்து புதிய பந்தின் மூலம் பாகிஸ்தானின் மூன்றாம்விக்கெட்டினை ரங்கன ஹேரத் கைப்பற்றியிருந்தார். இதனால் மூன்றாம்விக்கெட்டுக்காக 79 ஓட்டங்களினை பகிர உதவிய அசாத் சபீக் 39 ஓட்டங்களுடன்இலங்கை வீரர் லஹிரு திரிமான்ன எடுத்த பிடியெடுப்பு மூலம் ஆட்டமிழந்தார்.

எனினும், அசார் அலியின் 26 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தோடும், புதிய துடுப்பாட்டவீரர் பாபர் அசாமின் ஓட்ட உதவியோடும் பாகிஸ்தான் அணி 250 ஓட்டங்களினைநெருங்கி வலுவடைந்தது.

71 ஓட்ட இணைப்பாட்டத்துடன் பாகிஸ்தானின் நான்காம் விக்கெட் பறிபோகபோட்டியின மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

பாகிஸ்தானின் நான்காம் விக்கெட்டாக நுவான் பிரதீப்பினால் வீழ்த்தப்பட்ட பாபர்அசாம் நல்லதொரு ஆரம்பத்தினை காட்டியிருந்த போதிலும் அதனை நீண்டஇன்னிங்சாக மாற்றத்தவறி 28 ஓட்டங்களுடன் வெளியேறியிருந்தார்.

போட்டியின் மூன்றாம் நாள் நிறைவின் போது பாகிஸ்தான் அணி தமது முதல்இன்னிங்சுக்காக 112.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களைப்பெற்று இலங்கை அணியினை விட 153 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில்காணப்படுகின்றது. அசார் அலி 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்கின்றார். 

இலங்கை அணி சார்பான இன்றைய பந்து வீச்சில் பாகிஸ்தானை கட்டுப்படுத்தும் படிசெயற்பட்ட ரங்கன ஹேரத் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.


போட்டியின் சுருக்கம்

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 419 (154.5) தினேஷ் சந்திமால் 155(372)*, திமுத் கருணாரத்ன 93 (205), நிரோஷன் திக்வெல்ல 83(117), யாசிர் சாஹ் 120/3 (57), மொஹமட் அப்பாஸ் 75/3 (26.5), ஹசன் அலி 88/2 (27)

பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ் ) – 266/4 (112.4) அசார் அலி 74(200)*, ஷான் மசூத் 59(148), சமிஅஸ்லம் 51(130), ரங்கன ஹேரத் 47/2 (25)
போட்டியின் நான்காம் நாள் தொடரும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.