உலக பதினொருவர் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சுதந்திர கிண்ண T20 போட்டி தொடரின் 3 வது போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது.
பலத்த காத்திருப்புக்கும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த சுதந்திரக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரை பாகிஸ்தான் 2-1 என்று கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணித்தலைவர் சப்பிரஸ் அஹமெட் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி,நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது.
அஹமெட் ஷேஷாத் 89 ஓட்டங்களையும், பாபர் அசாம் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்,
உலக பதினொருவர் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு 184 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணியின் சிறந்த பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்காத உலக பதினொருவர் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
போட்டியின் நாயகனாக அஹமெட் ஷேஷாத்தும் ,தொடர் நாயகனாக பாபர் அசாமும் தேர்வாகினர்.


Post a Comment