இலங்கை டெஸ்ட் போட்டி வரலாற்றில் முதல் பகலிரவு போட்டி இன்று ஆரம்பமாகிறது.





இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று டுபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை டெஸ்ட் போட்டி வரலாற்றில் இலங்கை அணி மோதும் முதல் பகலிரவுப் போட்டியாக இது நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாகச் செய்பட்ட இலங்கை அணி கடைசி நேரத்தில் 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றதால் அவ்வணி இன்றைய போட்டியில் உறுதியான மனநிலையுடனேயே களமிறங்கும்.

அப்போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதிக்கொ்ணடாலும் இறுதி நாளில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறியதால் இரு அணிகளினதும் சுழற் பந்து வீச்சாளர்கள் திறமையாக பந்து வீசியிருந்தனர்.

என்றாலும் இறுதி நேரத்தில் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஒருவர் கூட நிலைத்து நின்று ஆடாததால் அவ்வணி எதிர்பாராத தோல்வியைத் தழுவியது.

இப்போட்டயில் இரண்டாவது இனிங்ஸில் இரு அணிகளினதும் துடுப்பாட்டம் மோசமாக இருந்தது. என்றாலும் இன்று ஆரம்பமாகும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி அக்குறையை நிவர்த்தி செய்து நிலைத்து நின்று ஆடி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சம நிலையில் முடித்துக் கொள்ள முயற்சிக்கும்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி பலகிரவுப் போட்டியாக நடைபெறுவதால் பாகிஸ்தான் அணிக்கு சற்று அணுகூலமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே பாகிஸ்தான் அணி இம்மைதானத்தில் பலலிரவுப் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் அவ்வணிக்கு உண்டு கடைசியாக மேற்கிந்திய தீவுகளின் சுற்றுப் பயணத்தின் போது இம்மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் அவ்வணி ஏற்கனவே பல பலகலிரவுப் போட்டிகளில் விளையாடியுள்ளது.

ஆனால் தனது முதல் பகலிரவு போட்டியில் விளையாடும் இலங்கை அணி வீரர்களுக்கு இது முதல் அனுபவம். எனவே அவர்களுக்கு இந்த டெஸ்ட் தடுமாற்றமாகவே இருக்கும்.

இரவு நேரங்களில் விழும் பணிகளுக்கு மத்தியல் இளம் சிவப்புப் பந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு சற்று சிரமத்தைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும்.

பாகிஸ்தான் அணியில் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இலங்கை துடுப்பாட்ட வீரர்களான தலைவர் சந்திமால், குசல் மெண்டிஸ், டிக்வெல்ல ஆகியோர் நிலைத்து நின்று ஆட முயற்சிக்க வேண்டும். இப்போட்டியில் அநேகமாக இவ்வகைப் பந்துகளில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாவே அமையும் என்பது முன்னைய பெறுபேறுகளில் காணக் கூடியதாகவிருக்கின்றது.. அதனால்தான் கடந்த வாரம் இவ்வகைப் பந்துகளில் இலங்கை வீரர்களுக்கு வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க பயிற்சி அளித்திருந்தார்.

எந்த மைதானத்திலும் இலங்கை சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் சிறப்பாகப் பந்து வீசுவதால் பாகிஸ்தான் துடுப்பாட்டவீரர்களுக்கு அவர் இப்போட்டியலும் சிம்மசொப்பணமாக இருப்பார். முதல் போட்டியில் வெற்றி பெறறு சிறந்த மனநிலையில் இருக்கும் இலங்கை அணி இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றவே முயற்சிக்கும். என்றாலும் எதிர்வு கூற முடியாத பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் திடீரென எழுச்சி கொள்ளக் கூடிய பாகிஸ்தான் அணியிடம் முதல் போட்டியில் வென்றுள்ளோமே என்ற மெத்தனப் போக்கில் விளையாடாடல் கனவமானவே இலங்கை அணி விளையாட வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.