மட்டக்களப்பு ஏறாவூர், ஹிதாயத்நகரில் உடலில் தீப்பற்றிய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இளம் குடும்பப் பெண்ணொருவர் உடலில் தீப்பிடித்துக் கொண்டதன் காரணமாக படுகாயமடைந்து நிலையில் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று பிள்ளைகளின் தாயான மீராஸாஹிபு அனித்தா என்ற 23 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
தீப்பற்றிக் கொண்டதை அடுத்து கவலைக்கிடமான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


Post a Comment