உலகத்தையே நடுங்க வைத்த அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பார்த்த வீடியோ ஆவணங்களை அமெரிக்க வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி, அமெரிக்க கமாண்டோ படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலின்போது ஒசாமா பயன்படுத்திய பல ஆவணங்களை அமெரிக்க படையினர் கைப்பற்றினர். அந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.
ஒசாமாவின் மகன் ஹம்ஸா பின்லேடன் திருமண வீடியோ மற்றும், ஒசாமா பயன்படுத்திய கணினியில் ஹாலிவுட் மற்றும் கார்டூன் படங்கள் இருந்துள்ளது.
இதனை ஒசாமா தினந்தோறும் பார்த்து வந்துள்ளார். அதிலும் உலக அளவில் பிரபலமான கார்ட்டூன் நிகழ்ச்சியான, டாம், ஜெர்ரியின் வீடியோக்கள் பல இருந்துள்ளன.
மொத்த கார்ட்டூன் நிகழ்ச்சியில் அத்தியாயங்கள் 160 ஆகும். இதில் 130 அத்தியாயங்கள் பின்லேடனிடம் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Post a Comment