எல்லாத்துக்கும் காரணம் இவங்க தான்..மவுனம் கலைத்தார் சேவாக்
ந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவி கிடைக்காதது குறித்து முன்னாள் வீரர் சேவக் முதல் முறையாக விளக்கமளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தவர் கும்ளே கேப்டன் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து நடைபெற்ற புதிய பயிற்சியாளருக்கான பதவிக்காக இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இதில் சேவாக் தான் புதிய பயிற்சியாளராக வர வேண்டும் ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில், சேவாக்கிற்கு பிறகு இறுதி கட்டத்தில் விண்ணப்பித்த ரவி சாஸ்திரியை புதிய பயிற்சியாளராக பி.சி.சி.ஐ., தேர்ந்தெடுத்தது.
இது தொடர்பாக தொடர்ந்து மவுனம் காத்து வந்த சேவாக் தற்போது முதல் முறையாக தனக்கு பயிற்சியாளர் பதவி கிடைக்காமல் போனது குறித்து பேசியுள்ளார்.
அதில், “பிசிசிஐ உடன் நெருக்காமாக இல்லாததே நான் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படாததற்கான முதல் காரணம். சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது நான் இங்கிலாந்தில் இருந்த சமயத்தில் ரவி சாஸ்திரியிடம் கேட்டேன். அதற்கு நான் ஏற்கனவே ஒருமுறை தவறு செய்து விட்டேன். மீண்டும் அதை செய்ய விரும்பவில்லை என தெரிவித்தார்.
எனக்கு பயிற்சியாளராக வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் தான் இருந்தேன். பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி மற்றும் எம்.பி. ஸ்ரீதர் என்னிடம் வந்து தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து யோசியுங்கள் என கூறிய பின்னரே நான் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன்.” என தெரிவித்துள்ளார்.
ரவி சாஸ்திரி மீண்டும் தவறு செய்ய விரும்பவில்லை என தெரிவித்த நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி என்பதை தான் சேவாக் இப்படி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.


Post a Comment