ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கியதன் மூலம் முதலிடத்தை பிடித்தது இந்தியா !!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை எட்டி பிடித்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி, 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
சென்னையில் நடந்த முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டி 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
முதல் இடத்தில் இருந்த தென்னாப்ரிக்காவை பின்னுக்கு தள்ளி 125 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தி உள்ளது. ஏற்கனவே, டெஸ்ட் தரவரிசையிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment