கின்னஸ் சாதனை முயற்சியில் சர்ச்சையில் சிக்கிய மணப்பெண் பேசுகிறார்



கின்னஸ் சாதனைக்காகவே நீளமாக முந்தானையுடன் திருமண சேலையை அணிந்ததாகவும் பாடசாலை மாணவிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கம் இருக்கவில்லை எனவும் கின்னஸ் மணப்பெண் சஜினி சுரவீர தெரிவித்துள்ளார்.

கண்டி, கன்னொருவ பிரதேசத்தில் கின்னஸ் சாதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் மணப்பெண் கருத்து தெரிவிக்கையில்,

திருமண நாளில் பாடசாலை சீருடை அணிந்த பிள்ளைகள் முந்தானையை பிடித்துக்கொண்ருந்தமையை தான் பெரிய தவறாக எண்ணியிருக்கவில்லை.

நாட்டிற்கு புகழை ஏற்படுத்தும் நோக்கிலும், கின்னஸ் சாதனை படைக்கவும், பாடசாலை மாணவிகளை பயன்படுத்தியது தவறு என சமூக வலைத்தளங்களுக்கு தெரிந்தாலும், அங்கு எந்த பிள்ளைகளையும் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் எதுவும் நடக்கவில்லை.

எனக்கு அலங்காரம் செய்த அழகு கலை நிபுணரும், சேலையை அணிவித்த ஆடை அலங்கார கலைஞருமே திருமண நிகழ்வில் பாடசாலை மாணவிகளை சம்பந்தப்படுத்தினர்.

மேலும், பிள்ளைகளுக்கு தேவையான உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன. வெயிலில் வைத்து அவர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கவில்லை.

சமூக வலைத்தளங்கள் இதனை தேவையற்ற வகையில் காட்டியுள்ளன என கின்னஸ் மணப்பெண் சஜினி சுரவீர குறிப்பிட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.