கிழக்கின் கைத்தொழிற்துறையை கட்டியெழுப்ப அம்பாறையில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி



கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டிலான கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி இம்முறை அம்பாறையில் இடம்பெறவுள்ளது,


மலரும் கிழக்கு எனும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ள இந்தக் கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி அம்பாறையில் இடம்பெறவுள்ளது,


இந்த கைத்தொழில் வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் 10,11 மற்றும் 12 ஆகிய மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது,

இதற்கு முன்னர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது,



கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமரின் 2025 ஆம் ஆண்டுக்கான அடைவு இலக்கினை அடைவதற்கான பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கும் விதத்தில் இந்தக் கண்காட்சியின் உள்ளடக்கங்கள் அமையப் பெற்றுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.




கிழக்கு மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பினை அதிகரித்தல் வர்த்தக மற்றும் கைத்தொழில் கண்காட்சியின் பிரதான நோக்காக அமைந்துள்ளதாக கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்



உற்பத்திப் பொருட்களை மாகாண மட்டம் ,தேசிய மட்டம் மற்றும் சர்வதேச மட்டத்தில் சந்தை வாய்ப்பினை வழங்குவது இந்த கண்காட்சியின் நோக்காகும் என அவர் கூறினார்

இதனூடாக கிழக்கு மாகாணத்தின் பிரதான உற்பத்திப் பொருட்களுக்கு சிறந்த சந்தைப் பெறுமதியொன்றை ஏற்படுத்த எதிர்ப்பார்க்கப்படுகின்றது,

.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.