சிரித்த முகத்துடனும், சீதேவி வாசத்துடனும் பணிபுரிந்த குணசுந்தரி அக்கா 60ல் ஓய்வு பெற்றார்.


-அவர் வாழ்வு சிறக்க ஆசிரியர்களும், ஆசிரிய சங்கங்களும் பாராட்டு-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கடந்த பல ஆண்டுகளாக கல்முனைக் கல்வி வலயக் காரியாலயத்தில் சிரித்த முகத்துடனும், குளிர்ந்த குணத்துடனும் நிருவாக உதவியாளராகப் பணிபுரிந்து, அதிபர், ஆசிரியர் மனங்களில் நிறைந்துள்ள திருமதி.குணசுந்தரி பரம்சோதி அக்கா அவர்கள் (06.09.2017)ல் தனது 60வது வயதில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.


துறைநீலாமனையில் 1957.09.07ல் பிறந்த திருமதி.குணசுந்தரி பரம்சோதி அக்கா கல்முனையை வசிப்பிடமாகக் கொண்டதோடு, தனது (23 வது வயதில்) 1980ல் அம்பாரை வலயக் கல்விக் காரியாலயத்தில் முகாமைத்துவ உதவியாளராக நியமனம் பெற்று பணியாற்றினார். பின்னர் 1983ல் கல்முனைக் கல்வி வலயக் காரியாலயத்திலும், அதனைத் தொடர்ந்து 1989ல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நிதி உதவியாளராகவும், 2015ல் மீண்டும் கல்முனை வலயக் கல்வி;க் காரியாலயத்தில் நிருவாக உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார். 
தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள காரியாலயத்திற்கு வரும் அதிபர், ஆசிரியர்களை இன்முகத்துடன் வரவேற்று, அவர்களது தேவைகளை உடன் நிறைவேற்றி உதவி புரியும் ஏ.ஓ திருமதி.குணசுந்தரி பரம்சோதி அக்காவின் ஓய்வானது அதிபர், ஆசிரியர்களுக்குப் பேரிழப்பாகும் என ஆசிரியர் சங்கங்கள் கவலை தெரிவிக்கின்றன.


எல்லோராலும் 'அக்கா' என்று அன்பாக அழைக்கப்படும் திருமதி.குணசுந்தரி பரம்சோதி அக்கா அவர்கள் கல்முனை வலய கல்வி அலுவலகத்தில் இனமத பேதமின்றி, எவர் மனதையும் புண்படுத்தா விதமாக செயற்படும் மிக அரிதான உத்தியோகத்தர்களுள் முதன்மையானவர் என்றால் அது மிகையாகாது. இவருடைய பெயருக்கேற்றாற்போல் ஏ.ஓ திருமதி.குணசுந்தரி பரம்சோதி அக்கா ஒரு குணசுந்தரியாகவே செயற்பட்டுள்ளார் என்பதற்கு ஆசிரியர் சமூகம் சான்றாக உள்ளது.


காரியாலயத்திலுள்ள சாதாரண இலிகிதர்களால் பல மாதங்களாக ஏன் வருடங்களாக ஏமாற்றப்பட்டு வந்த பல ஆசிரியர்களின் விடயங்களை மிக அன்பாக அணுகி. அவர்களின் விடயங்களைத் தனது சொந்த வேலையாகக் கருதி, அவற்றை முடித்து விட்டுத் தனது சொந்த கைத்தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு '.........நீங்களா?... உங்கட பிரச்சினையை முடித்து விட்டோம்...வந்து பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கட ஊரவரான இன்னாரிடம் கொடுத்து அனுப்புகிறோம். பெற்றுக் கொள்ள முடியுமா? நீங்களும் சற்று பொறுமையாக இருந்திருக்க வேண்டும் சேர்.' என மிக சாந்தமான குரலில் சிரித்த தொனியில் சொல்வார். இந்த அக்காவைப் போன்ற நல்லுள்ளம் கொண்டவர்களால் மேலதிகாரிகளுக்கும், அங்கு பணியாற்றிவரும் இலிகிதர்களுக்கும் ஏற்பட இருந்த பல பிரச்சினைகள் இலகுவாகத் தீர்ந்துள்ளதாக அறிய முடிகிறது.


பாடசாலைச் செயற்பாடுகளையும், அதிபர், ஆசிரியர்களின் தேவைகளையும் விரைவாகச் செய்து முடித்ததில் அதிக அக்கரை கொண்டு உழைத்த திருமதி.குணசுந்தரி பரம்சோதி அக்கா அவர்களது வாழ்வு பிரகாசமாக அமையவும், சகல சௌபாக்கியங்களும் நிறையப் பெற்று, சீரோடும் சிறப்போடும் நீடூழி வாழ்கவென வாழ்த்துவதோடு, தமது மனமார்ந்த நன்றிகளையும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கமும், இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கமும்; தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வுறுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.