வவுனியாவில் இளம் குடும்பஸ்தரிற்கு நடந்த பயங்கரம்! பார்த்தால் திகைத்திடுவீர்கள்.


வவுனியா பாலமோட்டைப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் கொத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் வவுனியா, பாலமோட்டை, கிழவிகுளம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 36 வயதுடைய பாலையா சுதாகரன் என்பவரே மரணமடைந்தவராவார்.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கோடரியால் கொத்தி கொலை!

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

வவுனியா, பாலமோட்டை, கிழவிகுளம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றின் கணவன், மனைவிக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலையில் இவர்களது விவாகரத்து வழக்கு வவுனியா நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

குறித்த குடும்பத்தில் கணவனான சுதாகரன் இரு பிள்ளைகளுடன் தனது வீட்டிலும் அந்த வீட்டின் அருகே உள்ள அடுத்த வீட்டில் மனைவி தனது தாய், தந்தை மற்றும் தனது பிள்ளை ஒருவருடனும் வசித்து வருகின்றார்.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கோடரியால் கொத்தி கொலை!

நேற்று மதியம் அளவில் அருகருகே வசித்து வந்த இவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து மரணமடைந்த நபரான கணவனுக்கும், மனைவி மற்றும் மனைவியின் தந்தை, சகோதரர்களுக்கு இடையிலும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது கணவரான குறித்த நபரை மனைவியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து தாக்கி கோடரியால் கொத்தியும், கத்தியால் வெட்டியும் உள்ளனர்.

இதனால் சம்பவ இடத்திலேயே குறித்த குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா நீதிமன்ற பதில் நீதவான் தயாபரன் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஓமந்தைப் பொலிசாரைப் பணித்தார்.

விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஓமந்தைப் பொலிசார் இச்சம்பவம் தொடர்பில் மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் என நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.