இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங்கிற்கு இனி சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பது அரிது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டிக்கான 14 பேர் கொண்ட கிரிக்கட் சபைத் தலைவர் குழாமில் வாய்ப்பளிக்கப்படாததை தொடர்ந்தே ஊடகங்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
அத்தோடு இந்திய கிரிக்கட் அணியின் தேர்வாளர்கள் பட்டியலில் முதல் 74 பேரில் யுவராஜ் சிங்கின் பெயர் உள்ளடக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வாளர்கள் பட்டியலில் இடம்பெறும் முதல் 15 பேருமே சர்வதேச போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படுவதால் அவர் இடம்பெற வாய்ப்பு இல்லை என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment