மாத்தளை, லக்கல பிரதேசத்தில் உள்ள தெலுகம ஓயாவில் குளித்துகொண்டிருந்த சுமார் 10 பேர் நீரில் அடித்துச் செல்லபட்ட நிலையில் அவர்களை காணவில்லையென்றும், அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் மாத்தளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மக்கள் குளித்துக்கொண்டிருந்த வேளை திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் இந்த அசம்பாவிதம் இடம்பெற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் அவர்கள் வெளியூரில் இருந்து அங்கு சுற்றுலா வந்தவர்கள் என அறிய முடிகிறது.


Post a Comment