இலங்கை மந்திரத்தால் வெல்லவில்லை, எமது மோசமான துடுப்பாட்டமே காரணம்



இலங்கை கிரிக்கட் டெஸ்ட் அணித் தலைவர் தினேஸ் சந்திமால் வெளியிட்ட கருத்தொன்றை, பாகிஸ்தான் அணித் தலைவர் சஃப்ராஸ் அஹமட் மறுத்துள்ளார்.


பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மந்திரசக்தியாலேயே வெற்றிப் பெற்றதாக அண்மையில் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் கூறி இருந்தார்.


ஆனால் இந்த கருத்தை பாகிஸ்தான் அணித் தலைவர் சஃப்ராஸ் அஹமட் முற்றாக நிராகரித்துள்ளார்.


மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாகவே பாகிஸ்தான் அணி இந்த போட்டிகளில் தோல்வி அடைந்தது.


இலங்கை அணி மந்திரசக்தியால் டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்றிருந்தால், ஏனைய ஒருநாள் மற்றும் 20க்கு20 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று சஃப்ராஸ் தெரிவித்துள்ளார்.


இதேவேளை சஃப்ராஸின் இந்த கருத்தை பாகிஸ்தானிய முன்னாள் கிரிக்கட் வீரர் மொஹமட் யூசுப் ஆமோதித்துள்ளார்.


'கிரிக்கட்டையும் மந்திரங்களையும் இணைக்க வேண்டாம்' என்று அவர் கோரியுள்ளார்.

Jaffna Muslim
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.